ஏரோஹ் எச்.20 தலைக்கவசம் அறிமுகம்... மிக மிக விலையுயர்ந்த ஹெல்மெட்... எவ்ளோ தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

மிக மிக விலையுயர்ந்த ஹெல்மெட் ஒன்று விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த ஹெல்மெட் குறித்த முக்கிய விபரங்களைக் கீழே காணலாம்.

ஏரோஹ் எச்.20 தலைக்கவசம் அறிமுகம்... மிக மிக விலையுயர்ந்த ஹெல்மெட்... எவ்ளோ தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

பிரீமியம் தர தலைக்கவச உற்பத்தி நிறுவனமான ஏரோஹ் (Airoh), புதுமுக ஹெல்மெட் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அறிமுகத்தின் வாயிலாக தனது அர்பன் ஹெல்மெட்டுகளின் வரம்பை நிறுவனம் விரிவுப்படுத்தியுள்ளது.

ஏரோஹ் எச்.20 தலைக்கவசம் அறிமுகம்... மிக மிக விலையுயர்ந்த ஹெல்மெட்... எவ்ளோ தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

அதாவது, நிறுவனம் விற்பனைச் செய்து வரும் அர்பன் ஜெட் செரீஸ் ரக ஹெல்மெட்டுகளின் வரிசையிலேயே இந்த புதுமுக தலைக்கவசத்தை அது அமர்த்தியிருக்கின்றது. இதற்கு ரூ. 20,433 என்ற விலையை நிர்ணயித்துள்ளது. இந்த உச்சபட்ச விலையிலேயே இந்த அரை முக ஹெல்மெட் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஏரோஹ் எச்.20 தலைக்கவசம் அறிமுகம்... மிக மிக விலையுயர்ந்த ஹெல்மெட்... எவ்ளோ தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

தற்போது சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹெல்மெட்டுகளிலேயே மிக எடைக்குறைந்த ஹெல்மெட்டாக எச்.20 தலைக்கவசத்தை உருவாக்கியிருப்பதாக நிறுவனம் குறிப்பிட்டிருக்கின்றது. அதேசமயம், அதிக பாதுகாப்பானது என்ற உத்தரவாதத்தையும் நிறுவனம் அளித்துள்ளது.

ஏரோஹ் எச்.20 தலைக்கவசம் அறிமுகம்... மிக மிக விலையுயர்ந்த ஹெல்மெட்... எவ்ளோ தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

1,270 கிலோகிராம் மற்றும் 1,370 கிலோகிராம் ஆகிய அதிகபட்ச எடையிலேயே எச்.20 ஹெல்மெட் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று விதமான வெளிப்புற கூடுகள் இந்த ஹெல்மெட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிக உறுதித் தன்மை மற்றும் பெர்பார்மன்ஸ் ஆகியவற்றை மனத்தில் கொண்டும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஏரோஹ் எச்.20 தலைக்கவசம் அறிமுகம்... மிக மிக விலையுயர்ந்த ஹெல்மெட்... எவ்ளோ தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

மேலும், ரைடர்களுக்கு அதிக சௌகரியமான அனுபவத்தை வழங்கும் வகையிலும் இந்த ஹெல்மெட்டை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. காற்று உள்ளே நுழைவதற்கான துளைகள் மற்றும் பின் பகுதியில் ஸ்பாய்லர் உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஏரோஹ் எச்.20 தலைக்கவசம் அறிமுகம்... மிக மிக விலையுயர்ந்த ஹெல்மெட்... எவ்ளோ தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

இத்துடன், இரு விதமான கண்ணாடிகள் ஹெல்மெட்டில் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒன்று சூரிய ஒளியில் இருந்து காக்கும் வகையிலும், மற்றொன்று வழக்கமான கண்ணாடியாகவும் செயல்படும். தேவைப்படாத நேரங்களில் சன் ஃபிலிம் கண்ணாடியை மடக்கிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஏரோஹ் எச்.20 தலைக்கவசம் அறிமுகம்... மிக மிக விலையுயர்ந்த ஹெல்மெட்... எவ்ளோ தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

இதற்கான பொத்தான் ஹெல்மெட்டின் பக்கவாட்டு பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இவ்விரு கண்ணாடிகளும் அதிக பார்வை திறனை வழங்கும் திறன் கொண்டவை. குறிப்பாக, இரவு நேரங்களில் பிற வாகனங்களில் இருந்து வெளிப்படும் அதிக ஒலி பிரச்னையில் இருந்து காக்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன.

ஏரோஹ் எச்.20 தலைக்கவசம் அறிமுகம்... மிக மிக விலையுயர்ந்த ஹெல்மெட்... எவ்ளோ தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

இத்துடன், கீறல் மற்றும் புற ஊதா கதிர் எதிர்ப்பு திறன் உள்ளிட்டவை இக்கண்ணாடியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற எக்கசக்க சிறப்பு வசதிகளை ஏரோஹ் எச்.20 ஹெல்மெட் பெற்றிருக்கின்றது. தொடர்ந்து பிற ஹெல்மெட்டுகளைப் போன்றில்லாமல் இதனை ராட்செட் தொழில்நுட்பத்தில் ஏரோஹ் உருவாக்கியிருக்கின்றது.

ஏரோஹ் எச்.20 தலைக்கவசம் அறிமுகம்... மிக மிக விலையுயர்ந்த ஹெல்மெட்... எவ்ளோ தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

இது உதாரணத்திற்காக மட்டுமே வழங்கப்பட்ட படம்.

இதுபோன்ற பல்வேறு சிறப்பு வசதிகளை இந்த ஹெல்மெட் பெற்றிருக்கின்ற காரணத்தினால்தான் இதற்கு ரூ. 20,433 என்ற உச்சபட்ச விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த ஹெல்மெட் தற்போது ஐரோப்பிய சந்தையில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இது விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Airoh Launches H.20 Urban Helmet In Europe. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X