அந்த பிரபல நடிகரின் அக்கா மகனா இது? மஹிந்திரா எப்போ காருக்கு புக்கிங் துவங்குனு காத்துக்கிடந்தார் போல!!

அஜய் தேவ்கான் (Ajay Devgn), இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டதுபோல் இருக்கிறதா? பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் நடிகை கஜோல் (Kajol)-இன் கணவர். 1990களில் இருந்து சுமார் 125க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள அனுபவமிக்க நடிகரான அஜய் தேவ்கானை ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' (RRR) திரைப்படத்தில் ராம் சரணின் ஃபிளேஷ்பேக் தந்தை கதாபாத்திரத்தில் பார்க்க முடியும். அஜய் தேவ்கானின் சகோதரியான நீலம் தேவ்கான் (Neelam Devgan)-உம் நடிகை ஆவார். இவருக்கு மகனாக, நடிகர் அஜய் தேவ்கானுக்கு மச்சானாக இருக்கும் டேனிஷ் தேவ்கான் (Danish Devgan) புதியதாக மஹிந்திரா எக்ஸ்.இ.வி 9இ (Mahindra XEV 9e) என்கிற விலைமிக்க மஹிந்திரா எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ வாங்கி உள்ளார்.

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில்தான் அதன் புதிய பி.இ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களின் டெலிவிரிகளை துவங்கியது. மாடர்ன் மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களாக விளங்கும் இவற்றின் விலைமிக்க டாப் வேரியண்ட்களின் டெலிவிரிகள் மட்டுமே தற்போதைக்கு துவங்கப்பட்டுள்ளது. விலை குறைவான வேரியண்ட்களின் டெலிவிரிகள் ஜூன் மாதத்தில் இருந்துதான் துவங்க உள்ளன.

danish devgn buys mahindra xev9e

பிஇ 6 எலக்ட்ரிக் காரை காட்டிலும் எக்ஸ்இவி 9இ விலைமிக்கதாக உள்ளது. ரூ.21.90 லட்சத்தில் இருந்து ரூ.30.50 லட்சம் வரையில் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.30.50 லட்சம் மதிப்பிலான எக்ஸ்இவி 9இ பேக்-3 காரின் டெலிவிரிகள் மட்டுமே தற்போதைக்கு துவங்கப்பட்டுள்ளன. ரூ.30.50 லட்சம் என்பது இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். இவ்வளவு விலை கொடுத்து வாங்குவது நம் நாட்டு மிடில்-கிளாஸ் மக்களால் இயலாது. இதனாலேயே, கடந்த சில நாட்களாக எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்றுவரும் கஸ்டமர்கள் எல்லாருமே செல்வந்தர்களாகவும், அரசியல் அல்லது சினிமா பிரபலங்களாகவும் உள்ளனர்.

danish devgn buys mahindra xev9e

இந்த வரிசையில், தற்போது எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்றிருக்கும் நடிகர் அஜய் தேவ்கானின் அக்கா மகன் டேனிஷ் தேவ்கான் பார்க்க சினிமா நடிகர் போன்று இருந்தாலும், சினிமாவில் இயக்குனராக பணியாற்றவே அவருக்கு விருப்பம் ஆகும். 2023ஆம் ஆண்டில் முதல்முறையாக ஒரு இசை பாடலை இயக்கி வெளியிட்டார்.

இதற்கிடையில், புதியதாக மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை புக் செய்து டெலிவிரி பெற்றுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், முற்றிலும் கருப்பு நிறத்திலான எக்ஸ்இவி 9இ காரை டேனிஷ் தேவ்கான் டெலிவிரி பெறுவதை பார்க்க முடிகிறது. காருக்கு மேட்சிங்காக ஷோரூமுக்கு கருப்பு நிற உடையில் சென்றுள்ளார்.

danish devgn buys mahindra xev9e

காரில் வெள்ளை நிறத்திலான நம்பர் பிளேட் (Number Plate) பொருத்தப்பட்டு இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பச்சை நிற நம்பர் பிளேட் பொருத்தப்படுகிறது. டேனிஷ் தேவ்கான் வாங்கியிருக்கும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரில் வெள்ளை நிற நம்பர் பிளேட்டின் ஓரத்தில் பச்சை நிற பேட்ஜ் இருப்பதை காணலாம்.

எலக்ட்ரிக் கார்களுக்கு இவ்வாறான நம்பர் பிளேட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்களா? அல்லது டேனிஷ் தேவ்கான் இவ்வாறு நம்பர் பிளேட்டை கேட்டு வாங்கி பொருத்திக் கொண்டாரா என்பது தெரியவில்லை. டேனிஷ் தேவ்கானுக்காக என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நம்பர் பிளேட் போன்று இது தெரியவில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு நேர்த்தியானதாக இந்த நம்பர் பிளேட் காட்சியளிக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனத்தின் நம்பர் பிளேட்டில் யாராக இருந்தாலும் கை வைக்க முடியாது. அதில் மாற்றம் செய்வது சட்டத்தை மீறிய செயல் ஆகும். அவ்வாறான செயலில் டேனிஷ் தேவ்கான் ஈடுப்பட்டிருக்க மாட்டார் என நம்புகிறோம். ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரில் ஏகப்பட்ட சிறப்பம்சங்களை மஹிந்திரா நிறுவனம் வழங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 27, 2025, 17:49 [IST]
English summary
Ajay devgn sister son danish devgn takes delivery of mahindra xev9e electric car
மேலும்... #celebrity car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X