வேகன் ஆர் ஓட்னவருக்கு வந்த வாழ்வு! 3.50 கோடி ரூபாய் காரை வாங்னது அவரா! யார்னு தெரிஞ்சதும் மிரண்டு போன மக்கள்!

இந்தியாவை சேர்ந்த மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ரஹானே (Rahane). இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 (Mercedes Maybach GLS 600) ஆகும். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது.

ரஹானே தற்போது வாங்கியுள்ள மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 சொகுசு எஸ்யூவி காரின் விலை சுமார் 3.50 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது மனைவி ராதிகா (Radhika) உடன் சென்று, இந்த சொகுசு எஸ்யூவி காரை ரஹானே டெலிவரி எடுத்துள்ளார்.

Ajinkya Rahane Brings Home A Mercedes Maybach GLS 600

அந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகின்றன. மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 சொகுசு எஸ்யூவி காரில் பொருத்தப்பட்டிருப்பது, 4.0 லிட்டர் வி8 இன்ஜின் ஆகும். இத்துடன் 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, இதன் மூலமாக, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. மிகவும் விலை உயர்ந்த இந்த காரில், அதிநவீன வசதிகளுக்கும் பஞ்சமில்லை. எலெக்ட்ரானிக் பனரோமிக் ஸ்லைடிங் சன்ரூஃப், வென்டிலேட்டட் மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்றவற்றை இந்த காரின் முக்கியமான வசதிகளாக கூறலாம்.

Maruti Suzuki Wagon R

ஆனால் ரஹானே வாங்கியுள்ள முதல் சொகுசு கார் இது கிடையாது. இதற்கு முன்பாக ஏராளமான சொகுசு கார்களை ரஹானே வைத்துள்ளார். இதில், பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் (BMW 6 Series) மற்றும் ஆடி க்யூ5 (Audi Q5) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இன்றைக்கு இவ்வளவு விலை உயர்ந்த கார்களை ஓட்டி கொண்டிருந்தாலும் கூட, ரஹானேவின் ஆரம்ப காலம் அவ்வளவு இனிமையானதாக இருந்ததில்லை.

அதாவது ஆரம்ப கால கட்டத்தில் மிகவும் விலை குறைவான மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) காரில்தான், ரஹானேவும், அவரது குடும்பமும் பயணம் செய்து கொண்டிருந்தது. அதுவும் கூட யூஸ்டு கார் (Used Car) என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கிரிக்கெட்டில் இருந்த திறமையால் ரஹானே படிப்படியாக முன்னேறினார்.

இதன் காரணமாகவே அவரால் இன்று பல கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கார்களை கூட வாங்க முடியாது. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை ஓட்டி கொண்டிருந்த ஒருவர் தற்போது 3.50 கோடி ரூபாய் விலை கொண்ட மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 சொகுசு எஸ்யூவி காரை வாங்கியுள்ளார் என்பது அனைவருக்கும் தன்னம்பிக்கை அளிக்க கூடிய ஒரு விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதை, கிரிக்கெட் வீரர் ரஹானேவின் கதை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக விலை உயர்ந்த கார்களை வாங்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள், ரஹானேவின் கதையை முன்னுதாரணமாக எடுத்து கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 21, 2024, 14:33 [IST]
English summary
Ajinkya rahane brings home a mercedes maybach gls 600 luxury suv full details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+