திடீர்னு ரோட்ல வந்த இந்த 2 கோடி ரூபாய் கார் அவரோடதா! இனி எங்கயாச்சும் பாத்தா பின்னாடியே போயிரணும்!

இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு மிகவும் பிரபலமானவர் அஜய் தேவ்கன் (Ajay Devgn). இவர் பாலிவுட் திரையுலகை சேர்ந்தவர் என்றாலும் கூட, அனைவராலும் கொண்டாடப்படுகிறார். மற்ற நடிகர், நடிகைகளை போலவே, இவரும் கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

அஜய் தேவ்கனிடம் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) உள்பட பல்வேறு நிறுவனங்களின் கார்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு எலெக்ட்ரிக் கார் கூட இல்லாமல் இருந்தது. அந்த குறையை அஜய் தேவ்கன் தற்போது நிவர்த்தி செய்துள்ளார். ஆம், முதல் முறையாக புதிய எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஒன்றை அஜய் தேவ்கன் சமீபத்தில் வாங்கியுள்ளார்.

Ajay Devgn BMW i7 Electric Car

அது பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) கார் ஆகும். இது சொகுசு செடான் ரகத்தை சேர்ந்த எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று. அஜய் தேவ்கனின் பிஎம்டபிள்யூ ஐ7 கார் சாலையில் பயணம் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ (Video), யூடியூப் (YouTube) தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இது அஜய் தேவ்கனின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் காரில், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும், 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளன. அஜய் தேவ்கன் வாங்கியிருப்பது எக்ஸ்டிரைவ் 60 வேரியண்ட் (xDrive 60 Variant) ஆகும். இந்த ஒரு வேரியண்ட் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு ஆக்ஸிலும் தலா ஒன்று என 2 எலெக்ட்ரிக் மோட்டார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

BMW i7

அவை 544 ஹெச்பி பவர் மற்றும் 745 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்தது. இந்த எலெக்ட்ரிக் காரில், 101.7 kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 591 கிலோ மீட்டர்கள் முதல் 625 கிலோ மீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் (Range) கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் கார் அதிகபட்சமாக மணிக்கு 239 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் என பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 4.7 வினாடிகளுக்கு உள்ளாகவே எட்டி விடக்கூடிய திறனை பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் காரின் விலை 1.95 கோடி ரூபாயாக உள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். எக்ஸ் ஷோரூம் விலையே கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் வரக்கூடிய ஒரு காரை அஜய் தேவ்கன் வாங்கியிருப்பது, அவரது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா தற்போது மிக வேகமாக எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறி வருகிறது. இப்படிப்பட் ஒரு நேரத்தில் அஜய் தேவ்கன் எலெக்ட்ரிக் காரை வாங்கியிருப்பது, உண்மையிலேயே நல்ல விஷயம்தான். இது அவரை பின்பற்றுபவர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 30, 2023, 13:30 [IST]
English summary
Ajay devgn buys bmw i7 electric car price range features all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+