ரேஸ் காரில் விபத்தில் சிக்கிய அஜித்! நெஞ்சை பதற வைக்கும் பரபரப்பு வீடியோ!

துபாயில் நடிகர் அஜித் குமார் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபடும்போது விபத்தில் சிக்கிய வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விரைவில் துவங்கவுள்ள கார் ரேஸ் பந்தையத்திற்காக அவர் பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருக்கும் போது இ்நத சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் இவர் நடிப்பு மட்டுமல்லாமல் கார் பைக் ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர். ஆரம்ப காலத்திலேயே இவர் நடிப்புடன் சேர்ந்து கார், பைக் பந்தையங்களிலும் கலந்து கொண்டிருந்தார். இந்தியாவில் உள்ள வெகு சில கார் பந்தைய வீரர்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.

Ajithkumar Car Race Accident

இந்நிலையில் இவர் நீண்ட ஆண்டுகளாக கார்,பைக் பந்தையத்தில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் கார் ரேஸ் பக்கம் தனது கவனத்தை திசை திருப்பியுள்ளார். இந்த முறை ஒரு படி மேலே சென்று கார் ரேஸில் கலந்து கொள்வது மட்டுமல்லாமல் தனக்கென சொந்தமாக ஒரு கார் ரேஸிங் அணியையே உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் துபாயில் மிச்சிலியன் 24எச் என்ற கார் பந்தைய போட்டி துபாயில் நடக்கிறது. அதில் இவரது அணியும் கலந்து கொள்கிறது. இந்த போட்டிக்கான பயிற்சியில் தற்போது நடிகர் அஜித் குமார் ஈடுபட்டு வருகிறார். இந்த போட்டி மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எப்படியாவது தன் அணி வெற்றி பெற வேண்டும் என இந்த அணியில் தன்னையும் ஒரு ஓட்டுநராக இணைத்துக்கொண்டு நடிகர் அஜித் குமார் பயிற்சி பெற்று வந்தார்.

Ajithkumar Car Race Accident

இந்நிலையில் இந்த பயற்சியில் போது நடிகர் அஜித் குமார் ஓட்டி சென்ற கார் திடீரென விபத்தில் சிக்கியுள்ளார். அதிர்ஷ்ட வசமாக இந்த விபத்தில் இவருக்கு எந்த விதமான காயமும் ஏற்படவில்லை. ஆனால் இவர் பயணம் செய்த காரின் முன்பக்கம் பெரிய அளவில் சேதமாகியுள்ளது. இது குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த அதிர்ச்சியளிக்கும் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த கார் பந்தையத்திற்காக அவர் பயன்படுத்தியது போர்ஷே நிறுவனத்தின் 911 ஜி3 கப் 992 ரக கார் ஆகும். இந்த கார் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டு காவி மற்றும் சிவப்பு நிறத்தில் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் பக்கவாட்டு பகுதியில் தமிழக அரசுின் விளையாட்டு துறை லோகோவும் இடம் பெற்றுள்ளது.

Ajithkumar Car Race Accident

இந்த கார் பிரத்தியேகமாக கார் ரேஸிங் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட காராகும். இந்த கார் 3096 சிசி இன்ஜின் மூலம் இயங்குகிறது. இந்த கார் 4585 மிமீ நீளம், 1920 மிமீ அகலம், 2457 மிமி வீல் பேஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ரேஸ் கார் என்பதால் ரியர் வீல் டிரைவ் காராக இருக்கிறது. பொதுவாக ரேஸ் கார்கள் ரியர் வீல் டிரைவ் கார்களாகவே வடிவமைக்கப்படும்.

இந்த காரில் நடிகர் அஜித் குமார் பயிற்சி செய்யும் போது தான் விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து சம்பவம் தற்போது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சிறு கீறல் கூட இல்லாமல் நடிகர் அஜித்குமார் உயிர் தப்பியுள்ளார். அவர் கார் ரேஸின் போது பாதுகாப்பு அம்சங்களை சரியாக பின்பற்றியதே இவருக்கு காயம் ஏற்படாமல் தப்பிப்பதற்கான முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.

நடிகர் அஜித்குமார் விபத்தில் சிக்கிய காரின் விலை ரூ2.75 கோடியாகும். இது போ ரேஸிற்காக அவர் மாடிஃபிகேஷன் செய்திருந்தால் அதை விட அதிக பணம் அவர் செலுத்த வேண்டியது இருந்திருக்கும். தற்போது பயிற்சியின் போது இவர் கார் விபத்தில் சிக்கிய நிலையில் இவர் ரேஸில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

விபத்தில் காருக்கு ஏற்பட்ட சேதாரத்தை பொருத்தே இதற்கான முடிவுகள் எடுக்கப்படும். இன்னும் 3-4 நாட்கள் இருக்கும் நிலையில் பயிற்சியில் சேதமடைந்த காரின் சரி செய்யும் முயற்சி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக சரி செய்யும் அளவிற்கான பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டிருந்தால் நடிகர் அஜித் குமார் தாராளமாக இந்த போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் நடிகர் அஜித்குமார் இந்த காருக்கு பதிலாக இதே போன்ற மற்றொரு காரை வாங்கி ரேஸிற்காக பயன்படுத்த கூட வாய்ப்பு இருக்கிறது. விபத்து குறித்த முழு விபரங்கள் வெளியான பிறகே என்ன நடக்கும் என் தகவலும் வெளியாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித் குமார் இப்படியாக கார் பைக் ரேஸில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் இருப்பது பலருக்கு உற்சாகமாகே இருக்கிறது. இருந்தாலும் தற்போது அவர் விபத்தில் சிக்கிய சம்பவம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் அவரது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. ஆனால் விளையாட்டு என்றால் இப்படியான விஷயங்களை எல்லாம் எதிர்கொண்டு தானே ஆக வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 7, 2025, 19:14 [IST]
English summary
Ajith kumar car race accident at dubai autodrome practice watch video
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X