ஏர்போர்ட்டின் பேருக்கு பதிலா ஏன் 'கோட் வேர்டு' யூஸ் பண்றாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

உலகில் உள்ள ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் ஏன் குறியீடு வழங்கப்பட்டுள்ளது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏர்போர்ட்டின் பேருக்கு பதிலா ஏன் 'கோட் வேர்டு' யூஸ் பண்றாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

உலகில் உள்ள ஒவ்வொரு விமான நிலையங்களுக்கும் (Airport) பிரத்யேகமான குறியீடு (Code) வழங்கப்பட்டுள்ளது. விமானத்தில் அடிக்கடி பறக்கும் அனைவருக்கும் இது தெரியும். பொதுவாக விமான நிலையங்களுக்கான குறியீடுகள் மூன்று எழுத்துக்களை கொண்டதாகவோ அல்லது நான்கு எழுத்துக்களை கொண்டதாகவோ இருக்கும்.

ஏர்போர்ட்டின் பேருக்கு பதிலா ஏன் 'கோட் வேர்டு' யூஸ் பண்றாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பயணிகள் முன்பதிவு, டிக்கெட்கள் ஆகியவை தொடர்பான ஆவணங்களில் விமான நிலையங்களின் குறியீடுகளை காண முடியும். மேலும் விமான கால அட்டவணைகள், லக்கேஜ் டேக்குகள் (Luggage Tags), விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றிலும் விமான நிலைய குறியீடுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஏர்போர்ட்டின் பேருக்கு பதிலா ஏன் 'கோட் வேர்டு' யூஸ் பண்றாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

சம்பந்தப்பட்ட விமான நிலையத்தை அடையாளம் காண்பதற்கு இந்த குறியீடுகள் உதவி செய்கின்றன. விமான நிலைய குறியீடுகளில் பொதுவாக இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில், ஐஏடிஏ (IATA - International Air Transport Association) குறியீடு ஒன்றாகும். மற்றொன்று ஐசிஏஓ (ICAO - International Civil Aviation Organization) குறியீடாகும்.

ஏர்போர்ட்டின் பேருக்கு பதிலா ஏன் 'கோட் வேர்டு' யூஸ் பண்றாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதில், ஐஏடிஏ குறியீடுகள் மூன்று எழுத்துக்களை கொண்டதாக இருக்கும். அதே நேரத்தில் ஐசிஏஓ குறியீடுகள் நான்கு எழுத்துக்களை கொண்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் குறியீடுகள் இருக்கும் என்பது விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு தெரிந்த ஒரு விஷயம்தான்.

ஏர்போர்ட்டின் பேருக்கு பதிலா ஏன் 'கோட் வேர்டு' யூஸ் பண்றாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் ஒரே விமான நிலையத்திற்கு ஏன் மூன்று எழுத்துக்களை கொண்ட குறியீடும், நான்கு எழுத்துக்களை கொண்ட ஒரு குறியீடும் என இரண்டு வெவ்வேறு குறியீடுகள் வழங்கப்படுகின்றன? இந்த இரண்டு குறியீடுகளுக்கும் என்ன வித்தியாசம்? இந்த குறியீடுகள் எப்படி உருவாக்கப்படுகின்றன? என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் பெரும்பாலானோருக்கு தெரியாது.

ஏர்போர்ட்டின் பேருக்கு பதிலா ஏன் 'கோட் வேர்டு' யூஸ் பண்றாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பைலட்கள் போன்ற விமான துறையில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே இந்த விஷயங்கள் எல்லாம் தெரியும். ஆனால் இந்த தகவல்களை எல்லாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் விரும்புகிறது. எனவே மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம் உங்களுக்கு நாங்கள் விளக்கமாக பதில் வழங்குகிறோம்.

ஏர்போர்ட்டின் பேருக்கு பதிலா ஏன் 'கோட் வேர்டு' யூஸ் பண்றாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் அதற்கு முன்பாக விமான நிலையங்களுக்கு ஏன் குறியீடு வழங்குவது அவசியம்? என்ற கேள்விக்கான பதிலை அனைவரும் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. ஏனெனில் இதுதான் மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் அடிப்படை. எனவே இந்த கேள்விக்கான பதிலை இந்த கட்டுரையில் தொகுத்து வழங்கியுள்ளோம். மற்ற கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டுரையில் பதில் வழங்குகிறோம்.

ஏர்போர்ட்டின் பேருக்கு பதிலா ஏன் 'கோட் வேர்டு' யூஸ் பண்றாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

விமான நிலைய குறியீடுகள் விமான பயணிகள், பைலட்கள் மற்றும் விமான போக்குவரத்து கட்டுபாட்டு மைய அதிகாரிகள் என அனைவரின் வாழ்க்கையையும் சுலபமாக்குகின்றன. நாங்கள் ஏற்கனவே கூறியபடி போர்டிங் பாஸ், பைலட்களின் விமான திட்ட ஆவணங்கள் போன்றவற்றில் விமான நிலைய குறியீடுகள் இருக்கும்.

ஏர்போர்ட்டின் பேருக்கு பதிலா ஏன் 'கோட் வேர்டு' யூஸ் பண்றாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்த ஆவணங்களில் இடப்பற்றாக்குறை காணப்படும். இதுபோன்று குறைவான இடம் மட்டுமே உள்ள ஆவணங்களில் விமான நிலையத்தின் முழு பெயரையும் குறிப்பிடுவதற்கு பதிலாக சிறிய குறியீடுகளை குறிப்பிடுவது எளிமையான விஷயம். இதனை உங்களுக்கு இன்னும் தெளிவாக புரியும்படி எளிமையாக விளக்குகிறோம்.

ஏர்போர்ட்டின் பேருக்கு பதிலா ஏன் 'கோட் வேர்டு' யூஸ் பண்றாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அமெரிக்காவில் உள்ள ஒரு நகரம் நியூ ஓர்லேன்ஸ். இங்குள்ள விமான நிலையத்தின் பெயர் 'லூயில் ஆர்ம்ஸ்ட்ராங் நியூ ஓர்லேன்ஸ் சர்வதேச விமான நிலையம்'. இந்த விமான நிலையத்திற்கான ஐஏடிஏ குறியீடு 'எம்எஸ்ஒய்' (MSY). போர்டிங் பாஸ் போன்ற ஆவணங்களில் 'லூயில் ஆர்ம்ஸ்ட்ராங் நியூ ஓர்லேன்ஸ் சர்வதேச விமான நிலையம்' என குறிப்பிடுவதை விட 'எம்எஸ்ஒய்' என குறிப்பிடுவது எளிமையானது.

ஏர்போர்ட்டின் பேருக்கு பதிலா ஏன் 'கோட் வேர்டு' யூஸ் பண்றாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதே நேரத்தில் பைலட்களின் விமான திட்ட ஆவணங்களில் இந்த விமான நிலையத்தை குறிப்பிடுவதற்கு 'கேஎம்எஸ்ஒய்' (KMSY) ஐசிஓஏ குறியீடு பயன்படுத்தப்படுகிறது. 'லூயில் ஆர்ம்ஸ்ட்ராங் நியூ ஓர்லேன்ஸ் சர்வதேச விமான நிலையம்' என ஆவணங்களில் குறிப்பிடுவதை விட 'கேஎம்எஸ்ஒய்' குறிப்பிடுவது எளிமையானது.

ஏர்போர்ட்டின் பேருக்கு பதிலா ஏன் 'கோட் வேர்டு' யூஸ் பண்றாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

விமான நிலையங்களுக்கு குறியீடுகள் வழங்கப்படுவதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. அத்துடன் தொலை தொடர்புக்கும் இந்த குறியீடுகள் பயன்படுகின்றன. அதாவது வெளிநாட்டு விமான நிலையங்களின் பெயர்களை பைலட்கள் உச்சரிப்பது கடினம். ஆனால் அதற்கு பதிலாக குறியீடுகளை எளிமையாக உச்சரிக்கலாம்.

ஏர்போர்ட்டின் பேருக்கு பதிலா ஏன் 'கோட் வேர்டு' யூஸ் பண்றாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதாவது 'Louis Armstrong New Orleans International Airport' என உச்சரிப்பதை விட 'KMSY' என உச்சரிப்பது எளிது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள அதிகாரிகளாலும் இதனை எளிமையாக புரிந்து கொள்ள முடியும். குழப்பங்களை தவிர்க்கும் வகையில், King-Mind-Sing-Youth என்று கூட குறிப்பிடலாம்.

ஏர்போர்ட்டின் பேருக்கு பதிலா ஏன் 'கோட் வேர்டு' யூஸ் பண்றாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதாவது 'KMSY' என்பது புரியும் வகையில், அதன் முதல் எழுத்துக்களில் ஆங்கில வார்த்தைகளை குறிப்பிடலாம். இதன் மூலம் பைலட்களாலும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளாலும் எளிமையாக புரிந்து கொள்ள முடியும். நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள 'Louis Armstrong New Orleans International Airport' என்ற வார்த்தையை உச்சரிப்பது கூட ஓரளவிற்கு எளிமையானது.

ஏர்போர்ட்டின் பேருக்கு பதிலா ஏன் 'கோட் வேர்டு' யூஸ் பண்றாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் நமது பாணியில் சொல்வதென்றால், ஒரு சில விமான நிலையங்களின் பெயர்கள் வாயிலேயே நுழையாது. அதுபோன்ற விமான நிலையங்களுக்கு குறியீடுதான் சிறந்தது. ஏனெனில் விமான பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால், பைலட்களுக்கும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளுக்கும் இடையேயான உரையாடல் தெளிவாக இருக்க வேண்டும்.

ஏர்போர்ட்டின் பேருக்கு பதிலா ஏன் 'கோட் வேர்டு' யூஸ் பண்றாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதில் ஏதாவது குழப்பங்கள் ஏற்பட்டால், விமானம் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் கூட இருக்கின்றன. எனவே இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காகவும் விமான நிலையங்களுக்கு குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு அடுத்த காரணம் ஒரே நகரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் இருப்பதுதான்.

ஏர்போர்ட்டின் பேருக்கு பதிலா ஏன் 'கோட் வேர்டு' யூஸ் பண்றாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

தற்போது நகரங்கள் பெரிதாகி கொண்டே வருகின்றன. ஒரு சில நகரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன. எனவே குறிப்பிட்ட நகரத்தில் உள்ள எந்த விமான நிலையம்? என்ற குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், விமான நிலையங்களுக்கு குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன. விமான நிலையங்களுக்கு ஏன் குறியீடு அவசியம்? என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

ஏர்போர்ட்டின் பேருக்கு பதிலா ஏன் 'கோட் வேர்டு' யூஸ் பண்றாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

விமான நிலைய குறியீடுகள் தொடர்பாக மேலே நாங்கள் எழுப்பியிருந்த இன்னும் பல்வேறு கேள்விகளுக்கான விளக்கங்கள் வெகு விரைவில் அடுத்தடுத்த கட்டுரைகளில் வெளியாகும். அதில், இன்னும் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கியிருக்கின்றன. அதுவரை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் இணைந்திருங்கள்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Airport code here s everything you need to know
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X