222 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த நடிகர் அஜித்! இந்த காரின் விலை இவ்வளவு காஸ்ட்லியா?

நடிகர் அஜித் துபாய் சென்று அங்குள்ள ரேஸ் டிராக்கில் ரேஸ் காரை ஓட்டிய வீடியோக்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இது குறித்த விரிவான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதில் நடிகர் அஜித் ரேஸ் செல்லும் போது எப்படி எல்லாம் தயாராகிறார்? என்னென்ன தகவல்களை எல்லாம் கேட்டு அறிக்கிறார், எந்த காரில் ரேஸ் ஓட்டுகிறார், எவ்வளவு வேகத்தில் ஓட்டுகிறார் என்ற பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவர் கார் பைக் மீது அதிக பிரியம் கொண்டவர். அடிக்கடி கார் பைக் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வமாக இருப்பார். தற்போது பைக் டூரிங்கிற்காக தனியாக ஒரு நிறுவனமே நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் துபாய் சென்று அங்கு ரேஸ் டிராக்கில் கார் ரேஸ் ஓட்டிய சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்தது.

Ajith Racing BMW M2 Car In Dubai

இவர் கார் ஓட்டும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இந்த வீடியோவின் விரிவான விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில் நடிகர் அஜித் குமார் துபாயில் உள்ள ரேஸ் டிராக்கில் கார் ரேஸ் ஓட்டுவதற்கான சூட் அணிந்து கார் ரேஸ் ஓட்டுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக இவர் ஓட்டப் போகும் கார் ரேஸ் டிராக்கில் உள்ள அம்சங்கள் பாதைகள் குறித்து அங்குள்ள நபர் ஒருவர் நடிகர் அஜித்திற்கு விளக்கிக் கொண்டிருக்கிறார். அதை கவனமாக கேட்டறியும் நடிகர் அஜித் அதில் தனக்கு எழும் சந்தேகங்கள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கிறார். பின்னர் நடிகர் அஜித்குமார் கார் ரேஸ் ஓட்ட தயாராகி கார் இருக்கும் இடத்திற்கு செல்கிறார்.

Ajith Racing BMW M2 Car In Dubai

அங்கு அவர் தான் ஓட்டப் போகும் பிஎம்டபிள்யூ எம்2 காரை ஓட்டி பார்க்கிறார் பின்னர் கையில் ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு கார் ரேஸ் ஓட்ட தயாராகிறார். ஹெல்மெட் கிளவுஸ் எல்லாம் அணிந்து கொண்டு இவர் காரில் ஏறி அமர்கிறார். பின்னர் நாம் அனைவரும் எதிர்பார்த்தபடி இவர் வெள்ளை நிற பிஎம்டபிள்யூ எம்2 காரில் ஏறி அமர்ந்து கார் ரேஸ் காரை எடுத்துச் செல்கிறார்.

துபாயில் உள்ள ரேஸ் கார் என்பதால் இந்தியாவில் உள்ளது போல் இல்லாமல் இதில் இடது பக்கம் ஸ்டெயிங் இருக்கிறது.
அதனால் இடது பக்கம் உள்ள சீட்டில் அமர்ந்து இவர் வேகமாக கார் ஓட்டுகிறார். இவர் அதிகபட்சமாக 222 கிலோமீட்டர் வேகத்தில் கார் ஓட்டுவது நமக்கு இந்த வீடியோவில் மூலம் தெரிகிறது. அதன் பிறகு இவர் அங்கு நடக்கும் மற்ற கார் பந்தயங்களை பார்வையிடுகிறார்.

அதன் பின்னர் இவர் எஃப்4 ரக காரை ஓட்டுவதற்காக அந்த காரை எடுத்து தயார் செய்கிறார். இந்த காட்சிகள் எல்லாம் வீடியோவில் இருக்கின்றன. எஃப் 4 காரை இவர் ஓட்டுவது போன்ற காட்சிகள் இதுவரை வீடியோவாக வெளியாகவில்லை. விரைவில் இது குறித்த வீடியோக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். வீடியோவில் அவர் ஒட்டிய பிஎம்டபிள்யூ எம்2 கார் பற்றி பல தற்போதும் பேசி வருகிறார்கள்.

பிஎம்டபிள்யூ எம்2 காரை பொருத்தவரை 6 சிலிண்டர் இன்ஜின் கொண்ட காராகும். இந்த கார் அதிகபட்சமாக 453.26 பிஎச்பி பவரையும் 550 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு கூபே வடிவ காராகும். இந்த கார் அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட காராக இருப்பதால் இந்த காரை ரேஸ் பைக் நடிகர் அஜித் ஓட்டினார்.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த எம்2 கார் அதிகபட்சம் 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடிய திறன் கொண்ட காராக இருக்கிறது. இந்த காரை நடிகரா அஜித் 222 கிலோமீட்டர் வேகும் வரை ஓடியது. இந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது. அவர் 250 கிலோமீட்டர் வேகம் வரை ஓட்டி இருக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ1 கோடி என்ற விலையில் விற்பனையாகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித் அதி வேகமாக கார் ஓட்டினார் என்றால் அது ரேஸ் டிராக்கில் தான் ஓட்டினார். பொதுசாலைகளில் இப்படியாக வேகமாக கார் ஓட்டுவது என்பது சட்டவிரோதமாகும். பலர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். நடிகர் அஜித் இதுபோன்ற அதிவேக கார் ஓட்டும் வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் அவரது ரசிகர்கள் கார் ரேஸ் பந்தயங்களில் அதிகம் ஆர்வம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 27, 2024, 11:55 [IST]
English summary
Ajith racing bmw m2 car in dubai video gone viral
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+