1 வினாடியில் எல்லாம் முடிந்தது! அஜித் அந்த நேரம் மட்டும் சமாளிச்சி இருந்தாரு ஜெயிச்சி இருப்பாரு

ஐயோ மீண்டும் மீண்டுமா...? என கேட்கும் அளவிற்கும் நடிகர் அஜித்குமார் (Actor Ajithkumar) மீண்டும் கார் விபத்தில் சிக்கியுள்ளார். சமீப காலத்தில் கார் பந்தயங்களில் நடிகர் அஜித் சந்தித்துள்ள 3வது விபத்து இதுவாகும். அஜித் ஓட்டிய ரேஸ் கார் விபத்தில் சிக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது நடிகர் அஜித்குமார் எவ்வாறு உள்ளார்? எங்கு நடந்தது இந்த சம்பவம்? வாருங்களை அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

முன்னணி தமிழ் நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு இருந்தே கார் ரேஸர் என்பது ஊரறிந்த விஷயம். இருப்பினும், அஜித்தின் பயணம் சினிமாவை நோக்கி வந்தது. ஆனால், சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதை காட்டிலும் பைக் & கார் பந்தயங்களிலும், பயணங்களிலும் ஈடுப்படுவதற்கே நடிகர் அஜித் முனைப்பு காட்டி வருகிறார்.

ajith car accident in spain

சண்டையில் கிழியாத சட்டையா என்பதுபோல், கார் பந்தயங்களில் ஈடுப்படும்போது அவ்வப்போது அஜித் விபத்தில் சிக்கி விடுகிறார். கடந்த ஜனவரி மாதத்தில் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்திற்கான பயிற்சியின் போது நடிகர் அஜித் விபத்தில் சிக்கியது பெரிதும் கவனத்தை பெற்றது. அந்த விபத்தில் அஜித்துக்கு எந்தவொரு காயமும் இல்லை.

இருப்பினும், துபாயில் நடைபெற்ற அந்த பயிற்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியது. அதேபோல், தற்போதைய அஜித் கார் விபத்து தொடர்பான வீடியோவும் கவனத்தை பெற்றுள்ளது. ஸ்பெயின் நாட்டின் வெலன்சியாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்துக் கொண்ட போது இந்த விபத்தில் அஜித் சிக்கியுள்ளார்.

ajith car accident in spain

துபாயில் நடைபெற்ற பந்தயத்தில், வளைவில் திரும்புபோது ரேஸ் காரின் கண்ட்ரோலை இழந்து விபத்தில் சிக்கினார். தற்போது, வேறொரு கார் டிரைவரால் விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா (Suresh Chandra) எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், வேறொரு டிரைவரால் அஜித் விபத்தில் சிக்குவதை காணலாம்.

பந்தயத்தில் 5வது சுற்று வரையில் சிறப்பாக கார் ஓட்டி 14வது இடத்தை பிடித்திருந்த நிலையில், 6வது சுற்றில் முன்னால் சென்றுக் கொண்டிருந்த வேறொரு கார் டிரைவரால் அஜித் விபத்தில் சிக்கியுள்ளார். நடிகர் அஜித்தின் காருக்கு இடதுப்பக்கத்தில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென வலது நோக்கி திரும்புவதை சுரேஷ் சந்த்ரா வெளியிட்டுள்ள வீடியோவில் காணலாம்.

ajith car accident in spain

அதிவேகமாக சென்றுக் கொண்டிருக்கும்போது திடீரென முன்னால் சென்றுக் கொண்டிருந்த கார் தனது பாதையில் வந்ததும் அஜித்தால் சமாளிக்க முடியவில்லை. அந்த காரின் பின்பக்கத்துடன் மோதிய போதும் ஒரு வினாடியில் காரை மீண்டும் அஜித் கண்ட்ரோலுக்கு கொண்டுவந்து விட்டார். ஆனால், மோதலுக்கு உள்ளான அந்த கார் சுற்றிக்கொண்டே அஜித்தின் கார் மீது மீண்டும் மோதியதில் அஜித்தின் கார் நிலை குலைந்துவிட்டது.

மோதிய வேகத்தில் 2,3 முறை கார் புரண்டது. இந்த விபத்தில் நடிகர் அஜித்துக்கு கால்பாத முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே, நடிகர் அஜித் போன்ற கார் ரேஸர்கள் தங்களது பந்தய கார்களை தங்களது ஸ்டைலுக்கு ஏற்ப தாங்களே வடிவமைத்து கொள்வர். துபாயில் நடைபெற்ற பந்தயத்தில் நடிகர் அஜித்தின் கார் விபத்தில் சிக்கியதற்கு, பிரேக் பெயிலியர் (Brake Failure) காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித் தனது இளமை பருவத்துக்கு அடுத்து நீண்ட வருடங்களுக்கு பின் கார் பந்தயங்களில் ஈடுப்பட துவங்கியுள்ளார். ஆகையால், இவ்வாறான எதிர்பாராத விபத்துகளை பந்தய களத்தில் சந்திக்கும்போது துரிதமாக என்ன செய்ய வேண்டும் என்கிற பயிற்சி இனி போக போக தான் அஜித்துக்கு கிடைக்க வரும். இருப்பினும், ஸ்பெயினில் தற்போது நடைபெற்றுள்ள விபத்தில், முன்னால் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென இவ்வாறு திரும்பும்போது ஒன்றுமே செய்ய முடியாது.

More from DriveSpark

Article Published On: Monday, February 24, 2025, 11:23 [IST]
English summary
Ajith car accident in spain this is main reason check all details here
மேலும்... #car accident #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X