ரூ.25 லட்சத்தில் பைக்கை வாங்கி கொடுத்துட்டு மீண்டும் சொல்லி காட்டும் ஷாலினி! படங்களை பார்த்து ஃபேன்ஸ் குழப்பம்

அஜித்குமார் (Ajithkumar), தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். மே 1ஆம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் என்பது ஊரறிந்த விஷயம். நடிகர் அஜித்தின் பிறந்த நாளின்போது அவரது மனைவியும் நடிகையுமான ஷாலினி (Shalini) பிறந்த நாள் பரிசை வழங்குவது வாடிக்கையாகும்.

அதேபோல், நடிகர் அஜித்குமாரும் ஷாலினியின் பிறந்தநாளுக்கு பரிசு பொருளை வழங்கி சிறப்பிப்பது உண்டு. நடிகர் அஜித்குமாரின் கடந்த ஆண்டின் பிறந்த நாளின் போது விலையுயர்ந்த டுகாட்டி (Ducati) பைக்கை ஷாலினி பரிசாக வழங்கினார். அப்போது அந்த டுகாட்டி பைக் உடன் நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட படங்கள் இணையத்தில் பெரிதும் கவனத்தை ஈர்த்தன.

shalini s gifted ducati bike

இந்த நிலையில், கடந்த ஆண்டு அஜித்தின் பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட படங்களை அவரது இந்த ஆண்டு பிறந்தநாளில் ஷாலினி வெளியிட்டுள்ளார். இதனால்தான், இந்த படங்களில் நடிகர் அஜித்தின் 53வது பிறந்த நாள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது நடிகர் அஜித்துக்கு 54 வயது நிறைவடைந்துவிட்டது. கடந்த ஒரு வருடத்தில் நடிகர் அஜித்தின் வாழ்வில் பல சம்பவங்கள் நடந்துள்ளன.

மத்திய அரசாங்கத்தின் 'பத்ம பூஷன்' (Padma Bhusan) விருதை பெற்றது, துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் வெற்றி பெற்றது, 4 மாதங்களுக்குள் அடுத்தடுத்து இரு திரைப்படங்கள் திரைக்கு வந்தது என கடந்த 1 வருடத்தில் நடிகர் அஜித் மிகவும் பிசியாக இருந்துள்ளார். பத்ம பூஷன் விருதை அஜித் வாங்கியதை படங்களுடன் பல மோட்டார்சைக்கிள் சுற்றுலா குழுக்கள் தங்களது சமீப வலைத்தள பக்கங்களில் பதிவிட்டன.

shalini s gifted ducati bike

மோட்டார்சைக்கிள் பயணங்களை மிகவும் விரும்பக்கூடியவரான நடிகர் அஜித், இந்தியாவின் பல மோட்டார்சைக்கிள் சுற்றுலா குழுக்களில் ஓர் அங்கமாக உள்ளார். இது இல்லாமல், 'அஜித் குமார் ரேசிங்' என்கிற பெயரிலும் ஒரு கார் பந்தய குழுவையும் நடிகர் அஜித் நிர்வகித்து வருகிறார். இவ்வாறு சினிமாவை தாண்டி பைக் & கார் டிரைவிங்குகளிலும் ஆர்வமிக்கவராக இருப்பதினாலேயே மனைவி பிறந்தநாள் பரிசாக வழங்கிய டுகாட்டி பைக்கை பயன்படுத்தவும் நடிகர் அஜித் மறப்பது இல்லை.

நடிகர் அஜித்துக்கு பிறந்த நாள் பரிசாக ஷாலினி வழங்கியது டுகாட்டி நிறுவனத்தின் மல்டிஸ்ட்ரடா வி4 (Multistrada V4) பைக் ஆகும். இந்த டுகாட்டி பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் மல்டிஸ்ட்ரடா வி4 பைக் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டாண்டர்ட், எஸ், ராலி மற்றும் பைக்ஸ் பீக் என்பன அந்த 4 வேரியண்ட்கள் ஆகும்.

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் சுமார் ரூ.21.48 லட்சத்தில் இருந்து ரூ.31.48 லட்சம் வரையில் உள்ளன. மொத்தம் 240 கிலோ எடை கொண்ட இந்த டுகாட்டி பைக்கில் 22 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் பொருத்தப்படுகிறது. அட்வென்ச்சர் ரக பைக் என்பதால், மல்டிஸ்ட்ரடா வி4 பைக்கில் முன் சக்கரம் சற்று பெரியதாக 19 இன்ச்சிலும், பின் சக்கரம் 17 இன்ச்சிலும் வழங்கப்படுகின்றன.

இந்த பைக்கில் 1,158சிசி லிக்யுடு-கூல்டு 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 10,500 ஆர்பிஎம்-இல் 167.62 பிஎச்பி மற்றும் 8,750 ஆர்பிஎம்-இல் 125 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த டுகாட்டி பைக்கின் மைலேஜ் ஏறக்குறைய 15km/l ஆகும். மல்டிஸ்ட்ரடா வி4 மட்டுமின்றி, விலை குறைவான மல்டிஸ்ட்ரடா வி2 பைக்கும் இந்தியாவில் டுகாட்டி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கணவர் அவ்வப்போது தொலைத்தூர பைக் பயணங்களை மேற்கொள்வார் என்பதற்காக ஆற்றல்மிக்க மல்டிஸ்ட்ரடா வி4 பைக்கை ஷாலினி வழங்கியுள்ளார். ஒரு வருடத்திற்கு முன் வழங்கிய பைக்கின் படங்களை தற்போது மீண்டும் நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டு இருப்பதில் இருந்து, இந்த பரிசை ஷாலினி எந்த அளவிற்கு அன்புடன் வழங்கியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 2, 2025, 14:00 [IST]
English summary
Ajith kumar birthday celebrations shalini shared last year gifted ducati bike pictures
மேலும்... #celebrity bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+