சைலெண்டா அஜித் வாங்கிய இந்த கிளவுஸ்! இதுல இப்படி ஒரு விஷயம் இருப்பதே யாருக்கும் தெரியாது!
நடிகர் அஜித்குமார் விரைவில் கார் பந்தயத்தில் பங்கேற்க போவதாக செய்திகள் வெளியான நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் ஃபெராரி நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் ரக கார் ஒன்றை வாங்கிய செய்திகளும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இவருக்கு தற்போது ஃபெராரி நிறுவனத்தின் தரப்பில் இருந்து கார் ரேஸ் ஓட்டுவதற்கான கிளவுஸ் வழங்கப்பட்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித்குமார் இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் கார், பைக் ரேஸ் பந்தயங்களிலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். கடந்த 2000ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இவர் பல்வேறு விதமான கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று அதில் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவிலிருந்து வெகு சில வீரர்கள் மட்டுமே வெளிநாட்டில் உள்ள கார் பந்தயத்தில் பங்கேற்று உள்ளார்கள். அதில் இவரும் ஒருவர்.

அதற்கு பிறகு பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கார் பந்தயத்திற்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்த அவர் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வந்தால் முக்கியமாக தனது திரைப்பட விஷயங்களில் கவனம் செலுத்தி அதிகமான படங்களை நடித்து வந்தார். இந்நிலையில் இவர் தற்போது மீண்டும் கார் ரேஸ் பக்கம் தனது கவனத்தை திருப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆண்டு இறுதி அல்லது 2025ம் ஆண்டில் துபாயில் நடக்க உள்ள கார்பன் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக கடல் சில மாதங்களுக்கு முன்னர் துபாய் சென்ற நடிகர் அஜித்குமார் அங்கு ஸ்போர்ட்ஸ் ரக காரை ஒட்டி வீடியோக்கள் வெளியாகி இருந்தன. இதுபோக இவர் ஃபெராரி நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை சொந்தமாக வாங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
#Thalaaijth officially participating Ferrari race in Dubai this year✌️🗿#VidaaMuyarchi #GoodBadUgly #AjithRacingComeback pic.twitter.com/0EEQGwWkW7
— The Flicks (@Flicks_rithick) September 25, 2024
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இவர் மீண்டும் கார் ரேஸ் கொண்டதற்கு வருவது உறுதியானதாக நமக்கு தகவல் கிடைத்த நிலையில், தற்போது நடிகர் அஜித்குமார் குறித்த மற்றொரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் அஜித் குமாருக்கு ஃபெராரி நிறுவனத்தின் கிளவுஸ் ஒன்று வழங்கப்படுகிறது. இந்த கிளவுஸ் பொதுவாக கார் ரேஸ் வீரர்களுக்கு வழங்கப்படும் கிளவுஸ் ஆகும்.
இந்த குளோஸ் குறித்த முழுமையான விவரங்கள் தெரியாவிட்டாலும், இந்த பிளவுஸ் வழங்கப்பட்ட புகைப்படம் வெளியானது. இதை வைத்து பார்க்கும் போது இவர் கார் ரேஸ் பந்தயத்தில் விரைவில் பங்கேற்க போகிறார் என்பது மட்டும் நமக்கு தெளிவாக தெரிகிறது. இது குறித்த அடுத்த கட்ட தகவல்கள் எல்லாம் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.
பொதுவாக கார்ரேஸ் வீரர்களுக்கு கையில் அணியும் பிளவுஸ் மிக முக்கியமான ஒரு கருவியாக இருக்கிறது. கார் ரேஸில் கார் வேகமாக செல்லும்போது ஸ்டீரிங்கை கண்ட்ரோல் செய்வது மிக முக்கியமான விஷயமாக இருக்கும். இல்லையென்றால் கார் விபத்தில் நிற்க நேரிடும். மேலும் கார் வேகமாக செல்லும்போது சில டிரைவர்கள் பதட்டத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு கையில் வியர்வை வரும் அப்படியான நேரங்களில் ஸ்டேரிங் கிரிப் சரியாக இல்லாமல் போகக் கூட வாய்ப்பு இருக்கிறது.
இதையெல்லாம் தடுப்பதற்காக வெறும் கையில் எந்த ரேஸரும் வாகனம் ஓட்ட மாட்டார்கள். கண்டிப்பாக கிளவுஸ் அணிந்துதான் வாகனம் ஓட்டுவார்கள். அதேநேரம் நீண்ட நேரமாக ஸ்டியரிங்கை அழுத்தமாக பிடித்திருக்கும்போது கை மரத்துப் போகும் வாய்ப்பும் வெகுவாக குறையும். இப்படியான பிரச்சினைகள் ஏற்படுவதில் இருந்து தப்பிப்பதற்காக கைஉறைகளை அவசியம் ரேஸர்கள் அணிகிறார்கள்.
மேலும் கார் ரேஸில் கார் வேகமாக பயணிக்கும் போது காருக்குள் இருக்கும் மெட்டல் பாகங்களை தொடும் போது அதன் வெப்பம் அதிகமாக இருக்கும். கையில் கிளவுஸ் அணிந்து அந்த பாகங்களை தொட்டால் கைக்கு சூடு தெரியாது. இதுவும் ஒரு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. நாம் சாதாரண காரில் இருப்பது போல பிளாஸ்டிக் அமைப்பில் ரேஸ் கார் இருக்காது என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித்குமார் போன்ற பிரபலங்கள் கார் ரேஸ் துறையில் மீண்டும் களமிறங்குவது இந்தியாவில் கார் ரேஸ் மிக வேகமாக பிரபலப்படுத்த உதவும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. அஜித் ரசிகர்கள் பலர் இனி தொடர்ந்து கார் பந்தயம் குறித்த விரிவான தகவல்களை பெற ஆர்வமாக இருப்பார்கள். இதன் மூலம் கார் ரேஸ் இந்தியாவில் பிரபலமான போட்டியாக மாறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








