காவி நிறத்தில் களம் இறங்கும் அஜித்குமார் ரேஸிங் கார்! அப்படி அதுல என்ன இருக்குது?
நடிகர் அஜித்குமார் தனது கார் ரேஸ் அணிக்காக வாங்கிய புதிய காரின் முன்பு நின்று எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் தனது கார் ரேஸ் அணிக்காக வாங்கிய கார் குறித்து பலர் தற்போது சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள். இந்த காரில் அப்படி என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? இதை எதற்காக ரேஸ் பயன்பாட்டுக்காக அவர் வாங்கினார் என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவர் சினிமாவில் நடிப்பு மட்டுமல்லாமல் கார் பைக் ரேஸ்களில் பங்கேற்று பிரபலமானவர். இவர் சமீபத்தில் புதிதாக தனக்கென புதிய கார் ரேஸ் அணி ஒன்றை உருவாக்கினார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த அணியில் அவர் உட்பட நான்கு சர்வதேச டிரைவர்கள் உலக அளவில் நடக்க உள்ள கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்க உள்ளார்கள்.

இவர் அணியும் பங்கேற்கும் கார் பந்தைய போட்டிக்காக இவர் வாங்கிய கார் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஸ்பெயின் நாட்டில் உள்ள பாபிலோனா-கட்டலுனியா என்ற கார் ரேஸ் டிராக்கில் இவர் அந்த கார் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இவரது அணி 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை துபாயில் நடக்க உள்ள கார்பந்தயப் போட்டியில் பங்கேற்க இருக்கிறது.
அந்த போட்டிக்காக இவர் தயார் செய்து உள்ள காரின் முன்பு நின்று தான் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த காரில் பல்வேறு அம்சங்கள் இருக்கிறது. கார் ரேஸ் பந்தய போட்டிக்காக தயார் செய்யப்படும் அளவுக்கு இந்த காரில் என்ன இருக்கிறது என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த காரில் உள்ள அம்சங்கள் குறித்து பலர் தேடி வருகிறார்கள்.

நடிகர் அஜித்குமாரின் கார்பந்தய அணி தான் பங்கேற்கும் கார்பந்தய போட்டிக்காக போர்ஷே நிறுவனத்தின் 911 ஜி3 கப் 992 என்ற காரை தயார் செய்துள்ளார். வெள்ளை நிறத்திலான இந்த காரில் ஆங்காங்கே காவி மற்றும் சிவப்பு நிறத்திலான டிசைன் வழங்கப்பட்டுள்ளது. அந்த காரின் முன் பகுதியில் அஜித்குமார் ரேஸிங் என்ற இவரது அணியின் பெயரும் லோகோவும் இடம்பெற்றுள்ளது.
இவரது அணி காரின் பக்கவாட்டு பகுதியில் தமிழக அரசு விளையாட்டு துறையின் லோகோவும் இடம்பெற்றுள்ளது. காரின் வடிவமைப்பை பொறுத்தவரை போர்ஷே நிறுவனம் சர்வதேச அளவில் உள்ள ரேசிங் கார்களுக்கான அனைத்து தொழிற்நுட்பங்கள் மற்றும் வடிவமைப்பையும் கொண்டதாக இருக்கிறது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 3096 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் 510 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் மொத்தம் 1260 கிலோ இடை கொண்டதாக இருக்கிறது. இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4,585 மிமீ நீளமும், 1920 மீமீ அகலமும், பின்பக்கம் 1902 மிமீ அகலமும், 2457 மீம வீல் பேஸூம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ரியர் வீல் டிரைவ் காராக இருக்கிறது.
இதுபோக இந்த காரில் எலக்ட்ரானிக் கியர் ஷிஃப்ட், பவர் ஸ்டேரிங், முழு டிஜிட்டல் காக்பிட் உள்ளிட் அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் ரேஸ் சமயத்தில் எந்த விதத்திலும் இந்த கார் தனது பெர்ஃபார்மென்ஸ் குறையாத அளவுக்கு இயக்கும் வகையில் அனைத்து விதமான அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த போட்டியில் இவர் மட்டுமல்லாமல் போட்டியில் பங்கேற்கும் மற்ற பல அணிகளும் இந்த ரக காரை தான் இந்த போட்டிக்காக பயன்படுத்துகிறார்கள்.
இந்த காரின் வடிவமைப்பை பொறுத்தவரை பின்பக்கம் பெரிய விங் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் டபுள் விச் போன் ஆக்ஸில் வழங்கப்பட்டுள்ளது இதனால் இந்த காரின் யாருடைய நிலைமை சிறப்பாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு 319 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் விலையை பொருத்தவரை ரூ2.75 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித்குமார் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் கார் பைக் மீதான ஆர்வத்திலும் இருப்பதால் இவர் தனக்கென ஒரு புதிய ரேஸிங் அணியை உருவாக்கியுள்ளார். இந்த அணி சர்வதேச அளவில் பங்கு பெறுவது தமிழகத்திற்கே ஒரு பெருமையான விஷயமாக இருக்கிறது. நடிகர் அஜித் குமாரின் இந்த முயற்சிக்கு நிச்சயம் நாம் பாராட்டுக்களை தெரிவித்தாக வேண்டும்.


Click it and Unblock the Notifications









