அஜித் மாதிரி ஒரு புருஷன் கிடைக்க குடுத்து வச்சிருக்கனும்! ஷாலினிக்கு என்ன கார் வாங்கி குடுத்தாரு தெரியுமா?

நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியின் 44 வது பிறந்தநாளுக்கு ரூபாய் ஒரு கோடிக்கு அதிகமான மதிப்பு கொண்ட லெக்சஸ் நிறுவனத்தின் காரை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இது வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்த ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் திரைப்படம் வருவது தமிழ்நாட்டில் ஒரு திருவிழா போல கொண்டாடப்படும்.

ajith gift shalini lexus car

தற்போது இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்த வருகிறார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த 20ம் தேதி இவரது மனைவியான நடிகை ஷாலினிக்கு பிறந்தநாள் வந்தது. இந்த பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அஜித்குமார் இவருக்கு பரிசு வழங்கியுள்ளார்.

கணவர் அஜித்குமார் மனைவி ஷாலினிக்கு லெக்ஸஸ் நிறுவனத்தின் ஆர்எக்ஸ் 350எச் என்ற கார் ஒன்றை வாங்கி பரிசாக வழங்கியுள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தனது மனைவிக்காக கணவர் அதிக விலைக்கு கொடுத்து வாங்கிய கார் குறித்து பலர் தற்போது பேசி வருகிறார்கள். இந்த காரில் உள்ள அம்சங்கள் பலரை ஈர்க்கும் விதமாக இருக்கிறது.

ajith gift shalini lexus car

லெக்சஸ் நிறுவனத்தின் டாப் மாடல் காராக இந்த rx என்ற வேரியன்ட் கார்தான் இருக்கிறது. இந்த கார் இந்திய மார்க்கெட்டில் ரூபாய் 99.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் விலையில் விற்பனையாகி வரும் நிலையில், இந்த காரில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த காரை பலர் விரும்பி வாங்கி வருகிறார்கள்.

லெக்சஸ் ஆர்எக்ஸ் 350 லக்ஸரி காரை பொறுத்தவரை 2487 சிசி ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் ஒரே நேரத்தில் எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு விதமான இன்ஜின்களிலம் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் நேரடியாக ஆட்டோமேட்டிக் இ-சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தி 190 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ajith gift shalini lexus car

இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் விற்பனைக்கு வருகிறது. அதிகபட்சமாக 200 முதல் 210 கிலோமீட்டர் வேகமாக பயணிக்கும் திறன் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய மார்க்கெட்டில் ரூபாய் 99.99 லட்சம் என்ற விலையில் இந்த கார் விற்பனையாகி வருகிறது.

அது மட்டுமில்லாமல் இந்த கார் மொத்தம் 9 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதில் நடிகை ஷாலினிக்கு வழங்கப்பட்டது டைட்டானியம் நிற காராகும். பொதுவாக சினிமா பரபலங்கள் இப்படியான காஸ்ட்லியாக காரை வாங்கி பயன்படுத்துவது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த கார்களில் பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு சொகுசு வசதிகளும் இருப்பதால் பலர் நிலை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

இது மட்டுமில்லாமல் அவர்கள் பயன்படுத்தும் கார் அவர்களுக்கான சமூக அந்தஸ்தை ஏற்படுத்தி தருகிறது. இதனால் அவர்கள் இந்த பிராண்டின் காரை வாங்குகிறார்கள் என்று மக்கள் பலர் கவனிப்பதால் இதுவும் முக்கியத்துவம் பெறுகிறது. இன்று சினிமா பிரபலங்கள் பலர் லெக்ஸஸ் நிறுவனத்தின் கார்களை தான் அதிகமாக இருக்கிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மனைவியின் பிறந்தநாளுக்கு கணவன்மார்கள் பரிசளிப்பது என்பது சாதாரண ஒரு விஷயமாக தான் இருக்கும். ஆனால் நடிகர் அஜித்குமார் தனது மனைவிக்காக இவ்வளவு காஸ்டிலியான கிஃப்டை வாங்கி அவரது பிறந்தநாளுக்கு பரிசளித்திருப்பது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த காரின் விலையை கேட்டு பலர் ஆச்சரியப்பட்டு நிற்கிறார்கள். நிச்சயம் இது வரவேற்கத்தக்க காரியம்தான்.

More from DriveSpark

Article Published On: Friday, November 22, 2024, 13:41 [IST]
English summary
Ajith gift shalini lexus rx 350h car birthday
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X