ஏர்போர்ட் உள்ள ஓடுற பஸ் ரோட்டுல போற சாதாரண பஸ் மாதிரி கிடையாது! ஏன் தெரியுமா?
விமான நிலையங்களில் பயணிகளை கேட்டிலிருந்து சற்று தூரமாக நிற்கும் விமானங்களில் ஏற்ற பஸ்களை பயன்படுத்துவார்கள். இப்படியாக விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் பஸ்களும் நாம் சாதாரணமாக சாலையில் பயன்படுத்தப்படும் பஸ்களும் வித்தியாசமாக இருக்கும். இந்த இரண்டு பஸ்களுக்கும் என்ன வித்தியாசம்? ஏன் விமான நிலையங்களில் வித்தியாசமான பஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
விமானங்கள் என்றாலே பல அதிசயங்களும், ஆச்சரியங்களும் தனித்துவங்களும் நிறைந்ததாக இருக்கும் விமான நிலையங்களில் உள்ள விமானங்கள் மற்றும் விமானத்தில் ஏறுவதற்கான பல்வேறு வழிமுறைகளில் வித்தியாசமான விஷயம் இருப்பதை நாம் இதற்கு முன்னர் பார்த்திருப்போம். இப்படியான ஒரு விஷயத்தை தான் தற்போதும் பார்க்க போகிறோம். விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் பஸ்களை பற்றிப் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக விமான நிலையங்களில் பெரும்பாலான விமானங்கள் பயணிகள் ஏறுவதற்கு ஏற்ப கேட்டு அருகே வந்து நிறுத்தப்படும். அதன் பின்னர் பயணிகள் கேட் பகுதியிலிருந்து விமானங்களில் ஏறுவதற்காக வழிவகைகள் செய்யப்பட்டு பயணிகள் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பப்படுவார்கள். ஆனால் ஒரே நேரத்தில் அதிகமான எண்ணிக்கையில் விமானங்கள் போர்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அனைத்து விமானங்களும் கேட் பகுதிக்கு வர முடியாது.
இப்படியான நேரங்களில் கேட் பகுதியிலிருந்து சற்று தள்ளி விமானங்கள் நிற்கும். அந்த விமானங்களுக்கு பயணிகளை ஏற்றி செல்வதற்காக கேட் பகுதியை அருகே ஒரு பஸ் வரும் அந்த பஸ்ஸில் பயணிகள் எல்லாம் ஏறிக்கொள்ள வேண்டும். அந்த பஸ் விமானம் இருக்கும் பகுதிக்கு செல்லும். அங்கு பயணிகள் பஸ்ஸில் இருந்து இறங்கி விமானத்தில் ஏறிக்கொள்ள முடியும்.

இதே போல லேண்டான சில விமானங்களும் கேட் பகுதிக்கு வர முடியவில்லை என்றால் சற்று தொலைவில் இருக்கும் அதன் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும். அங்கிருந்து பயணிகள் பஸ் மூலம் மீண்டும் கேட்பகுதிக்கு அழைத்து வரப்படுவார்கள். இப்படியாக பயணிகளை கேட் பகுதியிலிருந்து விமானத்தில் விமானத்திலிருந்து கேட்டிருக்கும் அழைத்து வர பயன்படுத்தப்படும் பஸ்கள் நாம் சாதாரணமாக சாலையில் பயன்படுத்தப்படும் பஸ்களாக இருக்காது இது முற்றிலுமாக வித்தியாசமாக இருக்கும்.
சாலையில் பயன்படுத்தப்படும் பஸ்களை விமான நிலையங்களில் பயன்படுத்த மாட்டார்கள் இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது முக்கியமாக விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் பஸ்களுக்கு என சில அம்சங்கள் இருக்க வேண்டும் அது சாலையில் உள்ள பஸ்களுக்கு இருக்காது. இதன் காரணமாக தான் சாலையில் பயன்படுத்தப்படும் பரிசுகளை விமான நிலையங்களுக்கு உள்ளே பயன்படுத்த மாட்டார்கள் விமான நிலையங்களுக்குள்ளே பிரத்தியேகமான பஸ்களை வடிவமைப்பார்கள்.
சாலையில் உள்ள பஸ்களில் ஒருபுறம் மட்டுமே பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வழி என்பது இருக்கும் ஆனால் விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் பஸ்களில் இருபுறங்களிலும் பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் கேட் வசதி என்பது இருக்கும். இதனால் ஒவ்வொரு முறையும் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு ஏற்ப பஸ்ஸை திருப்பி நிறுத்த வேண்டாம். பஸ்ஸை நேராக சென்று நிறுத்திவிட்டு எந்த இடத்தில் விமானம் இருக்கிறதோ அந்த பகுதியில் உள்ள கேட்டை திறந்தால் போதுமானது.
இது மட்டுமல்ல விமான நிலையங்களுக்கு உள்ளே பயணிக்கும் பஸ்கள் அதிகபட்சம் 40கிலோமீட்டர் வேகத்தில் தான் பயணிக்கும். அதே நேரம் குறைவான தூரம் தான் பயணிக்கும். இதனால் வெளியே சாலையில் உள்ள பஸ்களில் இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரி உள்ளிட்ட பாகங்கள் எல்லாம் விமான நிலையத்தில் உள்ள பஸ்களுக்கு செட் ஆகாது. விமான நிலையத்தில் உள்ள பஸ்களுக்கு தேவையானபடி எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரிகளை பொருத்துவதால் அதிக பணம் மிச்சம் ஆகிறது.
சாலையில் வேகத்தடைகள், மேடு, பள்ளங்கள் இருப்பதால் பஸ்கள் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸுடன் இருக்கும். ஆனால் விமான நிலையங்களுக்குள்ளே இப்படியான எந்த விஷயமும் இருக்காது. ஃபிளாட்டான தரையில்தான் பஸ் செல்ல வேண்டும் என்பதால் குறைந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட பஸ்களை பயன்படுத்துவார்கள். இதன் மூலம் அதிகமான பயணிகளை பஸ்களில் ஏற்ற முடியும். அதே நேரம் மாற்றுத்திறனாளிகள் வீல் சேர் மூலம் வந்தாலும் அவர்கள் எளிதாக பஸ்ஸில் ஏறி இறங்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்படியான பல்வேறு காரணங்களுக்காக விமான நிலையங்களில் சாதாரண சாலையில் செல்லும் பஸ்ஸ்களை பயன்படுத்தாமல் அதற்கான பிரத்தியேகமாக பஸ்களை தயாரித்து அதை பயன்படுத்துகிறார்கள். சாதாரண பஸ்களை விமான நிலையங்களில் பயன்படுத்துவதால் பல்வேறு சிக்கல்களும் அதிக செலவுகளும் ஆகிறது என்பதை கணக்கில் கொண்டு இதை செய்கிறார்கள்.


Click it and Unblock the Notifications








