நடிகர் அஜித் டீம்க்கு 200 டிரோன் செய்ய ஆர்டர் கொடுத்த இந்திய ராணுவம்! பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

நடிகர் அஜித்குமார் ஆலோசனை வழங்கும் தக்க்ஷா குழுவினர் தற்போது இந்திய ராணுவத்திற்காக ரூபாய் 165 கோடி பட்ஜெட்டில் 200 டிரோன் விமானங்களை தயாரிக்கும் ஆர்டரை பெற்றுள்ளனர். இந்தப் பணிக்கும் நடிகர் அஜித்குமார் தான் ஆலோசனை வழங்கப் போவதாக தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். அதையும் தாண்டி இவர் மிகப்பெரிய கார் பைக் விரும்பியாக பிரபலமானவர். வெகு சில நடிகர்களிடமே விமானிகளுக்கான லைசன்ஸ் இருக்கிறது. அந்த லைசென்ஸ் நடிகர் அஜித் குமாரிடமும் இருக்கிறது. அஜித்தையும் ஆட்டோமொபைலையும் பிரிக்கவே முடியாது.

ndian army order for team dhaksha

நடிகர் அஜித்குமார் ஆட்டோமொபைல் போல ஏரோநாட்டிக்ஸ் துறையிலும் அதிக ஆர்வமுடன் செயல்படுபவர். சென்னை எம்ஐடி-யை சேர்ந்த மாணவர் குழு இவர் தலைமையில் ஆலோசனை பெறப்பட்டு டீம் தக்க்ஷா என்ற பெயரில் இணைந்து செயல்பட்டனர். இவர்கள் இணைந்து பறக்கும் டிரோன்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கினர்.

கடந்த கொரோனா காலகட்டத்தில் கூட இவர்கள் உருவாக்கிய டிரோன் தான் அரசுக்கு பல இடங்களை சானிடைஸ் செய்யவும் பல இடங்களை கண்காணிக்கவும் உதவியது. அதற்கு முன் நடிகர் அஜித்குமாரின் ஆலோசனைப்படி இந்த தக்ஷா குழுவினர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று புதிய உச்சங்களை பெற்றனர்.

இந்நிலையில் இவர்கள் தொடர்ந்து டிரோன்களை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் இந்திய ராணுவத்திற்காக 200 டிரோன்களை தயாரிக்க இந்த குழுவிற்கு ஆர்டர் வந்துள்ளது. இதற்காக ரூபாய் 165 கோடியை செலவு செய்யவும் இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. அதற்கான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டது.

அதன்படி இந்த குழு அடுத்த சில மாதங்களில் இந்திய ராணுவத்திற்காக 200 டிரோன்களை தயாரித்து டெலிவரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிரோன்கல் எல்லாம் இந்திய ராணுவம் இந்திய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணிக்காகவும் மருத்துவ மற்றும் அவசர பொருட்களை கொண்டு செல்லும் பணிக்காகவும் பயன்படுத்தலாம் என தெரிகிறது.

ஏற்கனவே நடிகர் அஜித்குமார் தலைமையிலான குழுக்கள் தயாரித்த டிரோன் மூலம் ரத்தம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக கொண்டு செல்ல உதவிய சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது. தற்போது அவர்கள் இந்திய ராணுவத்திற்காக செயல்பட போகும் டிரோன்களை தயாரிக்க உள்ளனர்.

டிரோன்கள் என்றால் அதற்கு முக்கியமான விஷயம் குறைவான எனர்ஜியை பயன்படுத்த வேண்டும், அதிக நேரம் பறக்க வேண்டும்,ஆப்ரேட் செய்பவர் நீண்ட தூரம் இருந்தாலும் கட்டுப்பாட்டை இழக்கக்கூடாது, எந்தவிதமான சூழ்நிலைகளிலும் ஸ்டேபிளாக இருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் இருக்கிறது. அதையெல்லாம் இந்த குழுக்கள் பல்வேறு ஆய்வுகள் செய்து திறம்பட டிரோன்களை செய்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச அளவிலான டிரோன் தயாரிப்பு போட்டியில் இந்த குழு கலந்து கொண்டு பல்வேறு விதமான டிரோன்களை தயாரித்தனர். அந்த டிரோன்களின் செயல்பாடுகள் மற்றும் அதன் திறன் குறித்து பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டதில் உலக அளவில் இந்த குழுவிற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித்குமார் ஆலோசனை வழங்கும் தக்ஷா குழு இந்தியாவில் டிரோன் தயாரிப்பில் மிக முக்கியமான குழுவாக பார்க்கப்படுகிறது. இவர்கள் இந்த டிரோன் தயாரிப்பில் பல ஆய்வுகளை செய்து பல முக்கிய கட்டங்களை எட்டியுள்ளனர். இந்தக் குழு வருங்காலத்தில் பறக்கும் காரை தயாரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Article Published On: Tuesday, August 8, 2023, 21:30 [IST]
English summary
Ajith kumar led team dhaksha unmanned systems wins army order for 200 drones
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+