பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி குடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்! உண்மையான காரணம் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

தென் இந்திய திரையுலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh). தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், காக்கா முட்டை மற்றும் கனா உள்பட பல்வேறு வெற்றிப்படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்த சூழலில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், டிரைவர் ஜமுனா (Driver Jamuna) என்ற புதிய திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், டிரைவராக நடித்துள்ளார். டிரைவர் தொழிலில் தற்போது முழுக்க முழுக்க ஆண்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆனால் கார் மட்டுமல்லாது, லாரி மற்றும் பஸ் போன்ற பெரிய வாகனங்களையும் பெண்கள் தற்போது ஓட்ட தொடங்கியுள்ளனர். முறையான பயிற்சியை பெற்று திறன்மிக்க டிரைவர்களாகவும் அவர்கள் உருவெடுத்து வருகின்றனர்.

பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி குடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்! உண்மையான காரணம் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!
Image Courtesy: The News Glory

இப்படிப்பட்ட சூழலில்தான் டிரைவர் ஜமுனா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் டிரைவராக நடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. ஒரு சில காட்சிகளை தவிர்த்து விட்டு பார்த்தால், படம் பிரமாதமாக இருப்பதாக விமர்சகர்கள் தங்கள் கருத்தை முன் வைத்து வருகின்றனர். குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு அட்டகாசமாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். எனவே ஐஸ்வர்யா ராஜேஷின் திரையுலக பயணத்தில், டிரைவர் ஜமுனா முக்கியமான ஒரு இடத்தை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் டிரைவர் ஜமுனா படத்தின் ப்ரொமோஷன் பணிகளின் ஒரு பகுதியாக, 40 ஆட்டோ மற்றும் கால் டாக்சி டிரைவர்களை ஐஸ்வர்யா ராஜேஷ் சந்தித்தார். அவர்கள் அனைவருமே பெண்கள் என்பதுதான் இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சம். இந்த நிகழ்ச்சி சென்னையில் (Chennai) நடைபெற்றது. அப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து, அவர்கள் அனைவரும் டிரைவர் ஜமுனா படத்தின் ஸ்பெஷல் ஷோ-வை கண்டுகளித்தனர். இந்த நிகழ்ச்சியின்போது, 40 பெண் ஆட்டோ மற்றும் கால் டாக்சி டிரைவர்களும் தங்கள் கஷ்ட, நஷ்டங்களை எல்லாம் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் பகிர்ந்து கொண்டனர்.

அத்துடன் டிரைவராக பணியாற்றும்போது நடந்து வரும் சுவாரஸ்யமான விஷயங்களையும் அவர்கள் தெரிவித்தனர். இதில், ஒரு பெண்ணுக்கு, ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஆம், 40 பெண் டிரைவர்களில் ஒருவரை தேர்வு செய்து, அவருக்கு புதிய ஆட்டோ ஒன்றை ஐஸ்வர்யா ராஜேஷ் பரிசாக வழங்கியுள்ளார். டிரைவர் ஜமுனா படக்குழுவின் சார்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த பரிசை வழங்கினார். அந்த பெண் ஆட்டோ டிரைவர் கஷ்டத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே வெறும் ப்ரொமோஷனுக்காக மட்டுமல்லாமல், உண்மையில் அவரின் ஏழ்மையை நிலையை அறிந்தே இந்த பரிசு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே அந்த பெண் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு, இந்த பரிசு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி, டிரைவர் தொழிலில் தற்போது பெண்களும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளனர். சென்னை மற்றும் பெங்களூர் போன்ற பெரு நகரங்களில், பெண் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி டிரைவர்களை தற்போது அதிகமாக காண முடிகிறது. எதிர்காலத்தில் இன்னும் நிறைய பெண்கள், இந்த தொழிலில் கால்தடம் பதிப்பார்கள் என நாம் எதிர்பார்க்கலாம்.

இதற்கிடையே பிரபல நடிகை ஒருவர் சமீபத்தில் தனக்காக புதிய ஆட்டோ ஒன்றை வாங்கியுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள குல் பனாக் (Gul Panag) பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். மஹிந்திரா ஜோர் க்ராண்ட் (Mahindra Zor Grand) எலெக்ட்ரிக் ஆட்டோவைதான், நடிகை குல் பனாக் தற்போது வாங்கியுள்ளார். பிரபல நடிகை ஒருவர் ஆட்டோ வாங்கியிருப்பது, அதுவும் எலெக்ட்ரிக் ஆட்டோ வாங்கியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை குல் பனாக், நடிப்புடன் சேர்த்து, வாகனங்களையும் காதலித்து வருகிறார். எனவே மிகவும் வித்தியாசமாக எலெக்ட்ரிக் ஆட்டோவை அவர் வாங்கியுள்ளார். பொதுவாக நடிகைகள் எல்லாம் மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்களை வாங்கி கொண்டுள்ள நிலையில், நடிகை குல் பனாக் மிகவும் வித்தியாசமாக எலெக்ட்ரிக் ஆட்டோவை வாங்கியிருப்பது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.

Article Published On: Monday, January 2, 2023, 12:30 [IST]
English summary
Aishwarya rajesh gifts female driver an auto
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+