ஒன்றரை கோடி ரூபா காரின் மீது மோதிய பஸ்! ஓனர் இவ்ளோ பெரிய ஆளா! டிரைவரை போட்டு பொளந்துட்டாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக திகழும் கார்களில் ஒன்று டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire). திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இந்த சொகுசு எம்பிவி (Luxury MPV) ரக காரை வைத்துள்ளனர். இதில், அபிஷேக் பச்சன் (Abhishek Bachchan), ஆமிர் கான் (Aamir Khan), அக்ஸய் குமார் (Akshay Kumar), அஜய் தேவ்கன் (Ajay Devgn) மற்றும் மோகன்லால் (Mohanlal) உள்ளிட்ட நடிகர்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா வெல்ஃபையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 1.22 கோடி ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையோ 1.32 கோடி ரூபாயாக இருக்கிறது. இத்தனைக்கும் இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-road Price)முறையே 1.51 கோடி ரூபாய் மற்றும் 1.64 கோடி ரூபாய் என்ற அளவில் வரும்.

இவ்வளவு விலை உயர்ந்த டொயோட்டா வெல்ஃபையர் கார் ஒன்று தற்போது சாலை விபத்தில் (Road Accident) சிக்கியுள்ளது. இது பிரபல நடிகரான அபிஷேக் பச்சனுக்கு சொந்தமானது ஆகும். பஸ் ஒன்று, அபிஷேக் பச்சனுக்கு சொந்தமான டொயோட்டா வெல்ஃபையர் காரின் பின்னால் மோதியதால், இந்த சாலை விபத்து நிகழ்ந்துள்ளது.
மும்பையில் (Mumbai) உள்ள அபிஷேக் பச்சனின் தந்தையான அமிதாப் பச்சனின் (Amitabh Bachchan) பங்களாவிற்கு அருகே இந்த சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த சாலை விபத்தின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஆரம்பத்தில் சாலை விபத்தில் சிக்கிய டொயோட்டா வெல்ஃபையர் காருக்கு உள்ளே அபிஷேக் பச்சனின் மனைவியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் (Aishwarya Rai) இருந்ததாக தகவல்கள் வெளியானது. இதன் காரணமாக ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் விபத்து நடைபெற்ற சமயத்தில் ஐஸ்வர்யா ராய் காரில் இல்லை என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஐஸ்வர்யா ராயின் ரசிகர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சாலை விபத்து நடைபெற்ற உடன் அமிதாப் பச்சனின் இல்லத்தில் பணியாற்றி வரும் பவுன்சர் (Bouncer) ஒருவர், காரின் மீது மோதிய பஸ்ஸின் டிரைவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் பின்னர் தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதன் காரணமாக பஸ் டிரைவர் காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சாலை விபத்தில் சிக்கியுள்ள டொயோட்டா வெல்ஃபையர் கார் வாங்கப்பட்டு இன்னும் முழுமையாக ஒரு வருடம் கூட ஆகவில்லை. கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில்தான் இந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அதற்குள்ளாக சாலை விபத்தில் சிக்கியுள்ளது. ஆனால் இது சிறிய அளவிலான சாலை விபத்து மட்டுமே என்பதால், பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சாலையில் வாகனங்களை இயக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் மீண்டும் ஒரு முறை நமக்கு உணர்த்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த சாலை விபத்து எப்படி நடந்தது? கார் டிரைவர் மீது தவறா? அல்லது பஸ் டிரைவர் மீது தவறா? என்ற விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும் இந்த சாலை விபத்தால், டொயோட்டா வெல்ஃபையர் காருக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சாலை விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications








