சூப்பர் காரை பார்த்ததும் மனுஷன் குழந்தையாவே மாறிட்டாரு.. இப்பதான் மூன்றரை கோடி ரூபா காரை வாங்கினாரு..

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், சமீபத்தில் உலகின் விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்றான போர்ஷே ஜிடி3 ஆர்எஸ் (Porsche GT3 RS)-ஐ வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் வெளியாகி ஒரு மாத காலமே ஆகின்றது. இந்த நிலையில், தற்போது அவர் மற்றுமொரு விலை உயர்ந்த காரை வாங்கும் பணியில் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் அஜித்குமார் ஓர் வாகனத்தை ஷோரூமுக்கே நேரில் சென்று ஆய்வு செய்யும் வீடியோக் காட்சிகள் வெளியாகி உள்ளன.

நடிகர் அஜித்குமார் ஆய்வு செய்தது மெக்லாரன் 750 எஸ் ஸ்பைடர் (McLaren 750S Spider), சூப்பர் கார் (Super car) வகை மாடல் ஆகும். இந்த காரையே அவர் ஷோரூமுக்கே சென்று சோதித்து பார்த்திருக்கின்றார். கார் ஷோரூமின் பணியாளர் காரை இயக்கி பார்க்க அனுமதிப்பதையும், நடிகர் அஜித் அந்த காரை ஆக்சலரேட் செய்து பார்க்கும் வீடியோவே தற்போது வெளியாகி இருக்கின்றது.

Ajith kumar checks out mclaren 750s spider supercar

இந்த நிகழ்வு எங்கு அரங்கேறியது என்பது துள்ளியமாக தெரியவில்லை. வெளிநாட்டிலேயே இந்த நிகழ்வு அரங்கேறியிருக்கும் என யூகிக்கப்படுகின்றது. அதேவேளையில், இந்த காரை அவர் வாங்கிவிட்டாரா என்பதும் தெரியவில்லை. இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவில் அஜித் அந்த காரை சோதித்து பார்க்கும் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன.

இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் இந்திய மதிப்பு மட்டுமே ரூ. 5.90 லட்சத்திற்கும் அதிகம் என கூறப்படுகின்றது. இத்தகைய அதிக விலைக் கொண்ட காரையே மிகுந்த ஆர்வத்துடன் அஜித் சோதித்து பார்த்திருக்கின்றார். அந்த காரை அவர் சோதித்து பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.

Mclaren 750s spider supercar

குறிப்பாக, ஆக்சலரேட் செய்யதபோது வெளிவந்த எக்சாஸ்ட் சத்தத்தை அவர் மெய்சிலிர்த்து போனதையும் நம்மால் பார்க்க முடிகின்றது. இந்தியாவைவிட துபாயில் இந்த கார் சற்று குறைவான விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கிறது. இதனால்தான், சமீபத்தில்கூட அஜித்குமார் துபாயில் ஓர் சூப்பர் காரை துபாயில் வைத்து வாங்கினார் என்பது கவனிக்கத்தகுந்தது.

சுமார் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபெர்ராரி காரையே அவர் வாங்கினார். இதுமட்டுமில்லைங்க, முன்னதாக பார்த்த மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள போர்ஷே ஜிடி3 ஆர்எஸ் கார் மாடலையும் அவர் துபாயிலேயே வாங்கி இருக்கின்றார். இந்த நிலையிலேயே விரைவில் மெக்லாரன் 750எஸ் ஸ்பைடர் சூப்பர் காரையும் இணைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மெக்லாரன் 750எஸ் ஸ்பைடர் ஓர் அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட சூப்பர் கார் மாடல் ஆகும். இதில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ ஃப்ளாட்-பிளேன் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 750 பிஎஸ் மற்றும் 800 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.

இந்தியாவில் நடப்பாண்டின் தொடக்கத்திலேயே 750எஸ் கார் மாடல் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதவிர, மெக்லாரன் பிராண்டின் ஆர்சுரா, ஆர்சுரா ஸ்பைடர் மற்றும் 750எஸ் ஸ்பைடர் மாடலும் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பிராண்டின் ஒரே ஒரு ஷோரூமே நாட்டில் செயல்படுகின்றது. அதுவும், மும்பையில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித் மிகப் பெரிய கார் ஆர்வலர் ஆவார். அடிக்கடி ரோட் ட்ரிப் செல்லக் கூடிய நபராகவும் அவர் காட்சியளிக்கின்றார். குறிப்பாக இரண்டு சக்கர வாகனத்திலேயே அவர் ரோட் ட்ரிப் கடந்த காலத்தில் அவர் செய்திருக்கின்றார். இதுதவிர, 'அஜித்குமார் ரேசிங்' எனும் பெயரில் ஓர் ரேசிங் குழுவையும் அவர் உருவாக்கி இருக்கின்றார். இந்த அளவிற்கே வாகனங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக அவர் உள்ளார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 16, 2024, 5:00 [IST]
English summary
Ajith kumar checks out the mclaren 750s spider supercar
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+