ஒரு நொடியில் அஜித் செய்த இந்த விஷயம் தான் அவர் உயிரை காப்பாத்தியிருக்குது! பரபரப்பு வீடியோ!

நடிகர் அஜித்குமார் இத்தாலியில் நடந்து வரும் கார் பந்தைய போட்டியில் கலந்து கொண்டார். இவர் கார் ரேஸில் ஈடுபடும்போது கார் விபத்திற்குள்ளானது. இந்த சம்பவம் பெரும்பரபரப்பான நிலையில் தற்போது அந்த விபத்து நடந்தபோது எடுக்கப்பட் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் விபத்திற்கான காரணம் தெளிவாக தெரிகிறது. விபத்து நடந்தவுடன் அஜித்குமார் எப்படி உயிர் தப்பினார் என்ற விபரம் தெரிய வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் கார் பந்தையம் பிரபலமாக இல்லை என்றாலும், நடிகர் அஜித்குமார் தனக்கென சொந்தமாக கார் பந்தைய அணியை உருவாக்கி இந்தியா சார்பில் சர்வதேச அளவில் நடக்கும் கார் பந்தைய போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இதனால் கார் பந்தையம் பிரபலமான ஒரு போட்டியாக மாறி வருகிறது.இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஜிடி 4 சிரீஸில் நடிகர் அஜித் குமார் அணி பங்கேற்று வருகிறது. அதன் ஒரு பகுதி போட்டிகள் இத்தாலியில் சமீபத்தில் நடந்தது.

Ajith Accident Video

இந்த போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற நிலையில் அவர் ஓட்டி சென்ற கார் போட்டியின் போது விபத்திற்குள்ளானது. இந்த விபத்திலிருந்து அஜித்குமார் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இந்த செய்தி வைரலான நிலையில் நடிகர் அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் தனது சமூகவலைத்தள பக்கத்தில் அஜித்குமார் விபத்தில் சிக்கியபோது காருக்குள் பதிவான வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

குறிப்பிட்ட சம்பவத்தில் நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் செல்லும் போது அங்கு பந்தையத்தில் ஈடுபட்ட மற்றொரு கார் ரேஸ் டிராக்கிலேயே பழுதாகி நின்றுள்ளது. ஒரு திருப்பத்தில் வேகமாக வந்த அஜித்குமார் கார் அந்த காரின் பின்பக்கத்தில் மோதியது. அதிக வேகத்தில் வந்ததால் அஜித்குமாரால் அந்த காரை கட்டுப்படுத்தி திருப்ப முடியவில்லை. இதனால் கார் விபத்திற்குள்ளானது.

Ajith Accident Video

இந்நிலையில் தற்போது வெளியான வீடியோவில் நடிகர் அஜித்குமார் கார்ஓட்டும்போது கார்விபத்திற்குள்ளாக போவதை ஒரு நொடி முன்னரே உணர்ந்து அவர் செய்த காரியம் தான் தற்போது அவரது உயிரையே காப்பாற்றியுள்ளது. தெரியவந்தது. அவர் கார் விபத்திற்குள்ளாகபோவதை உணர்ந்த அவர் உடனடியாக காரை வலது பக்கம் திரும்ப முயற்சி செய்தார்.

ஆனால் காரின் ஒரு பகுதி முன்பக்கம் பழுதாகி நின்ற கார் மீது மோதியது. கார்மீது மோதியதும். இவர் உடனடியாக ஸ்டியரிங்கில் இருந்து கையை எடுத்து விட்டார். கார் விபத்திற்குள்ளானதும் வந்த வேகத்தில் ஸ்டிரங்கை நாம் திரும்பினால் கார் வேகமாக ஸ்கிட்டாக வாய்ப்புள்ளது. அதனால் ஸ்டியரிங்கை விட்டால் வீல் இம்பேக்ட்டை தாங்கிகொள்ள திரும்பும் போது உதவியாக இருக்கும்.

வீல் திரும்பும் போது அதற்கு ஏற்ப ஸ்டியரிங் திரும்பும் அப்பொழுது நாம் ஸ்டிரிங்கை கட்டுப்படுத்த நினைத்தால் நிலைமை மோசமாகிவிடும். இதனால் இந்த கார் ஸ்கிட்டாகி மற்ற கார் மீது மோத கூட வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் சரியாக சுதாரித்து இவர் கையை ஸ்டியரிங் வீலில் இருந்து எடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அஜித்குமார் காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் ரேஸ் ஓட்டுபவர்கள் வாகனம் விபத்தில் சிக்கும் போது எப்படியெல்லாம் பிரச்சனையை சந்திப்பார்கள் என்று அறிவுறுத்தப்பட்டு பிரச்சனையில் சிக்கினால் செய்யக்கூடாத தவறு என்ன என அறிவுறுத்தப்பட்டிருக்கும். நடிகர் அஜித்குமார் விபத்து நடக்கும் சரியான நேரத்தில் பதறாமல் செய்த இந்த விஷயம் அவர் உயிரையே காப்பாற்றியுள்ளது என்று சொல்லலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 23, 2025, 19:00 [IST]
English summary
Ajith kumar escaped in car race accident video gone viral
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+