5.8 கி.மீ தூர லேப்பை வெறும் 2 நிமிடத்தில் கடந்த ஏகே! எந்த கார்ல போனாரு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் அஜித்குமார் சமீப காலமாக கார் பந்தையத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் வரும் ஜூலை மாதம் ஃபிரான்ஸ் நாட்டில் நடக்கவுள்ள கார் பந்தைய போட்டியில் பங்கேற்க தற்போது தயாராகி வருகிறார். இதற்கான டெஸ்ட் டிரைவ்வின் போது அவர் சிறப்பாக காரை ஓட்டிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வருங்கள்.

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் சர்வதேச அளவில் நடந்த ஒரு கார் பந்தைய போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் மத்தியில் கார் பந்தையம் குறித்த ஒரு விரிவான பார்வையை ஏற்படுத்தியது. பல இளைஞர்கள் இதன் பிறகு கார் பந்தையம் குறித்து தகவல்களை சேரிக்க துவங்கவிட்டனர்.

Ajith Kumar Racing

இந்நிலையில் வரும் ஜூலை மாதம் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள பால் ரிச்சர்டு ரேஸ் டிராக்கில் மெக்லாரன் 24எச் கார் ரேஸ் பந்தையம் நடக்கவுள்ளது. இந்த பந்தையத்தில் நடிகர் அஜித் குமாரின் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்க நடிகர் அஜித்குமார் தனது ஃபோர்ஷே ஜிடி ஆர் காரை தயார் செய்துள்ளார். இந்த காரை அவர் சோதனையும் செய்து பார்த்துள்ளார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் இந்த கார் குறித்த விபரங்களை பலர் தேடி வருகின்றனர். இந்த காரை போர்ஷே நிறுவனம் கார் பந்தையத்திற்காக ஸ்பெஷலாக தயாரித்துள்ளது. இந்த காரில் அந்நிறுவனம் 6 சிலிண்டர் கொண்ட 992 ஜெனரேஷன் பாக்ஸர் இன்ஜினை காரின் பின்பக்கம் பொருத்தியுள்ளது.

Ajith Kumar Racing

இந்த இன்ஜின் 565 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினியில் 4 வால்வு டெக்னாலஜி, டைரக்ட் ஃப்யூயல் இன்ஜெக்ஷன், டிரை சம்ப் லுப்ரிகேஷன் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இது போக இன்ஜினை கண்ட்ரோல் செய்ய பாஷ் நிறுவனத்தின் எம்எஸ் 6.6 கண்ட்ரோல் யூனிட் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் எக்ஸாஸ்ட் சிஸ்ட்த்திற்காக பின்பக்கம் நடுவில் ட்வின் டெயில் பைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக கேட்டலிஸ்ட் கண்ட்வெர்டர், போர்ஷே மோட்டார் ஸ்போர்ட் டிராக்ஷன் கண்ட்ரோல், கார்பன் ஃபைபர் இன்டேக் மேனிஃபோல்டு மற்றும் 6 திராட்டல் பட்டர்ஃபிளைகள் உள்ளன.

இந்த காரில் ஏகப்பட்ட சென்சார்கள் பொருத்தப்பட்டள்ளன. முக்கியமாக லேசர் ரைடு உயர சென்சார்கள், பிரேக் சிலிண்டர் டிராவல் சென்றார்கள், டிராக் வெப்பத்தை கணக்கிடும் சென்சார்கள், ஃப்யூயல் சென்சார்கள், கேமரா கிட், உள்ள அம்சங்கள் உள்ளது. இந்த காரில் 14.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கும் உள்ளது.

இந்த காரை பயன்படுத்தி நடிகர் அஜித் குமார் சோதனை செய்து பார்த்தார். அப்பொழுது சுமார் 5.8 கி.மீ நீளம் கொண்ட இந்த ரேஸ் டிராக்கில் அவரது பெஸ்டாக 2:08.571 நிமிடங்களில் ஒரு லேப்பை கடந்துள்ளார். இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் இந்த ரேஸிலும் நடிகர் அஜித்குமாரின் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித்குமார் போன்ற பிரபலங்கள் பங்கேற்கும் இந்த போட்டி அவர்களால் தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளது. பல இளைஞர்களின் கவனம் தற்போது கார்ரேஸ் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் பலர் கார் ரேஸை இந்தியாவில் பார்த்து வருகின்றனர். இந்த போட்டியில் அஜித்குமார் வெற்றி பெற்றால் இந்தியாவில் கார் பந்தையம் மேலும் பிரபலமடையும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 2, 2025, 9:30 [IST]
English summary
Ajith kumar racing team preparing for next gt 3 race watch video
மேலும்... #car race
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X