விமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...

விமானங்கள் மற்றும் விமான பயணங்கள் தொடர்பாக பல்வேறு கட்டுக்கதைகள் உலா வருகின்றன. அவை உண்மையா? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...

விமானங்களும், விமான பயணங்களும் மிகவும் ஆச்சரியம் நிறைந்தவை. ஒரு விஷயம் நமக்கு ஆச்சரியம் அளிக்கிறது என்றால், அதை சுற்றி பல கட்டுக்கதைகள் உலா வருவது இயல்புதான். அந்த வகையில் விமானங்கள் மற்றும் விமான பயணங்கள் பற்றியும் ஏராளமான கட்டுக்கதைகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

விமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...

முதல் முறையாக விமானங்களில் பயணம் செய்ய உள்ளவர்கள் மட்டுமல்லாது, பல முறை விமானங்களில் பயணம் செய்தவர்களும் கூட இந்த கட்டுக்கதைகளை நம்புவதுதான் வேதனை. எனவே உங்களுக்கு பயன் அளிக்கும் விதமாக, விமானங்கள் மற்றும் விமான பயணங்கள் தொடர்பாக உலா வரும் கட்டுக்கதைகள் பற்றியும், உண்மை தன்மை குறித்தும் அலசி ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு.

விமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...

கட்டுக்கதை: விமானம் டேக் ஆஃப் ஆகும்போதும், லேண்டிங் ஆகும்போதும் செல்போன் அல்லது வேறு ஏதேனும் எலெக்ட்ரானிக் டிவைஸை பயன்படுத்தினால் ஆபத்து.

உண்மை: விமானம் டேக் ஆஃப் ஆகும்போதும், லேண்டிங் ஆகும்போது செல்போன் அல்லது வேறு ஏதேனும் கையடக்க எலெக்ட்ரானிக் டிவைஸை ஸ்விட்ச் ஆஃப் செய்யும்படியோ அல்லது ஏர்பிளேன் மோடில் போடும்படியோ வலியுறுத்தப்படும்.

விமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...

ஆனால் இதன் காரணமாக விமானத்திற்கு ஆபத்து என புரிந்து கொள்ள வேண்டாம். உண்மையில் விமானம் டேக் ஆஃப் ஆகும்போதும், லேண்டிங் ஆகும்போதும் விமான ஊழியர்களால் பாதுகாப்பு தொடர்பாக ஒரு சில இன்ஸ்ட்ரக்ஸன்கள் கொடுக்கப்படும். அதை நீங்கள் காது கொடுத்து கேட்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு கூறப்படுகிறது. மற்றபடி விமானத்திற்கு ஆபத்தெல்லாம் இல்லை.

விமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...

கட்டுக்கதை: விமானங்களின் கேபினில் உள்ள காற்று உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

உண்மை: விமான கேபினில் உள்ள காற்றில், உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் கிருமிகள் இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. விமான கேபின் காற்று உண்மையில் மிகவும் சுத்தமாக இருக்கும்.

விமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...

விமான கேபினின் காற்று தொடர்ச்சியாக ப்யூரிஃபை செய்யப்பட்டு கொண்டே இருக்கும். பஸ் அல்லது ரயில் போன்றவற்றில் இருக்கும் காற்றை விட விமான கேபினின் காற்று நன்கு மேம்பட்டது. ஆனால் விமானங்களில் பயணம் செய்த சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. பயணம் செய்த களைப்பு இதற்கு காரணமாக இருக்கலாம்.

விமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...

கட்டுக்கதை: விமானம் பறந்து கொண்டிருக்கும்போது, மனித கழிவுகள் வெளியேற்றப்படும்.

உண்மை: இல்லவே இல்லை. பறப்பது வணிகமயமாக்கப்படுவதற்கு முன்பாக, கீழே உள்ள உலகத்திற்கு எச்சரிக்கை செய்யாமல், மனித கழிவுகள் தூக்கி எறியப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் தற்போதைய சூழலில் அவ்வாறான நடைமுறை எதுவும் பின்பற்றப்படுவதில்லை.

விமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...

விமானத்தில் நீங்கள் டாய்லெட்டை பிளஷ் செய்யும்போது, விமானத்தின் பின்பகுதியில் உள்ள ஸ்டோரேஜ் யூனிட்டிற்கு அந்த கழிவுகள் செல்லும். விமானம் தரையிறங்கிய பிறகுதான் கழிவுகள் வெளியேற்றப்படும். எனவே விமானம் பறந்து கொண்டிருக்கும்போதே கழிவுகள் வெளியேற்றப்படும் என்பதில் துளி கூட உண்மையில்லை.

விமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...

கட்டுக்கதை: பைலட்களும், கோ-பைலட்களும் எதுவுமே செய்வதில்லை. ஆட்டோபைலட்தான் விமானத்தை பறக்க வைக்கிறது.

உண்மை: விமானங்கள் தானாக பறந்து கொள்கின்றன என்பதில் உண்மையில்லை. விமானங்களில் சூப்பர் ஆட்டோமெட்டிக் இயந்திரங்கள் இருக்கின்றன என்ற கற்பனையில் பலர் மிதந்து கொண்டிருக்கின்றனர். ஏதாவது அவசரம் என்றால், உதவி செய்வதற்காகவே பைலட்கள் பணியில் இருக்கின்றனர் என்பதும் அவர்களின் எண்ணம். ஆனால் இதில் உண்மையில்லை.

விமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...

பைலட்கள் மற்றும் கோ-பைலட்களின் ஒரு சில பணிகளை ஆட்டோபைலட்டால் செய்ய முடியும் என்பதில் வேண்டுமானால் ஓரளவிற்கு உண்மையுள்ளது. ஆனால் விமானங்கள் சரியாக இயங்க வேண்டுமானால், நிபுணத்துவம் பெற்ற விமான ஊழியர்கள் இருப்பது அவசியம். அவர்கள் முழுமையான கவனத்துடன் செயல்பட்டால் மட்டுமே விமானம் பாதுகாப்பாக இயங்கும்.

விமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...

கட்டுக்கதை: விமானத்தில் மது அருந்தினால் போதை வேகமாக ஏறும்.

உண்மை: இந்த கட்டுக்கதையை கொஞ்சம் கூட நம்பாதீர்கள். நீங்கள் தரையில் இருக்கும்போது மது அருந்தினால் எந்த அளவிற்கு போதை ஏறுமோ அதே அளவிற்கான போதைதான் விமானங்களில் பறக்கும்போதும் ஏறும். இதில் எந்த விதமான மாறுபாடுகளும் இருக்காது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Airplane Myths And Truths. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X