3 கோடி ரூபாய் சொகுசு காரில் வந்தது இவரா! முன்னாடி நல்லா உத்து பாத்தப்பதான் அந்த விஷயம் தெரிஞ்சுது!
பிரபல நடிகர், நடிகைகள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை பயன்படுத்தி வருகின்றனர். திரையுலக நட்சத்திரங்களின் சொகுசு கார் கலெக்ஸன்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் பலமுறை வெளியிட்டுள்ளது. திரையுலக நட்சத்திரங்களில் அதிக சொகுசு கார்களை வைத்திருப்பவர்களில் மிகவும் முக்கியமானவர் அஜய் தேவ்கன் (Ajay Devgn).
இவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan), பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series), பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7), ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue), ஆடி க்யூ7 (Audi Q7), ஆடி ஏ5 ஸ்போர்ட்பேக் (Audi A5 Sportback) மற்றும் மினி கூப்பர் (Mini Cooper) உள்பட பல்வேறு சொகுசு கார்கள் இருக்கின்றன.

இதுதவிர மெர்சிடிஸ்-மேபேக் ஜிஎல்எஸ்600 (Mercedes-Maybach GLS600) கார் ஒன்றும் அஜய் தேவ்கனிடம் உள்ளது. இது சொகுசு எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் விலை (Price) சுமார் 3 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. திரைப்பட நிகழ்ச்சி ஒன்றுக்கு, அஜய் தேவ்கன் இந்த காரில் வந்த வீடியோ (Video) ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
யூடியூப் (YouTube) தளத்தில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. திரைப்பட நிகழ்ச்சி நடைபெற்ற கட்டிடத்தின் வளாகத்திற்குள் இந்த கார் வருவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. பின்னர் அஜய் தேவ்கன் காரின் முன் பக்க பயணியின் இருக்கையில் இருந்து இறங்கி செல்கிறார். அத்துடன் இந்த வீடியோவில் மற்ற நடிகர், நடிகைகள் புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதையும் நாம் காணலாம்.

இந்த காரின் முன் பகுதியின் கீழே சற்று உன்னிப்பாக கவனிக்கும்போது, எலுமிச்சை பழம் கட்டப்பட்டிருப்பது தெரியவருகிறது. இது இந்திய மக்கள் மத்தியில் பொதுவாக காணப்படும் ஒரு நம்பிக்கை ஆகும். கோயில்களில் வைத்து பூஜிக்கப்பட்ட எலுமிச்சை பழங்களை கட்டுவதன் மூலம் விபத்துக்கள் நடைபெறுவது தடுக்கப்படும் என மக்கள் நம்புகின்றனர்.
ஆனால் அஜய் தேவ்கன் போன்ற மிகவும் பிரபலமான ஒரு நடிகரின் காரிலும், எலுமிச்சை பழம் கட்டப்பட்டிருப்பது நமக்கு சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அஜய் தேவ்கனின் மெர்சிடிஸ்-மேபேக் ஜிஎல்எஸ்600 காரில், 4.0 லிட்டர் வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் இன்ஜின் அதிகபட்சமாக 557 பிஎஸ் பவர் மற்றும் 730 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஹைப்ரிட் சிஸ்டம் கூடுதலாக 22 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்கும். இந்த காரின் இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இன்ஜின் உருவாக்கும் சக்தியை, இது காரின் 4 சக்கரங்களுக்கும் அனுப்புகிறது. மெர்சிடிஸ்-மேபேக் ஜிஎல்எஸ்600 காரில் ஏராளமான சொகுசு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே கோடிகளில் புரளும் திரைத்துறையினர் மற்றும் தொழில் அதிபர்கள் போன்றவர்கள் மத்தியில் இந்த கார் மிகவும் பிரபலமாக திகழ்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அஜய் தேவ்கன் இதற்கு முன்பாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் போன்ற கார்களில் வலம் வந்ததை நாம் பார்த்துள்ளோம். இந்த வரிசையில் தற்போது மெர்சிடிஸ்-மேபேக் ஜிஎல்எஸ்600 காரில் அவர் வலம் வந்துள்ளார். வரும் காலங்களில் அவர் இன்னும் நிறைய கார்களை வாங்க நாம் நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.
இங்கே ஒரு விஷயத்தை ஆரம்பத்திலேயே குறிப்பிட தவறி விட்டோம். அஜய் தேவ்கனிடம் பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) காரும் உள்ளது. இது எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இதுதான் அஜய் தேவ்கன் வாங்கிய முதல் எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications