ஐஸ்வர்யா ராய் வாங்கிய இந்த காரோட விலை எவ்வளவு தெரியுமா? காரைவிட்டு கெத்தா இறங்கி வந்து மிரட்டி விட்டுட்டாங்க!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் இந்தியாவில் விற்கப்படும் மிக மிக விலை உயர்ந்த டொயோட்டா (Toyota) காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு வழங்கும் மிக மிக விலை உயர்ந்த கார் மாடலாக வெல்ஃபையர் (Vellfire) இருக்கின்றது. இந்த கார் மாடலையே நடிகை தற்போது வாங்கி இருக்கின்றார். அந்த காரில் அவர் வலம் வரவும் அவர் தொடங்கி இருக்கின்றார். இதை உறுதிப்படுத்தும் விதமாக ஐஸ்வர்யா ராய் டொயோட்டா வெல்ஃபையர் காரில் இருந்து தன்னுடைய மகளுடன் கெத்தாக இறங்கி வரும் காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

ஐஸ்வர்யா ராய் வாங்கி இருப்பது வெல்ஃபையர் கார் மாடலின் அதிக சொகுசு அம்சங்கள் நிறைந்த விஐபி எக்சிகியூட்டீவ் லாஞ்ச் (Vellfire VIP Executive Lounge) வெர்ஷன் ஆகும். இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 1 கோடிக்கும் அதிகம் ஆகும்.

Aishwarya rai acquires toyota vellfire

இத்தகைய அதிக விலைக் கொண்ட காரிலேயே ஐஸ்வர்யா ராய் தற்போது வலம் வர தொடங்கி உள்ளார். 800 கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்ட ஓர் நடிகையே ஐஸ்வர்யா ராய் ஆவார். மிகப் பெரிய அளவில் இவர் படங்களில் தோன்றவில்லை என்றாலும் சில முக்கிய படங்கள் மற்றும் பிராண்டுகளின் முகமாக அவர் தோன்றி வருகின்றார்.

சமீபத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் இவர் தோன்றியிருப்பார் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே அவர் தற்போது இந்த காரை வாங்கி இருக்கின்றார். இந்த காருக்கு இந்தியாவில் ரசிகர்கள் மிக ஏராளம். குறிப்பாக, திரை நட்சத்திரங்கள் மத்தியில் வெல்ஃபையருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக ஐஸ்வர்யா ராயும் இந்த காரை வாங்கி இருக்கின்றார். டொயோட்டா வெல்ஃபையர் ஓர் அதிக ஆடம்பர அம்சங்கள் நிரம்பிய எம்பிவி வகை கார் மாடல் ஆகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் கேரவன் வாகனத்தை போன்ற ஃபீலை வழங்கக் கூடிய ஓர் கார் மாடலே வெல்ஃபையர் ஆகும்.

இதனால்தான் இந்த கார் மாடலுக்கு இந்திய திரையுலகைச் சேர்ந்தவர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக இந்த கார் மாடலை ஆமிர்கான், அணில் கபூர், அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் அபிஷேக் பச்சான் உள்ளிட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் தென்னிந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள் சிலரும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். சுரேஷ் கோபி, நாகர்ஜூனா, மோகன்லால், ஃபஹத் ஃபாசில், நிவின் பாலி, கிச்சா சுதீப் உள்ளிட்டோரே டொயோட்டா வெல்ஃபையர் கார் மாடலை பயன்படுத்தி வருகின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. இவர்களின் வரிசையிலேயே தற்போது ஐஸ்வர்யா ராய் இணைந்திருக்கின்றார்.

ஐஸ்வர்யா ராய் வாங்கி இருக்கும் டொயோட்டா வெல்ஃபையர் எக்சிகியூட்டீவ் லாஞ்ச் வெர்ஷனின் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 1.30 கோடி ஆகும். இந்த விலைக்கு ஏற்ப பிரீமியம், சொகுசு மற்றும் நவீன கால தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவற்றை மிக தாராளமாகத் தாங்கியிருக்கும். அந்தவகையில், டிவி போன்ற மிகப் பெரிய திரைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

14 அங்குல திரையே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கக் கூடிய இருக்கைகள், கார் இணைப்பு தொழில்நுட்பம், ஹெட்ஸ் அப் திரை, வெண்டிலேட் மற்றும் சூடாகும் வசதிக் கொண்ட இருக்கை, கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட கன்ட்ரோல் பேனல், வயர்லெஸ் சார்ஜர் போன்ற அம்சங்களும் வெல்ஃபையர் கார் மாடலில் இடம் பெற்றிருக்கின்றது.

இதேபோல், இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பார்க் அசிஸ்ட், ஹில் அசிஸ்ட் மற்றும் அடாஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன. எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் ஹைபிரிட் தொழில்நுட்ப வசதிக் கொண்ட 2.5லிட்டர் பெட்ரோல் மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 193எச்பி மற்றும் 240என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். இ-சிவிடி டிரான்ஸ்மிஷனே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நடிகர்களின் ஃபேவரிட் கார் மாடலாக டொயோட்டா வெல்ஃபையர் எம்பிவி மாறியிருக்கின்றது. இதேபோல், இந்தியாவில் லெக்சஸ் எல்எம் 350எச் சொகுசு எம்பிவிக்கும் நடிகர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் பலர் இந்த கார் மாடலை பயன்படுத்தி வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 5, 2024, 11:00 [IST]
English summary
Aishwarya rai acquires luxurious toyota vellfire priced over inr 1 crore
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+