இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதே! அஜித் கார் ரேஸ் டீமின் லோகோ இது தான்!

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் துவங்கி உள்ள புதிய கார் ரேஸ் அணியான அஜித்குமார் ரேஸிங் அணியின் லோகோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அந்த அணியில் உள்ள டிரைவர்கள் குறித்த விபரங்களும் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் அஜித்குமார் உட்பட நான்கு டிரைவர்கள் இருக்கிறார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பு துறை மட்டுமல்லாமல் கார் ரேஸ், பைக் ரேஸ், டிரோன்களை வடிவமைப்பது, துப்பாக்கி சுடுவது என பல்வேறு துறைகளில் தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார். இதன்படி சமீபத்தில் இவர் கார் ரேஸ் பக்கம் தனது ஆர்வத்தை திருப்பி உள்ளார். இதற்காக தற்போது தனக்கென புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கியுள்ளார்.

ajith kumar racing logo

இது குறித்து அறிவிப்புகள் ஏற்கனவே வெளியான நிலையில், இந்த அணிக்கு அஜித்குமார் ரேஸிங் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அணிக்கான அதிகாரபூர்வ லோகோ தற்போது வெளியாகி உள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த அணியில் உள்ள டிரைவர்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த அணியில் நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட நான்கு டிரைவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தான் இனி இந்த அணிக்காக கார் பந்தைய போட்டிகளில் ஈடுபட போகிறார்கள். இதில் நடிகர் அஜித் குமாரை தவிர மற்ற அனைவரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தான். இது வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கும் அணி என்பதால் திறமையான டிரைவர்களாக பார்த்து நடிகர் அஜித்குமார் தனது அணியில் இணைத்துள்ளார்.

ajith kumar racing logo

இந்த அணியின் முதல் மற்றும் தலைமை டிரைவராக நடிகர் அஜித் குமார் தான் இருக்கிறார். இவர் தான் இந்த அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். இவர் இதற்கு முன்னர் எஃப்ஐஏ ரேஸிங் மற்றும் எஃப்2 மற்றும் எஃப்3 ரக கார்களை ஓட்டிய அனுபவம் பெற்றவராக இருக்கிறார். இவரின் கீழ் தான் அடுத்த மூன்று டிரைவர்கள் இருக்கிறார்கள்.

அடுத்த இடத்தில் ஃபேபியன் லூஸிக்ஸ் என்பவர் இருக்கிறார். இவர் எஃப்ஐஏ ப்ரோ டிரைவராக இருந்த அனுபவம் பெற்றவர். இவர் ஜிடி 4 சாம்பியன்ஷிப் 2024 மற்றும் 24 சீரிஸ் சாம்பியன்ஷின் ஆகிய பட்டங்களை பெற்றவர். இந்த போட்டிகளில் எல்லாம் இவர் தான் வெற்றி பெற்றுள்ளார். இதுபோக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பயிற்றுநராகவும் இவர் இருக்கிறார்.

ajith kumar racing logo

மூன்றாவது டிரைவராக மேத்யூ டெட்டரி இருக்கிறார். இவர் எஃப்ஐஏ ப்ரோ டிரைவராக இருக்கிறார். இதற்கு முன்னர் ஜிடி 3 சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றவர். மற்றும் இவர் எஃப்ஐஏ ரேஸ் பயிற்சியாளராகவும் இருக்கிறார். நான்காவதாக கேம்ப் மெக்லீட் என்பவர் இருக்கிறார். இவர் எஃப்ஐஏ ப்ரோ டிரைவராக உள்ளார். இதுபோக சூப்பர் கார் சாம்பியன் ஷிப் மற்றும் எஃப்4 பிரிட்டிஷ் சாம்பியன்ஷிப் ஆகிய பட்டங்களை பெற்றவராக இருக்கிறார்.

இந்த அணிக்கான மேலாளராக நியூ தாம்சன் என்பவர் இருக்கிறார். இவர் பல்வேறு மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணிகளுக்காக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இது மட்டுமல்லாமல் சான்று பெற்ற பைலட் மற்றும் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். இந்த அணியின் மேலாளராக இவர் பணிக்கான தொழில்நுட்ப தேவைகள் போட்டியில் பங்கேற்பதற்கான திட்டங்கள் ஆகியவற்றை உறுதி செய்யும் இடத்தில் இருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் இவர் இந்த அணி ஓட்டுனர்கள் ஓட்டும் காரின் பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருக்கிறது? டிரைவர்கள் எந்த அளவிற்கு தங்களை வளர்த்துள்ளார்கள்? ரேஸ் நடக்கும் போட்டிக்கு வீரர்கள் மற்றும் கார்களை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்த அனைத்து பணிகளையும் செய்ய இவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித்குமார் நடிப்பையும் தாண்டி இது போன்ற ஸ்போர்ட்ஸ் அணிகளை துவக்கி இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு மீது மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவில் கார் ரேஸ் மீது பெரிய ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் இல்லை என்றாலும், நடிகர் அஜித்குமார் போன்ற பிரபலங்கள் இதை செய்வதால் இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் கார் ரேஸ் பந்தயம் மீதான ஈர்ப்பை அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 23, 2024, 11:15 [IST]
English summary
Ajith kumar racing logo unveils team logo members list
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X