மீண்டும் கார் ரேஸில் அஜித்! காருக்குள்ள இருக்குற இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?

தற்போது நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் திரையங்குகளில் பெரும் வரவேற்ப்பை பெற்று ஓடி வரும் நிலையில், நடிகர் அஜித் குமார் மீண்டும் கார் ரேஸிற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் இந்த முறையில் தனது காரை சோதித்து பார்க்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பலரை கவர்ந்துள்ளது. இந்த வீடியோவில் உள்ள அவரது கார் குறித்தும் விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான அஜித்குமார் தற்போது சினிமா மட்டுமல்லாமல் கார் ரேஸிலும் பயங்கர ஈடுபாட்டை காட்டி வருகிறார். இவர் சமீபத்தில் கார் ரேஸ் பந்தையங்களில் பங்கேற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் இவர் சினிமாவிலும் கவனம் செலுத்தினர். இந்நிலையில் அவர் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

Ajith Kumar Started Car Race Practice

இந்நிலையில் இவர் மீண்டும் கார் ரேஸில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். தனது காரில் அவர் தற்போது மீண்டும் பயிற்சியில் இறங்கியுள்ளார். பயிற்சி துவங்குவதற்கு முன்னர் இவர் காரை சோதனை செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த கார் பிரத்தியேகமாக ரேஸ் பயன்பாட்டிற்காக மாற்றியமைக்கப்பட்ட காராக இருக்கிறது. இநத் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

நடிகர் அஜித்குமார் ரேஸிற்காக போர்ஷோ நிறுவனத்தின் 911 ஜி3 கப் 992 ரக காரை பயன்படுத்தியுள்ளார். இந்த கார் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே சிவப்பு மற்றும் ஆரஞ்ச் நிற டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் காரின் கதவுகள் திறக்கப்பட்டு காரின் உள்ளே இருக்கும் விஷயங்கள் காட்டப்பட்டன. அஜித் காரின் உட்புற பகுதி இப்பொழுது தான் முதன் முறையாக பொது வெளியில் வருகிறது.

Ajith Kumar Started Car Race Practice

இந்த காரின் ஸ்டியரிங் வீலை பொருத்தவரை வழக்கமான ரேஸ் கார் போல வட்டமான ஸ்டியரிங் வீலாக இல்லாமல் மேல் பகுதியும் கீழ் பகுதியும் கட் செய்யப்பட்டது போல இருக்கிறது. மையத்திலேயே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஸ்கிரீன் இருக்கிறது. வழக்கமான காரில் ஸ்டியரிங்கின் பின்பக்கம் இருக்கிறது. அந்த தகவலை பார்க்க சில நொடிகள் ஆகும் என்பதால் ரேஸ் காரில் ஸ்டியரிங் வீலிலேயே இந்த சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தகாரின் சீட் வடிவமைப்பை பொருத்தவரை சாதாரண காரில் உள்ள சீட் போல இல்லாமல் இந்த காரில் ரேஸ் ஓட்டும் போது டிரைவரின் கவனம் பக்கவாட்டு பகுதியில் இருந்து வரும் ஒளியால் சிதறிவிடக்கூடாது என்பதற்காக தலை வைக்கும் பகுதியில் பக்கவாட்டில் மறைவு போன்ற அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை அட்ஜெஸ்ட் செய்யம் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சீட்டில் நடுவே சீட் பெல்டை இணைக்கும் பகுதியும் உள்ளது.

Ajith Kumar Started Car Race Practice

நடிகர் அஜித் குமார் போன்ற பிரபலங்கள் இப்படி பெரிய அளவில் பிரபலம் இல்லாத கார்ரேஸ் போன்ற போட்டியில் பங்கேற்பது மூலம் மக்கள் மத்தியில் இந்த கார் ரேஸ்கள் மீது பார்வை திரும்பும் இதனால் இளைஞர்கள் பலர் ஈர்க்கப்படுவார்கள். தொடர்ந்து அஜித்குமார் இதில் வெற்றி பெற்றால் இந்த விஷயம் பெரிய அளவில் பாராட்டை பெறும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார் ரேஸில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு, கார் ரேஸ் மீது மக்களுக்கு மோகமும் குறைவாக உள்ளது. நடிகர் அஜித் போன்ற பிரபலங்கள் நேரடியாக போட்டியில் பங்கேற்பது இந்தியாவில் கார் ரேஸ் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிக்கும். அதே நேரம் பல இளைஞர்கள் இது நோக்கி நகர்வார்கள் என நமக்கு தெளிவாக தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 12, 2025, 17:26 [IST]
English summary
Ajith kumar started car race practice video gone viral
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X