வான்வழியை மூடிய 3 உலக நாடுகள்! நேற்று உலகத்தையே பரபரப்பாக்கிய சம்பவம் என்ன தெரியுமா?
நேற்று ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால் ஜோர்டன், லிபனென், ஈராக் போன்ற நாடுகள் தங்கள் வான் வழியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது. இதன்படி சில மணி நேரம் இந்த நாட்டின் வழியாக எந்த விமானங்களும் பறக்கவில்லை. இப்படியாக வான் வழியை மூடுவது என்றால் என்ன? எதற்காக இதை செய்கிறார்கள் என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஈரான் இன்று இஸ்ரேல் மீது வான் வழி தாக்குதலை நடத்தியது. இந்த பிரச்சனை காரணமாக ஜோர்டன், லிபனென் மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வான் வழியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தார்கள். இதனால் ஒட்டுமொத்த உலகமும் பதற்றத்திற்கு உள்ளானது. உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் எல்லாம் உடனடியாக அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.

இப்படியாக ஒரு நாடு வான்வழியை மூடுவதாக அறிவித்தால் அதற்கு என்ன அர்த்தம்? எந்த மாதிரியான சூழ்நிலைகளில் இதை செய்வார்கள் என்ற புரிதல் பலருக்கும் இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு நாடும் வானில் பறக்கும் விமானங்களின் டிராபிக்கை கண்ட்ரோல் செய்யும் திறன் கொண்ட அமைப்பை கொண்டவையாக உள்ளன. இந்த நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைக்கு மேல் பகுதியில் பறக்கும் விமானங்களுக்கு கண்ட்ரோல் தருகிறது.
அந்தந்த நாடுகளில் உள்ள ஏர் டிராபிக் கண்ட்ரோல் ரூம் மூலம் இந்த நாட்டின் மேல் பறக்கும் விமானங்கள் கீழே உள்ள ஏர் டிராபிக் கண்ட்ரோலின் அனுமதி பெற்று தான் பிறக்க வேண்டும். இப்படியாக ஏர் டிராபிக் கண்ட்ரோல் தங்கள் நாட்டிற்கு மேலே எந்த விமானமும் பறக்க கூடாது என்ற அறிவிப்பை வெளியிட்டு விட்டால் அப்பகுதி வழியாக எந்த நிறுவனமும் தங்கள் விமானத்தை எடுத்துச் செல்லக்கூடாது.

பொதுவாக இப்படியான அறிவிப்பை அவசர காலகட்டத்தில் தான் ஒரு நாடு அறிவிக்கும். தற்போது ஈரான், இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதால் அருகில் உள்ள நாடுகள் தங்கள் நாடுகளை பாதுகாத்துக் கொள்ள இப்படியான தற்காலிக அறிவிப்பை வெளியிட்டன. இந்த அறிவிப்பால் இந்த நாடு வான் வழியாக பறக்கவிருந்த விமானங்கள் எல்லாம் வேறு வழியில் ரூட் மாத்தி விடப்பட்டன.
ஏற்கனவே பயணத்தில் இருந்த விமானங்கள் எல்லாம் உடனடியாக அருகில் உள்ள நாட்டிலுள்ள ஏர் டிராபிக் கண்ட்ரோல் மூலம் அறிவுறுத்தப்பட்டு அவர்களுக்கான புதிய ரூட் வழங்கப்பட்டது. அப்பொழுதுதான் கிளம்ப தயாரான விமானங்கள் எல்லாம் புதிய ரூட் குறித்த அப்டேட்கள் வழங்கப்பட்டு அதன் பின்னரே கிளம்பப்பட்டன.

திடீரென ரூட் மாறியதால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. சில விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டன. ஏற்கனவே பறந்து கொண்டிருந்த விமானங்கள் எரிபொருளுக்காக வேறு விமான நிலையங்களில் நிறுத்தப்பட்டன. இப்படியான பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை விமான சேவை வழங்கும் நிறுவனங்களும் ஏர்போர்ட்டுகளும் கடைபிடித்தனர். இதனால் இன்று முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
பொதுவாக ஏர் டிராபிக்கை கண்ட்ரோல் செய்யும் நாடுகள் இப்படியான அறிவிப்பை வெளியிட்டு விட்டால் உடனடியாக நாட்டில் உள்ள ரேடார் மூலமாக எந்த விமானமாவது தங்கள் நாட்டின் மீது பறக்கிறதா என்ற கண்காணிப்பை தொடங்கி விடுவார்கள். அப்படியாக விமானங்கள் பறக்கப்படும்போது அந்த விமானத்தை என்ன விமானம் என கண்டறிந்து தங்கள் எதிரிகளின் விமானம் என்றால் உடனடியாக அதை சுட்டு வீழ்த்த உத்தரவிடுவார்கள்.
இந்த அறிவிப்பு வெளியான உடன் விமானங்களை தாக்கும் ஆயுதங்களும் தயார் நிலைக்கு வந்து விடும். ஒரு நாடு தங்கள் சொத்துக்களை பாதுகாக்க இப்படியான நடவடிக்கையை அவசர காலகட்டத்தில் எடுக்கும் இப்படியாக தான் ஜோர்டன்,லிபனென், ஈராக் போன்ற நாடுகள் வான் வழியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்திருந்தது. தற்போது இந்த வான் வழி மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.
வான் வழியை மூடுவது என்றால் அந்த நாட்டிற்கு வரும் விமானமோ அல்லது அந்த நாட்டிலிருந்து கிளம்பும் விமானமோ மட்டும் தடை செய்யப்படும் என அர்த்தம் கிடையாது. சில விமானங்கள் குறிப்பிட்ட நாட்டின் வான் வழியை கடந்து செல்லும். ஆனால் அந்த நாட்டில் தரையிறங்காமலேயே செல்லும். இப்படியாக செல்லும் விமானங்களும் தாங்கள் எந்த நாட்டின் வான் வழியில் செல்கிறோமோ அந்த நாட்டில் உள்ள ஏர் டிராபிக் கண்ட்ரோலின் அனுமதியை பெற வேண்டும்.
இப்படியாக ஒரு நாட்டின் மேல் பறக்கும் விமானம் அந்த நாட்டில் இரங்காவிட்டாலும் அந்த விமானங்களும் பறக்க தடை விதிக்கப்பட்டு தான் வான் பகுதி முற்றிலுமாக மூடப்படும். தற்போது குறிப்பிட்ட நாட்டின் வான் பகுதி மூடப்பட்டதால் அந்த பகுதி வழியாக விமானங்களும் எதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு பறக்கவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சில நாடுகள் அறிவியல் ஆய்வு நடத்தும் இடங்கள், ராணுவ ரகசியங்களை வைத்திருக்கும் இடங்கள், உள்ளிட்ட பகுதியில் நிரந்தரமாக வான்வழி தடையை விதித்திருக்கும். அந்த பகுதி வழியாக எந்த நாடும் தங்கள் விமானங்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கும். இப்படியான பகுதிகள் ஏற்கனவே விண்வெளி ரூட்டை திட்டமிடும் குழுவிடமிருக்கும் அவர்கள் அந்தப் பகுதி வழியாக விமானம் பறக்காதவாறு திட்டமிடுவார்கள்.


Click it and Unblock the Notifications









