படத்துல காட்டுறதுலாம் சும்மா!! பைலட்டை உங்களால் நெருங்க கூட முடியாது - பலருக்கும் தெரியாத விமான இரகசியங்கள்!
விமான பயணம் பார்ப்பதற்கு வேண்டுமாயின் பயங்கரமானதாகவும், விபத்து எளிதாக ஏற்படக்கூடியதாகவும் போல் இருக்கலாம். ஆனால் உண்மையில், மற்ற வழி போக்குவரத்து பயணங்களை காட்டிலும், விமான பயணங்களே பாதுகாப்பானதாக விளங்குகின்றன. புள்ளி விபரங்களும் அதை தான் சொல்கின்றன. ஏனெனில், விமான விபத்துகள் மிக அரிதாகவே நிகழ்கின்றன.
அப்போது நிகழும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை சாலை மற்றும் இரயில் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உடன் ஒப்பிட்டால், மிக பெரிய வித்தியாசங்கள் உடன் இருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது, விமானங்களில் பின்பற்றப்படும் அதி பாதுகாப்பான வசதிகள் & முறைகள் ஆகும்.

ஒருமுறையாவது நீங்கள் விமானத்தில் பயணம் செய்து இருந்தீர்கள் எனில், டேக்-ஆஃப் ஆகும் விமான நிலையத்தில் இருந்து லேண்டிங் ஆகும் விமான நிலையம் வரையில் பின்பற்றப்படும் பாதுகாப்பு வழிமுறைகளை அறிந்திருப்பீர்கள். ஆனால், அவை யாவும் பொதுவான பாதுகாப்பு வழிமுறைகளே. விமானங்களில் இருக்கும் சில பாதுகாப்பு அம்சங்கள் விமானிகளுக்கும், கேபின் பணியாளர்களுக்கும் மட்டுமே தெரிந்திருக்கும்.
அவற்றை வேண்டுமென்றே அவர்கள் மறைப்பதில்லை, பயணிகளுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்பதினாலேயே அவர்கள் தெரிவிப்பதில்லை. அத்தகைய, நிறைய பேருக்கு தெரியாத விமான பாதுகாப்பு அம்சங்களை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். இந்த விபரங்கள் உங்களில் சிலரை மிகவும் ஆச்சிரியப்படுத்தலாம். வாருங்கள் இனி அவற்றை பார்க்கலாம்.

விமானிகள் அறைக்கான கதவு மற்றும் அதனை சுற்றி இருக்கும் சுவர்கள் புல்லட்ஃப்ரூஃப் தன்மை கொண்டவை. ஆதலால், துப்பாக்கியால் சுட்டு கதவை திறந்து, விமானிகளை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்து விமானத்தை ஹை-ஜேக் செய்வது எல்லாம் திரைப்படங்களில் மட்டுமே நடக்கும். விமானிகள் அவர்களாக கதவை திறந்தால்தான் ஒரே வழி.
சில விமானங்களில், பயணிகளின் நடத்தையை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. அந்த காட்சிகளை விமானிகள் தங்களது கேபினுக்குள் இருந்தவாறே கண்காணிக்கலாம். இரயில்களில், பஸ்களில் பெரும்பாலும் உள்நாட்டு பயணிகளே பயணிப்பர். ஆனால், விமானங்களில் கதையே வேறு. உலகின் ஏதோ ஒரு மூலையில் பிறந்தவர் கூட வேறொரு மூலையில் விமானத்தில் பயணிக்கக்கூடும்.

ஆதலால், விமான பயணங்களின் போது எல்லாவற்றிற்கும் தயாராக இருத்தல் வேண்டும். விமானத்தை ஹை-ஜேக் செய்ய நினைப்பவர்கள் துப்பாக்கி, வெடிக்குண்டுகளை தான் கொண்டுவருவர் என்றில்லை, அனைவரையும் மயக்கமடைய செய்யக்கூடிய வாயுக்களை கூட கொண்டுவரலாம். அதற்காகவே, கேஸ் மாஸ்க்குகளும், குற்ற செயல்களில் ஈடுப்படுவோரை விமானம் லேண்டிங் ஆகும் வரையில் பிடித்து வைக்க கைவிலங்கும் எல்லா விமானங்களிலும் இடம்பெறுகிறது.
இந்த விஷயம் உங்களில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும், அதாவது விமான கழிப்பறையின் கதவை விமான கேபின் பணியாளர்களாலும் திறக்க முடியும். விமான கழிப்பறைகளில் தீயணைப்பானை உங்களில் சிலர் பார்த்திருப்பீர்கள். ஆனால், அவை ஆட்டோமேட்டிக்காக இயங்கக்கூடியவை என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

விமானங்களில் விட்டுவிட்டு ஒளிரும் விளக்குகள் இறக்கைகளில் இருக்கும் விசிறிகள் ஐஸ் ஆக உறைவதை சுட்டிக்காட்டக் கூடியவை ஆகும். மின்சாரத்தை பாய்ச்சி இதய துடிப்பை மீண்டும் சீராக்கும் கருவி உள்பட முழு மருத்துவ உபகரணங்களும் அவசர மருத்துவ உதவிக்காக அனைத்து விமானங்களிலும் வழங்கப்படுகின்றன. பயணிகள் நுழையும் முக்கிய கதவுகளில் வாயு சிலிண்டர்கள் உள்ளன. அவசர நேரத்தில் அவற்றை உபயோகித்து வானில் விமானம் பறந்துக் கொண்டிருக்கும் போதே கதவை திறக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாங்கள் கூறியிருப்பவை எல்லாம் மிகவும் குறைவே. இன்னும் தொழிற்நுட்ப சார்ந்து நிறைய விஷயங்கள் விமானங்களில் முன்னெச்சரிக்கை ஆக வழங்கப்படும். இவ்வளவு ஏன், பயணிகள் அமரும் இருக்கைக்கான குஷின்கள் கூட எளிதில் தீப்பிடிக்காத பொருளால் பார்த்து, பார்த்து வடிவமைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒன்றுக்குதான், விலை மதிப்பற்ற மனித உயிர்.


Click it and Unblock the Notifications









