திடீரென கார் ரேஸிலிருந்து விலகிய அஜித்! இப்ப என்னாச்சு தெரியுமா?

நடிகர் அஜித் குமார் துபாயில் நடந்து வரும் 24 ஹெச் சீரிஸ் கார் பந்தய போட்டியில் இருந்து தற்போது விளங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அணியின் நன்மைக்காகவும் புதிய யுக்தியை கார் பந்தைய போட்டியில் கையாளும் விதமாகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தற்போது அறிவித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர். இவருக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஏகப்பட்ட மக்கள் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இவரது பட வெளியீடு தமிழகத்தையே ஒரு திருவிழாவாக மாற்றிவிடும் அளவுக்கு பெரிய செல்வாக்கு படைத்தவராக இருக்கிறார். இவர் ஆரம்ப வாழ்க்கையிலேயே கார், பைக் மீது அதிக காதல் கொண்டவராக இருந்துள்ளார். கார் பைக் பந்தய போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

ajith car race

கடந்த சில ஆண்டுகளாக கார் பைக் பந்தயப் போட்டிகளில் இருந்து பின்வாங்கி இருந்த இவர் சமீபத்தில் தனக்கென புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கினார். அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த அணி துபாயில் இன்று நடந்து வரும் கார்பந்தய போட்டியில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தது. இதற்காக இவர் போர்ஷே நிறுவனத்தின் காரை எல்லாம் சொந்தமாக வாங்கி இருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது.

அஜித் குமார் ரேஸிங் அணியின் டிரைவர்களாக சில வெளிநாட்டு ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் நடிகர் அஜித்குமாரும் ஒரு டிரைவராக இருந்தார். இந்நிலையில் இன்று ரேஸ் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட போது நேற்று அதற்கான தகுதி சுற்று நடந்தது. இதில் நடிகர் அஜித்குமார் ஓட்டிய கார் போட்டியில் 7வது இடத்தை பிடித்தது.

ajith car race

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் தரப்பில் இருந்து மற்றொரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி 24 ஹெச் சீரிஸ் கார் ரேஸ் போட்டியிலிருந்து நடிகர் அஜித்குமார் விலக்குவதாக அறிவித்துள்ளார். அவரது அணி தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் எனவும், நடிகர் அஜித்குமார் மட்டும்ம் அதில் டிரைவராக இனி இருக்க மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸில் வெற்றி பெறுவதற்கான யுக்தியை மாற்றி உள்ளதாகவும், அதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும். அவரது சொந்த விருப்பங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அணி வெற்றி பெற வேண்டும் என அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் 24 ஹெச் சீரிஸ் கார் பந்தைய போட்டியில் தொடர்ந்து ஒரு போட்டியாளராகவே தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார் இந்த கார் பந்தய போட்டிக்காக போர்ஷே நிறுவனத்தின் 992 கப் கார் என்ற காரை சொந்தமாக வாங்கியுள்ளார். இதற்கான பயிற்சியின் போது இவர் சிறிய விபத்தில் சிக்கிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இந்நிலையில் நேற்று அதையெல்லாம் தாண்டி தகுதி சுற்றில் ஏழாவது இடத்தை பிடித்தார்.

இருந்தாலும் தற்போது இவர் போட்டியிலிருந்து விலகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இவர் இந்த போட்டியில் பங்கேற்றார் என்பதற்காகவே இந்த போட்டியில் ஏராளமான பார்வையாளர்கள் வந்து குவிந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு துபாய் கார் ரேஸ் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாக டிக்கெட் புக்கிங் செய்து பார்ப்பதற்காக நேரில் வந்துள்ளார்கள்.

இது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பலர் இவரது போட்டியை நேரலையில் காண்பதற்காக யூடியூப்ல் ஏகப்பட்ட பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஏமாற்றம் தரும் விஷயமாக நடிகர் அஜித்குமார் இந்த போட்டியில் பங்கேற்க போவதில்லை என்ற செய்தி வெளியாகி உள்ளது. இருந்தாலும் அவர் அணி பங்கேற்பதால் அவர்கள் ரசிகர்கள் அவர்கள் அணிக்கு உற்சாகமூட்டும் விதமாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: துபாயில் நடந்து வரும் கார் பந்தைய போட்டியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொள்ள போவதாக செய்தி வெளியான முதல் அந்த கார் பந்தையம் குறித்து பலர் ஆர்வமாக தேடி வந்தார்கள். இந்நிலையில் நடிகர் அஜித்குமார் அதில் பங்கேற்பார் என பலர் காத்துக் கொண்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவர் விளக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது பலரை அதிர்ச்சியை வைத்துள்ளது. ஆனால் அணியின் நன்மைக்காகவும் வெற்றிக்கான யுக்தியை செயல்படுத்தவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது நிச்சயம் பாராட்டத்தக்கது தான்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 11, 2025, 17:59 [IST]
English summary
Ajith car race quits dubai 24h series car race shocks fans
மேலும்... #car race
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+