அஜித் குமார் துவங்கிய கார் ரேஸ் அணி! சிஎஸ்கே எல்லாம் இனி ஒன்னுமே கிடையாது!

நடிகர் அஜித் குமார் தற்போது புதிதாக கார் ரேஸிங் அணியை துவங்கியுள்ளதாக அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நடிகர் அஜித்குமார் ஏற்கனவே கார் பந்தயத்திற்கு வரப்போவதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் தற்போது கார் அணியை துவங்கி அதில் நடிகர் அஜித் குமார் ஒரு ரேஸராக பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜீத் இவர் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இவர் படம் வெளியிட்டுருக்காக இவரது ரசிகர்கள் பலர் காத்திருக்கிறார்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் இவரது ஒவ்வொரு படமும் வெளியாகும் போது வசூல் ஆகும். இவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருகிறார்.

Ajith Kumar Racing Team

இலையில் நடிகர் அஜித்குமார் சினிமா மட்டுமல்லாமல் கார் ரேஸ் துறையில் பல்வேறு விதமான ஆர்வங்களை கொண்டவராக இருக்கிறார் மெக்கானிக்காக தனது வாழ்க்கையை துவங்கியவர் பிற்காலத்தில் பைக் ரேசிங்கில் பல்வேறு சாதனைகளை படைத்தார் அதன் பிறகு கார் ரேஸ் இங்கிலும் கலந்து கொண்டார். 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த கார் பைக் ரேசிங்கிற்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்த இவர் தற்போது மீண்டும் அதை கையில் எடுக்க தொடங்கியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னால் இவர் துபாய்க்கு சென்று அங்கு சொந்தமாக ரேஸ் கார் ஒன்றை வாங்கியதாக தகவல்கள் வெளியான நிலையில் நடிகர் அஜித்குமார் மீண்டும் கார் பந்தயப் போட்டிக்கு வரப்போவதாக செய்திகள் வெளியானது. இது அஜித் ரசிகர்களை குஷி படுத்திய நிலையில் தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

Ajith Kumar Racing Team

அதன்படி நடிகர் அஜித்குமாரின் மேனேஜர் தற்போது தனது எக்ஸ்செல் பக்கத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதன்படி நடிகர் அஜித்குமார் அஜித்குமார் ரேசிங் என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை துவங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் இந்த காரை சனியில் ராபின் என்பவர் அதிகாரப்பூர்வமாக ரேஸ் டிரைவராக செயல்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் நடிகர் அஜித்குமார் இந்த அணிக்கு உரிமையாளராக மட்டுமல்லாமல் இந்த அணிக்காக கார் ரேஸ் பந்தயத்திலும் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் இந்தியாவிலிருந்து வெகு சில அவர்களே சர்வதேச அளவிலான கார் பந்தய போட்டியில் கலந்து கொள்கிறார்கள் அதில் நடிகர் அஜித் குமார் ஒருவராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Ajith Kumar Racing Team

மேல் நடிகர் அஜித்குமார் இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு நடந்த பார்முலா ஏசியா பிஎம்டபிள்யூ எஃப்3 சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று நிறைவு செய்தார் என்றும் மற்றும் 2010 ஆம் ஆண்டு நடந்த பார்முலா 2 சாம்பியன்ஷி போட்டியில் பங்கேற்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித்குமார் உருவாக்கி உள்ள புதிய கார் ரேஸ் சனி விரைவில் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி அஜித் குமார் ரேசிங் அணி 24 எச் சீரியஸ் என்ற பெயரில் நடக்கும் ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் போட்டியில் 923 கப் பிரிவின் கீழ் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த அணியின் நோக்கம் திறமை வாய்ந்த இளம் ரேஸ் டிரைவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கான முழு சப்போட்டா வழங்கிய ரேசிங் ப்ரோக்ராமிற்கு அவர்களை தயார் படுத்துவது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் குமார் துவங்கியுள்ள இந்த கார் ரேஸ் சனி கார்பன் போட்டிகளில் வெற்றி பெறும் என தற்போது அவர்கள் ரசிகர்கள் உற்சாகமாக இருந்து வருகிறார்கள் இது குறித்து அடுத்த அப்டேட்டுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் அஜித்குமார் மீண்டும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள போகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

டிரைவிங் ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித்குமார் இப்படியாக கார்ரேசனையை துவங்கி இந்த இளைஞர்கள் மத்தியில் காரைக்குடி ஆர்வத்தை அதிகரிக்க உதவி செய்துள்ளார் ஏற்கனவே சென்னை கார் ரேஸ் பந்தயத்திற்கு பிறகு இந்தியாவில் கார் ரேஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில் நடிகர் அஜித் குமாரின் இந்த செயல்பாடு நிச்சயம் வரவேற்கத்தக்கது

More from DriveSpark

Article Published On: Saturday, September 28, 2024, 12:00 [IST]
English summary
Ajith kumar racing team announcement details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X