ஐஸ்வர்யா ராய்க்கு விவாகரத்து ஆக போகுதா? இந்த காஸ்ட்லியான கார் எல்லாம் யாருக்கு சொந்தம்?

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தற்போது நடிகர் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து சுமார் 17 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் பிரியப்போவதாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்த வதந்திகளுக்கு இருவர் தரப்பில் இருந்தும் இதுவரை ஏற்போ அல்லது மறுப்போ வரவில்லை. இந்நிலையில் இவர்கள் பயன்படுத்தி வரும் கார்கள் சமூகவலைதளங்களில் மிக முக்கிய பேசு பொருளாக மாறி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

நடிகை ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் இந்தியாவில் கொண்டாப்படும் ஒரு தம்பதியாக இருக்கிறார்கள். இவர்கள் நீண்ட ஆண்டுகளாக திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் அபிஷேக் பச்சன் ஒரு திரைப்பட புரோமோஷனிற்காக டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சில் அவருடன் நடித்த நடிகை நிம்ராட் கவூர் என்ற நடிகையும் கலந்து கொண்டார்.

Aishwarya Rai Divorce Rumours

இந்நிகழ்ச்சியில் 17 ஆண்டுகளாக திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வரும் அபிஷேக் பச்சன் திருமண வாழ்க்கை குறித்து பேச்சு வந்தது. அப்பொழுது தொகுப்பாளர் இது குறித்து கேட்டபோது நடிகை நிம்ராட் கவூர் ஆச்சரியப்பட்டு அபிஷேக் பச்சனை பார்த்து "இவ்வளவு நாள் திருமண வாழ்க்கை நீடித்ததில்லை" என கூறினார். இதற்கு அபிஷேக் பச்சனும் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியை பார்த்த பலர் நிம்ராட் கவூர் மற்றும் அபிஷேக் ஆகியோர் தற்போது பழகி வருவதாகவும், விரைவில் அபிஷேக்பச்சன் ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்யப்போவதாகவும் பேசி வருகின்றனர். இது முற்றிலும் வதந்தி போல தான் தெரிகிறது.

இந்தியாவின் பிரபலமான ஜோடி திடீரென விவாகரத்து செய்யப்போவதாக தற்போது பேச்சு கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவர்கள் குறித்த தகவல்கள் வைரலாக பரவி வருகின்றன. இந்த ஜோடி பயன்படுத்தும் கார்கள் குறித்தம் தற்போது பலர் பேசி வருகின்றனர். இது பலரது கவனத்தை திருப்பியுள்ளது.இந்த ஜோடியிடம் உள்ள கார்கள் பற்றி பார்போம்!

Aishwarya Rai Divorce Rumours

இந்த ஜோடி பயன்படுத்தும் காஸ்ட்லியான கார் என்றால் அது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் பாந்தோம் என்ற கார் தான். இந்த கார் தற்போது மார்கெட்டில் ரூ9.5 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதில் பல்வேறு கஸ்டமைஸ்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன. இந்த காரில் 6.8 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 563 பிஎச்பி பவரும் 900 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக இந்த ஜோடி மெர்சிடீஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரை பயன்படுத்தி வருகி்ன்றனர். இது ரூ1.76 கோடி என்ற விலையில் விற்பனையாகி வந்தது. இந்த கார் தற்போது இந்திய மார்கெட்டில் விற்பனையில் இல்லை. இந்த காரின் விலை கடைசியாக விற்பனையான விலையாக இருக்கிறது. பல முறை இந்த ஜோடி இந்த காரில் வந்துள்ளார்கள்.

Aishwarya Rai Divorce Rumours

அடுத்ததாக இந்த ஜோடி பென்ட்லீ நிறுவனத்தின் கான்டினென்டல் ஜிடி காரை பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு 2 சீட்டர் காராகும். இந்த கார் ரூ3.29 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 6 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 626 பிஎச்பி பவரையும் 820 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது போக இந்த ஜோடியிடம் மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல் 63 ஏஎம்ஜி, போர்ஷே கேமேன் எஸ், உள்ளிட்ட பல காஸ்ட்லியான கார்கள் இருக்கிறது. இந்த கார்கள் எல்லாம் அதிக விலை கொண்டதாக இருக்கிறது. ஒரு வேலை இருவரும் பிரிந்துவிட்டால் இந்த கார்கள் யார் பெயரில் இருக்கிறதோ அவர்களே இந்த காரின் சொந்ததகாரர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 6, 2025, 12:40 [IST]
English summary
Aishwarya rai abhishek bachchan divorce rumours here find their car collections
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X