எதை பாக்கறதுனே தெரியல... அவங்கள மாதிரியே காரும் அழகா இருக்கு... உத்து பாத்ததுக்கு அப்புறம்தான் யார்னே தெரியுது

தமிழ் (Tamil) மற்றும் மலையாளம் (Malayalam) உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lekshmi). இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது 2024 ரேஞ்ச் ரோவர் எவோக் (2024 Range Rover Evoque) ஆகும்.

2024 ரேஞ்ச் ரோவர் எவோக் கார் கடந்த ஜனவரி மாத இறுதியில்தான் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2024 ரேஞ்ச் ரோவர் எவோக் காரில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) என 2 வகையான இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன.

2024 Range Rover Evoque

இந்த காரில் வழங்கப்பட்டுள்ள 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், 247 ஹெச்பி பவர் மற்றும் 365 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின், 201 ஹெச்பி பவர் மற்றும் 430 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த 2 இன்ஜின்கள் உடனும், 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 2 இன்ஜின்கள் உடனும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்தான் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காரில் பல்வேறு அதிநவீன வசதிகளும் வாரி வழங்கப்பட்டுள்ளன. இதில், 11.4 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மிகவும் முக்கியமானது.

Aishwarya Lekshmi Buys 2024 Range Rover Evoque

இதுதவிர முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், முன் பகுதியில் ஹீட்டட் மற்றும் கூல்டு வசதியுடன் கூடிய இருக்கைகள், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளும் 2024 ரேஞ்ச் ரோவர் எவோக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஆடி க்யூ5 (Audi Q5), மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி (Mercedes-Benz GLC), பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3) மற்றும் வால்வோ எக்ஸ்சி60 (Volvo XC60) ஆகிய கார்களுடன், 2024 ரேஞ்ச் ரோவர் எவோக் போட்டியிடும்.

இந்த காரின் பெட்ரோல் மற்றும் டீசல் என 2 வேரியண்ட்களின் விலையும் ஒன்றுதான். அது 67.90 லட்ச ரூபாய் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகவே 2024 ரேஞ்ச் ரோவர் எவோக் பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஐஸ்வர்யா லட்சுமியிடம் ஏற்கனவே மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி (Mercedes-Benz GLC) போன்ற விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது 2024 ரேஞ்ச் ரோவர் எவோக் இணைந்துள்ளது. இந்த கார், ஐஸ்வர்யா லட்சுமிக்கு பாதுகாப்பான மற்றும் சௌகரியமான பயணத்தை வழங்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 14, 2024, 22:59 [IST]
English summary
Aishwarya lekshmi buys 2024 range rover evoque full details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+