கேஸ் போட முடியாது... பயணிகளை கொல்வதற்காகதான் விமானத்தில் இப்படி உட்கார சொல்றாங்களா? உண்மையை உடைத்த பைலட்கள்!
விமானத்தில் பயணிகள் ஏன் பிரேஷ் பொஷிஷனில் உட்கார வைக்கப்படுகின்றனர்? என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வரும் நிலையில், பைலட்கள் உண்மையை உடைத்துள்ளனர்.

விமானம் தரையிறங்கும்போது, சில சமயங்களில் விமான பணிப்பெண்கள் 'பிரேஸ்... பிரேஸ்... பிரேஸ்' என்று உரக்க கூறுவார்கள். விமான பணிப்பெண்கள் இப்படி சொல்லும் சூழல் உண்மையில் ஏற்படவே கூடாது. ஏனெனில் இது மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலை ஆகும். அதாவது விமான பயணத்தின்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அப்போது விமானத்தை உடனடியாக தரையிறக்கியாக வேண்டும். இதுபோன்ற சூழல்களில், அருகில் விமான நிலையம் இருந்தால் விமானம் அங்கு தரையிறக்கப்படும். ஒருவேளை விமான நிலையம் இல்லாவிட்டால், கடல் போன்ற நீர்நிலைகளில் கூட விமானத்தை தரையிறக்கி விடுவார்கள்.

விமானத்தை உடனடியாக தரையிறக்கியாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், பிரேஸ் பொஷிஷனில் (Brace Position) அமர வேண்டும் என்று பயணிகள் அறிவுறுத்தப்படுவார்கள். பிரேஷ் பொஷிஷன் என்பது முன்னோக்கி வளைந்து, தலைக்கு மேலே கைகளை வைத்து கொண்டு அமரும் ஒரு நிலையாகும். புரியவில்லை என்றால், இந்த செய்தியின் முதல் 2 படங்களையும் பாருங்கள். அதுதான் பிரேஷ் பொஷிஷன்.

விமானம் ஆபத்தான சூழலில் இருக்கும்போது பிரேஷ் பொஷிஷனில் அமர்வது பாதுகாப்பற்றது என ஒரு சிலர் நம்புகின்றனர். ஆனால் பிரேஷ் பொஷிஷனில் அமர்வதுதான் மிகவும் பாதுகாப்பானது என அனுபவம் மிக்க பைலட்கள் தெரிவிக்கின்றனர். இந்த 2 கருத்துக்களில் எது உண்மையானது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முதலில் பிரேஷ் பொஷிஷன் ஆபத்தானது என ஒரு சிலர் கூறுவதில் உண்மை உள்ளதா? என்பதை பார்த்து விடலாம். பிரேஷ் பொஷிஷன்தான் ஒருவரின் பற்களை பாதுகாப்பதற்கான மிகச்சிறந்த பொஷிஷன் என பலரும் நம்புகின்றனர். விமானம் விபத்தில் சிக்கிய பின்னர், பற்களை வைத்து உயிரிழந்தவரை எளிதாக அடையாளம் காண முடியும் என்பது அவர்களின் கருத்து.

இதனால்தான் விமானம் அவசர சூழலில் இருக்கும்போது, பிரேஸ் பொஷிஷனில் அமரும்படி பயணிகளை விமான பணிப்பெண்கள் அறிவுறுத்துவதாக நம்பப்படுகிறது. அதேபோன்று பிரேஷ் பொஷிஷன்தான் பயணிகளின் கழுத்தை விரைவாக உடைப்பதற்கு உதவும் நிலை என்றும் நிறைய பேர் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதாவது அவசர சூழல்களில் பயணிகளை விரைவாக கொல்வதற்காகதான் விமான பணிப்பெண்கள் பிரேஸ் பொஷிஷனில் அவர்களை உட்கார வைக்கின்றனர் என்று பலரும் நம்புகின்றனர். இப்படி நடக்கும்பட்சத்தில், விமான நிறுவனங்கள் மீது பின்நாட்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்பது அவர்களின் கருத்து.

எனவே விமான நிறுவனங்கள் தங்கள் பாதுகாப்பிற்காக வேண்டுமென்றே பயணிகளை பிரேஷ் பொஷிஷனில் உட்கார வைத்து கொல்வதாக நிறைய பேர் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் மூத்த பைலட்கள் பலர் உண்மையை உடைத்துள்ளனர். அவர்களது கருத்துப்படி இவை எதுவுமே உண்மை இல்லை. இவை அனைத்துமே வெறும் வதந்திகள்தான்.

எனவே பிரேஸ் பொஷிஷனில் அமர்வதுதான் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். மோசமான சூழலின்போது, உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்து கொள்வதற்காகதான் பயணிகள் அனைவரும் பிரேஸ் பொஷிஷனில் உட்கார வைக்கப்படுகின்றனர். ''உயிரை பாதுகாத்து கொள்வதற்கு பிரேஷ் பொஷிஷனே சிறந்த நிலை'' என அனுபவம் வாய்ந்த பைலட்கள் தெரிவித்துள்ளனர்.

வெவ்வேறு விமான நிறுவனங்களில் பணியாற்றிய/பணியாற்றும் அனுபவம் வாய்ந்த பைலட்கள் பலரும் இந்த கருத்தைதான் ஒப்பு கொள்கின்றனர். ''அவசர சூழல்களில், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை பிரேஸ் பொஷிஷன் நமக்கு வழங்குகிறது'' என்பதுதான் பைலட்களின் கருத்து. அத்துடன் பிரேஷ் பொஷிஷன் பாதுகாப்பானது என்பது சோதனைகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை விமானம் ஒன்று கேமராக்கள், சென்சார்கள் மற்றும் மனிதர்களை போன்றே இருக்கும் டம்மிகள் (பொம்மைகள்) உடன் மோதலுக்கு உட்படுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. பொதுமக்கள் வசிக்காத பாலைவனத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், பிரேஷ் பொஷிஷன்தான் பாதுகாப்பானது என்பது தெரியவந்தது.

மொத்தம் 3 டம்மிகளை வைத்து சோதனை செய்ததில், சீட்பெல்ட் அணிவிக்கப்பட்டு, பிரேஸ் பொஷிஷனில் உட்கார வைக்கப்பட்டிருந்த டம்மியே உயிர் பிழைத்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர். அதாவது சீட் பெல்ட் அணிந்து கொண்டு, பிரேஸ் பொஷிஷனில் அமர்ந்திருந்தால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதே நேரம் சீட் பெல்ட் மட்டும் அணிந்து கொண்டு, பிரேஸ் பொஷிஷனில் இல்லாத டம்மிக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மறுபக்கத்தில் சீட் பெல்ட்டும் அணியாமல், பிரேஸ் பொஷிஷனிலும் இல்லாத டம்மி உயிரிழந்து விட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர். எனவே அவசர சூழல்களில் பிரேஸ் பொஷிஷனில் அமர்வதுதான் மிகவும் பாதுகாப்பானது. வதந்திகளை நம்ப வேண்டாம்.


Click it and Unblock the Notifications








