விமான இன்ஜின் நேராக இல்லாமல் கீழ் நோக்கி இருக்கும் ஏன் தெரியுமா?
விமானங்களில் பயணிப்பவர்கள் எல்லாம் நிச்சயம் பல்வேறு விஷயங்களை ஆச்சரியமாக பார்த்திருப்பார்கள். தொடர்ந்து விமானங்களில் பயணிப்பவர்களுக்கு கூட அன்றாடம் பார்க்கும் விஷயத்திற்கு பின்னால் இவ்வளவு பெரிய அறிவியல் இருக்கிறது என்ற விவரம் தெரியாமல் இருக்கும். இப்படியான ஒரு விஷயத்தை தான் நாங்கள் இன்று உங்களுக்கு சொல்ல போகிறோம். இதைப் பற்றிய விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
விமானங்களில் நம்மில் பலர் பயணத்திற்கும் பலருக்கு விமானங்களில் பயணிக்க வேண்டும் என்று கனவு இருக்கும். சிலர் பயணிக்கும் கனவில் இருந்தாலும் சரி அவர்கள் எல்லாம் விமானத்தை ஒரு முறையாவது போட்டோவிலாவது பார்த்திருப்பார். இப்படி ஒவ்வொரு முறையும் விமானத்தை பார்க்கும் போதும் அவர்கள் பார்க்கும் ஒரு விஷயத்திற்கு பின்னால் உள்ள காரணத்தை தெரியாமல் இருந்திருப்பார்கள். இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா என்றே தெரியாமல் இருக்கிறது.

விமானத்தின் இன்ஜின்கள் எப்பொழுதும் விமானத்தின் இறக்கை பக்கம் இருக்கும். இது எல்லோருக்கும் அறிந்தது தான் ஆனால் இது நேராக இல்லாமல் சற்று சாய்வாக இருக்கும். இதை என்றாவது நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஆம் இது ஏதோ எடை தாங்காமல் சாய்ந்து இருக்கிறது என நீங்கள் கருத வேண்டாம். இதை வேண்டுமென்று இப்படியாக சாய்வாக வைத்திருக்கிறார்கள் இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் இருக்கிறது.
விமானங்களின் இன்ஜின்கள் எல்லாம் இறக்கையில் பொருத்தப்பட்டுள்ளதுக்கும் நிலையில் அது விமானங்கள் எப்படி தரையில் இருக்கும்போது நேராக நிற்கிறதோ அதே போல நேராக நிற்காது மாறாக இன்ஜினின் முன்பக்கம் சற்று கீழ்நோக்கியும் பின்பக்கம் சற்று மேல் நோக்கியும் இருக்கும். இதை நீங்கள் சற்று உற்று கவனித்தால் புரிந்து கொள்ள முடியும்.

இதை வேண்டுமென்றேதான் வைத்திருக்கிறார்கள். அதற்கு இரண்டு விதமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விமானம் ஓடு பாதையில் ஓடி அதன் மூக்குப்பகுதி மேலே தூக்கி மேல் நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும். அந்த தருணத்தில் விமானத்தின் இன்ஜின் நேராக இருந்தால் காற்று சைடு வழியாக ஏற்பட்டு சீரான காற்று இன்ஜின் டிரஸ்ட் உள்ளே செல்லாமல் சிக்கல் ஏற்படும்
இதனால் விமானத்தின் இன்ஜினை சற்று கீழ் நோக்கி டிகிரி மாற்றி வைப்பதன் மூலம் விமானத்தின் இன்ஜின் காற்றை சுலபமாக கடத்தி டிரஸ்ட்டை உருவாக்க முடியும். இதனால் எந்த பிரச்சினையும் இல்லாமல் விமானம் சுலபமாக டேக் ஆஃப் ஆகும். இது மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மற்றொரு முக்கியமான காரணமும் இதற்கு இருக்கிறது.

இதன்படி விமானம் தரையிறங்கும் போது ஒரு கட்டத்திற்கு மேல் ரன்வேயில் விமானம் வரும் போது அதன் மூக்குப்பகுதி சற்று மேல்நோக்கி இருக்கும். இதனால் விமானத்தின் பின்பக்கம் உள்ள வீல்கள் தான் முதலில் தரையில் படும். இந்த நேரத்தில் இன்ஜின் நேராக இருந்தால் இன்ஜின் பகுதியும் சற்று மேலே தூக்கி அது போல இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இதனால் பின்பக்கம் அதிகமாக காற்று வந்து விமானத்தின் பின்பகுதியில் பிரஷர் கூடும்.
பின்பக்கம் காற்று பிரஷர் அதிகமானால் பின்பக்கம் இருக்கும் பகுதி மேலே எழ வாய்ப்பு உள்ளது. இது விமானம் தர இயக்குதலை தாமதப்படுத்தும் அல்லது விபத்து ஏற்படுத்த வழி வகுத்து விடும் இதன் காரணமாக சற்று கீழ்நோக்கி இன்ஜினை வைத்திருந்தால் டேக் ஆஃப் ஆகும்போது சமநிலையில் இன்ஜின் இருப்பது போல இருக்கும். இதனால் பெரிய அளவு பிரஷர் விமானத்தின் பின்பகுதியில் மேலே தான் இருக்கும்.

இதனால் லேண்டிங் செய்வது சுலபமாக இருக்கும். இதன் காரணமாக தான் விமானத்தின் இன்ஜின்களை சற்று கீழ்நோக்கி இருக்கும்படி எப்பொழுதுமே வடிவமைத்து இருப்பார்கள். குறிப்பிட்டாக விமானம் என்று இல்லாமல் அனைத்து விமானங்களிலும் அதன் இன்ஜின்கள் இப்படியான வடிவமைப்பில் தான் இருக்கும். பலருக்கும் இந்த ரகசியம் தெரிவதில்லை. பலரும் அதிக எடை காரணமாக இப்படியாக சாய்ந்திருக்கலாம் என நினைக்கிறார்கள் ஆனால் அப்படி கிடையாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமான தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் பல்வேறு அறிவியல் ஆய்வுகளை செய்து தான் இப்படியான வடிவமைப்புகளை செய்து வருகின்றன. இதனால் ஒவ்வொரு சின்ன சின்ன வடிவமைப்பிலும் அறிவியல் ஆய்வுகள் இருக்கும். இப்படியான ஆய்வுகள் நமக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. விமானத்தின் எஞ்சின் சற்று கீழ்நோக்கி இருக்கும் என்பதை பலர் கவனித்து இருந்தாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்களுக்காக தெரிந்து கொள்ளத்தான் இந்த பதிவு.


Click it and Unblock the Notifications









