துபாயில் பறந்த இந்திய தேசிய கொடி! நடிகர் அஜித் செய்த வரலாற்று சாதனை!

துபாயில் நடந்து வரும் 24 எச் சீரிஸ் கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அஜித்குமார் ரேஸிங் அணி 992 பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு அணி சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை பிடிப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதுவும் தான் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே இவ்வளவு பெரிய சாதனையை அந்த அணி செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர். இவருக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது0 ஏராளமான ரசிகர்கள் இவரது திரைப்படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இவர் சிறு வயது முதலே கார் பைக் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார். இவரது ஆரம்ப கால வாழ்க்கையில் கார் பைக் ரேஸிங்கில் அதிக ஆர்வம் கொண்ட நபராக இருந்தார்.

ajith kumar dubai race win

இடையில் சில காலம் கார் பைக் ரேஸ் விஷயத்தில் இருந்து ஒதுங்கி இருந்த இவர், சமீபத்தில் மீண்டும் தனக்கென புதிதாக ஒரு கார் ரேஸிங் அணியை உருவாக்கியுள்ளார். அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் இந்த அணி உருவாக்கப்பட்டு. தற்போது துபாயில் நடந்து வரும் 24எச் சீரிஸ் கார் ரேஸ் பந்தயத்தில் இந்த அணி கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர் போர்ஷே நிறுவனத்தின் 901 என்ற காரை வாங்கி இருந்தார்.

இந்த செய்திகள் எல்லாம் மிகப்பெரிய அளவில் வைரலாக பரவியது. நடிகர் அஜித்குமாரும் இந்த அணியில் ஒரு டிரைவராக இருந்தார். இதனால் இவரும் கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்ப்பார் என்ற பேச்சு மக்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் பயிற்சியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக விபத்தை சந்தித்தார்.

இந்நிலையில் நேற்று திடீரென அணியின் யுக்தியை மாற்றி நடிகர் அஜித்குமார் கார் பந்தயத்தில் ஈடுபட போவதில்லை எனவும் அவரது அணி மட்டுமே இந்த பந்தயத்தில் ஈடுபட போவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இது அணியின் வெற்றிக்காக எடுக்கப்பட்ட முடிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து விசாரித்தபோது அவரது உடல்நலம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது.

இந்நிலையில் இன்று இந்த போட்டி விறுவிறுப்பாக நடந்த நிலையில் 992 பிரிவில் நடிகர் அஜித்குமாரின் அஜித்குமார் ரேஸிங் அணி இந்த போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து பெரும் சாதனையை படைத்துள்ளது. முதல் இரண்டு இடத்தை நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அணிகள் பிடித்துள்ள நிலையில் மூன்றாவது இடத்தை இந்தியாவை சேர்ந்த அணி பிடித்துள்ளது.

இந்த போட்டியில் பெல்ஜியத்தை சேர்ந்த மேத்யூ என்பவர் அஜித் குமார் ரேஸிங் அணிக்கான டிரைவராக இருந்தார். இவர் போர்ஷன் 911 ஜி3 கப் 992 காரை ஓட்டினார். இதில் சிறப்பாக ஒரு லேப்பை 2.02.382 வினாடிகளில் முடித்துள்ளார். இதன் காரணமாகவே இவர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ள நபர்கள் முறையே 2.01.241 மற்றும் 2.01.633 நொடிகளை எடுத்துக் கொண்டார்கள்.

நடிகர் அஜித்குமார் அணியை சேர்ந்த டிரைவர் 2.02.382 மில்லி நொடிகளை எடுத்துக் கொண்டார் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டு பார்த்தால் சில மில்லி நொடிகளின் கணக்கில் தான் இவர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட முதல் இடத்தை பிடித்திருக்க வேண்டிய இவர் சில மில்லி நொடிகள் காரணமாகவே மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளார். ஆனால் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கார் பந்தயம் குறித்து பெரிய அளவில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இதனால் இந்தியாவிலிருந்து பெரிய அளவில் எந்த அணிகளும் இந்த போட்டியில் கலந்து கொள்ளாத நிலையில் தற்போது நடிகர் அஜித்குமாரின் அஜித்குமார் ரேஸிங் அணி கலந்து கொண்டு முதல் போட்டியிலேயே இவ்வளவு பெரிய சாதனையை படைத்துள்ளது நிச்சயம் பாராட்டத்தக்கது தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித்குமார் இந்த போட்டியில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அவருக்கான பரிசு வழங்கப்பட்டது. அப்பொழுது அவர் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி பரிசை வாங்கினார். இது இந்தியர்களுக்கு மிகப் பெருமையான தருணமாக மாறி உள்ளது. இந்தியாவில் கார் ரேஸிங் மிகப்பெரிய அடித்தளத்தை நடிகர் அஜித்குமார் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் என்றால் அது மிகையாகாது. நிச்சயம் இனி இந்திய இளைஞர்கள் மத்தியில் கார் ரேஸ் குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படும்

More from DriveSpark

Article Published On: Sunday, January 12, 2025, 16:41 [IST]
English summary
Ajith kumar won the 3rd place 24h series car race 991 category dubai
மேலும்... #car race
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+