ஏர்பிளேன் மோட் என்றால் என்ன? விமான பயணத்தின்போது இதை ஆக்டிவேட் செய்யலனா இவ்ளோ பிரச்னை ஏற்படுமா?

விமான பயணத்தின்போது ஏன் செல்போன்களை ஏர்பிளேன் மோடில் போடும்படி அறிவுறுத்துறாங்க என்பதற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஏர்பிளேன் மோட் என்றால் என்ன? விமான பயணத்தின்போது இதை ஆக்டிவேட் செய்யலனா இவ்ளோ பிரச்னை ஏற்படுமா?

ஏர்பிளேன் மோட், இதை எதற்காக செல்போன் நிறுவனங்கள் வழங்கினார்களோ அதற்காக நாம் அந்த வசதியை பயன்படுத்துகின்றோமோ, இல்லையோ, நெட்வொர்க் பிரச்னைக்காக அதிகளவில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். நம்மில் பலர் அது வழங்கப்பட்டதற்கான காரணம் என்னவென்றே தெரியாமல், நெட்வொர்க் டிராப்பைச் சரிசெய்ய பயன்படுத்தி வருகின்றோம்.

ஏர்பிளேன் மோட் என்றால் என்ன? விமான பயணத்தின்போது இதை ஆக்டிவேட் செய்யலனா இவ்ளோ பிரச்னை ஏற்படுமா?

கொஞ்சம் நெட் ஸ்லோவாகிவிட்டால் போதும் ஏர்பிளேன் மோடை போட்டு பாடாய் படுத்திவிடுவோம். ஆனால், உண்மையில் இதற்காகதான் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளதா என கேட்டால் இல்லை என்பதே பதிலாகும். இந்த அம்சம் விமான பயணங்களுக்காக வழங்கப்பட்ட பிரத்யேக அம்சம் ஆகும்.

ஏர்பிளேன் மோட் என்றால் என்ன? விமான பயணத்தின்போது இதை ஆக்டிவேட் செய்யலனா இவ்ளோ பிரச்னை ஏற்படுமா?

ஒரு வேலை நீங்கள் ஏரோபிளேனில் இதற்கு முன்னதாக பயணித்திருப்பீர்கள் எனில் நிச்சயம் இதுகுறித்து நீங்கள் அறிந்திருக்கும் வாய்ப்பு உண்டு. ஏனெனில் விமான பணி பெண்கள் விமான பயணத்தின்போது பயணிகளுக்கு கூறும் பல அறிவுரைகளில் செல்போனை ஏர்பிளேன் மோடில் போடும்படி கூறுவதும் ஒன்றாகும். இதை அறிந்தவர்கள் தாமாகவே தங்களின் செல்போனை ஃபிளைட் மோடில் போட்டுவிடுவார்கள்.

ஏர்பிளேன் மோட் என்றால் என்ன? விமான பயணத்தின்போது இதை ஆக்டிவேட் செய்யலனா இவ்ளோ பிரச்னை ஏற்படுமா?

சிலர், இதை ஏன் விமான பணி பெண்கள் செய்யச் சொல்லுகிறார்கள் என்பதுகூட தெரியாமல் தங்களுடைய செல்போனை ஃபிளைட் மோடில் போட்டுவிடுவார்கள். இவர்களுக்காக இந்த விஷயத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் ரகசியத்தை இப்பதிவில் தெளிவுப்படுத்தியுள்ளோம். அதாவது, விமான பயணிகள் தங்களின் பயணங்களின்போது ஏன் செல்போன்களை ஃபிளைட் மோடில் போட நிர்பந்திப்படுகின்றார்கள் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஏர்பிளேன் மோட் என்றால் என்ன? விமான பயணத்தின்போது இதை ஆக்டிவேட் செய்யலனா இவ்ளோ பிரச்னை ஏற்படுமா?

ஏர்பிளேன் மோட் என்றால் என்ன?

ஏர்பிளேன் மோட் அல்லது ஃபிளைட் மோட் இவ்வாறான இரு பெயர்களில் அது அழைக்கப்படுகின்றது. இந்த மோடை ஆக்டிவேட் செய்வதனால் தற்காலிகமாக நம்முடைய செல்போனை செயலிழக்கும். அதாவது, நெட்வொர்க் (தொடர்பு) எல்லைக்கு அப்பால் அது போய்விடும். இதன் வாயிலாக சிக்னல் முழுமையாக துண்டிப்படுகின்றது. ஆகையால், அழைப்பு, மெசேஜ் என எதுவும் செல்போனுக்கு ரிசீவ் ஆகாது.

ஏர்பிளேன் மோட் என்றால் என்ன? விமான பயணத்தின்போது இதை ஆக்டிவேட் செய்யலனா இவ்ளோ பிரச்னை ஏற்படுமா?

அதேவேலையில், சில செல்போன்களில் ஃபிளைட் மோடின்போது Wi-Fi-ஐ இணைத்து செல்போனை பயன்படுத்தும் வசதியை வழங்கப்படுகின்றது. ஆனால், அனைத்து விமானங்களிலும் Wi-Fi வசதி வழங்கப்படுவதில்லை என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏர்பிளேன் மோட் என்றால் என்ன? விமான பயணத்தின்போது இதை ஆக்டிவேட் செய்யலனா இவ்ளோ பிரச்னை ஏற்படுமா?

ஏர்பிளேன் மோடின் அவசியம் என்ன?

விமானத்தின் இயக்கத்தில் முக்கிய பங்களிப்பை ரேடியோ அலைவரிசைகள் வழங்குகின்றன. இவற்றை ஆதயமாகக் கொண்டு வானில் விமானங்கள் பறக்கின்றன. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் திசை, பிற விமானங்களின் இருப்பைக் கண்டறிதல் உள்ளிட்ட பலவற்றை ரேடியோ அலைவரிசைகள் வாயிலாக விமானிகள் கண்டறிகின்றது.

ஏர்பிளேன் மோட் என்றால் என்ன? விமான பயணத்தின்போது இதை ஆக்டிவேட் செய்யலனா இவ்ளோ பிரச்னை ஏற்படுமா?

செல்போன்களும்கூட இதே ரேடியோ அலைவரிசையைக் கொண்டே இயங்குகின்றன. செல்போன் ஆன் செய்யப்பட்டிருக்குமானால் அதற்கான சிக்னல்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருக்கும். இது, விமானத்திற்கு கிடைக்கும் சிக்னலை சீர்குலைத்தல் அல்லது குழப்பமடையச் செய்ய வைக்கும். இத்தகைய சூழலை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே செல்போன் மற்றும் டேப் போன்றவற்றை விமான பயணங்களின்போது ஃபிளைட் மோடில் போடும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஏர்பிளேன் மோட் என்றால் என்ன? விமான பயணத்தின்போது இதை ஆக்டிவேட் செய்யலனா இவ்ளோ பிரச்னை ஏற்படுமா?

ஒரு வேலை செல்போனில் ஃபிளைட் மோட் ஆக்டிவேட் செய்யப்படவில்லை என்றால் என்ன ஆகும்?

உங்கள் செல்போனை ஃபிளைட் மோடில் போட தவறவிட்டாலோ அல்லது வேண்டும் என்றே ஃபிளைட் மோடில் போடாமல் இருந்தாலோ பெரிய பிரச்னையை ஏற்படுத்துவதற்கு நீங்கள் காரணமாகிக் கொண்டிருக்கின்றீர்கள் என அர்த்தமாகும். விமானிகள் தரைக்கும், விமானத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளியை ரேடியோ அல்டிமீட்டர்களைப் பயன்படுத்தியே கண்டறிகின்றார்கள்.

ஏர்பிளேன் மோட் என்றால் என்ன? விமான பயணத்தின்போது இதை ஆக்டிவேட் செய்யலனா இவ்ளோ பிரச்னை ஏற்படுமா?

மூடுபனி அல்லது மோசமான வானிலையின்போது துள்ளியமாக ஓடுதளத்தை அவர்களால் கண்டறிய முடியாது. இந்த மாதிரியான நேரங்களில் ரேடியோ அல்டிமீட்டரே மிக சரியாக விமானத்தைத் தரையிறக்க உதவியாக இருக்கும். மிக தெளிவாக கூற வேண்டுமானால் இந்த மாதிரியான நேரங்களில் விமானிகள் ஆட்டோ லேண்டிங் மோடை பயன்படுத்துவர்.

ஏர்பிளேன் மோட் என்றால் என்ன? விமான பயணத்தின்போது இதை ஆக்டிவேட் செய்யலனா இவ்ளோ பிரச்னை ஏற்படுமா?

இந்த மோட் விமானியின் உதவியின்றி தானாகவே விமானத்தைத் தரையிறக்க உதவும். இன்னும் விபரமாக கூற வேண்டும் எனில் ரேடியோ அல்டிமீட்டர் வாயிலாக விமானம், தானாகவே தரைக்கும் அதற்கும் இடையே உள்ள இடைவெளியைக் கண்டறிந்து தரையிறங்கும். இந்த மாதிரியான சூழலில் உங்கள் செல்போன் ஆன் செய்யப்பட்டிருக்கும் என்றால், அது விமானத்திற்கு கிடைக்கும் சிக்னலை சீர்குலைக்க செய்யும்.

ஏர்பிளேன் மோட் என்றால் என்ன? விமான பயணத்தின்போது இதை ஆக்டிவேட் செய்யலனா இவ்ளோ பிரச்னை ஏற்படுமா?

ஆகையால், ஆட்டோமேட்டிக் லேண்டிங்கின்போது விமானம் குழப்பமடைய நேரிடலாம். இது பெருத்த ஆபத்தை ஏற்படுத்த வைக்கும். இதனால்தான் கட்டாயமாக விமானங்களில் பயணிப்போர் தங்களுடைய செல்போனை ஃபிளைட் மோடில் போட வேண்டும் என வற்புறுத்தப்படுகின்றனர்.

ஏர்பிளேன் மோட் என்றால் என்ன? விமான பயணத்தின்போது இதை ஆக்டிவேட் செய்யலனா இவ்ளோ பிரச்னை ஏற்படுமா?

விமானத்தில் Wi-Fi

தற்போது பெரும்பாலான விமான நிறுவனங்கள் தங்களின் விமானங்களில் Wi-Fi வசதியை வழங்க ஆரம்பித்திருக்கின்றன. பல விமான நிறுவனங்கள் கட்டணத்தின் அடிப்படையிலேயே இந்த சேவையை வழங்கத் தொடங்கியிருக்கின்றது. இதன் வாயிலாக விமான பயணியால் அவரின் முழு நேர பயணத்தின்போது அவருடைய குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்தவாறு இருக்க முடியும்.

ஏர்பிளேன் மோட் என்றால் என்ன? விமான பயணத்தின்போது இதை ஆக்டிவேட் செய்யலனா இவ்ளோ பிரச்னை ஏற்படுமா?

Wi-Fi ரிசீவர்கள் செல்போன் டவர்களுடன் இணைக்கப்படுவதில்லை. அவை நேரடியாக செயற்கைக்கோளுடன் இணைக்கப்படுகின்றன. ஆகையால், விமானத்திற்கு கிடைக்கும் சிக்னலை எந்தவகையிலும் இது பாதிக்காது. அதேவேலையில், இந்த Wi-Fi சேவை வாயிலாக ஸ்கைப், வாட்ஸ்-ஆப் மற்றும் ஃபேஸ்டைம் போன்றவற்றில் லைவ் கால் செய்ய முடியாது. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏர்பிளேன் மோட் என்றால் என்ன? விமான பயணத்தின்போது இதை ஆக்டிவேட் செய்யலனா இவ்ளோ பிரச்னை ஏற்படுமா?

பேட்டரி பவரை சேமிக்க ஃபிளைட் மோட் உதவும்:

ஃபிளைட் மோடில் செல்போனை போடுவதனால் பேட்டரி பவர் பெருமளவில் சிக்கனம் செய்யப்படும். செல்போனுக்கு சிக்னல்கள் வந்து செல்வதனால் பெருமளவில் பேட்டரி பவர் செலவாகின்றது. இந்த செயலை ஏர்பிளேன் மோட் தவிர்க்கின்றது. ஆகையால், செல்போனில் ஃபிளைட் மோடை ஆக்டிவேட் செய்வதனால் கணிசமான அளவு பேட்டரியின் லைஃபை கூட்ட முடியும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 26, 2022, 19:40 [IST]
English summary
Airplane mode and its importants
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+