வேதாளத்தில் டுகாட்டி பனிகேல் பைக்கை தெறிக்கவிட்ட 'தல' அஜீத்!

Posted By:

சினிமாவை நேசிக்கும் அளவுக்கு கார், பைக்குகள் மீதும் அலாதி பிரியம் கொண்டிருக்கிறார். மோட்டார் பந்தய வீரரான அஜீத் குமார் தொடர்ந்து தனது படங்களில் அதிசக்திவாய்ந்த பைக்குகளை ஓட்டி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார்.

குறிப்பாக, டுகாட்டி பைக்குகளை தனது படங்களில் அவர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். ஆரம்பம் படத்தில் டுகாட்டி டயாவெல் பைக்கை பயன்படுத்திய அவர், சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வேதாளம் படத்தில் மற்றுமொரு டுகாட்டி பைக்கை தெறிக்க விட்டிருக்கிறார். சுவாரஸ்யமான தொகுப்பை படிக்க ஸ்லைடருக்கு வந்துவிடுங்ககள்.

01. சாதனை

01. சாதனை

சினிமா என்றில்லாமல், சொந்தமாக பிஎம்டபிள்யூ 1000ஆர்ஆர் உள்பட பல சூப்பர் பைக்குகளை வாங்கி தனது வீட்டு கராஜில் நிறுத்தியதோடு, அவ்வப்போது ஓட்டியும் தனது சூப்பர் பைக் தாகத்தை தீர்த்து வருகிறார் நடிகர் அஜீத் குமார். ஆனால், தனது திரைப்படங்களில் சென்டிமென்ட்டாக டுகாட்டி பைக்குகளை பயன்படுத்துவதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

02. ஜெயித்த சென்டிமென்ட்

02. ஜெயித்த சென்டிமென்ட்

ஆரம்பம் படத்தை தொடர்ந்து, வேதாளம் படத்திலும் சென்ட்டிமென்ட்டாக வேறோரு டுகாட்டி பைக்கை அவர் பயன்படுத்தியிருக்கிறார். எதிர்பார்த்தது போலவே, வேதாளம் படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.15.5 கோடி வசூலை குவித்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்திருக்கிறது. சென்ற தீபாவளிக்கு திரைக்கு வந்த நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம், தமிழகத்தில் முதல் நாளில், ரூ.12.5 கோடியையும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ.12.8 கோடியையும் வசூலித்தது.

03. டுகாட்டி சிறப்பு

03. டுகாட்டி சிறப்பு

உலகில் பல சூப்பர் பைக்குகள் விற்பனைக்கு கிடைத்தாலும், ஃபெராரி போன்றே சிவப்பு வண்ண டுகாட்டிகளுக்கு வாடிக்கையாளர்களிடத்தில் தனி மவுசு இருக்கிறது. மேலும், அந்த பைக்குகளின் வித்தியாசப்படும் டிசைன் மற்றும் செயல்திறன் மிக்க எஞ்சின் போன்றவை, அஜீத் போன்ற மோட்டார் பந்தய வீரர்களையும் ரசிகர்களாக்கியிருக்கிறது.

04. டுகாட்டியை தெறிக்கவிட்ட 'தல'...

04. டுகாட்டியை தெறிக்கவிட்ட 'தல'...

வேதாளம் படத்தில் அஜீத் பயன்படுத்தியிருப்பது டுகாட்டி பனிகேல் 1199 என்ற சூப்பர் பைக் மாடல். இந்த பைக்கை அல்டிமேட் டுகாட்டி என்றும் ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் செல்லமாக அழைக்கின்றனர். இந்த பைக் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து ஸ்லைடரில் காணலாம்.

05. பெயர் காரணம்

05. பெயர் காரணம்

டுகாட்டியின் பைக் தயாரிப்பு ஆலை அமைந்திருக்கும், இத்தாலியிலுள்ள போலோக்னா நகரின் உள்ள மேற்கு பகுதியின் பெயர்தான் பனிகேல். தனது பிறப்பிடத்தின் மண் வாசனையை உலகம் முழுவதும் பரப்பும் விதத்தில், இந்த பைக்கிற்கு பனிகேல் என்று பெயரிட்ட்டது டுகாட்டி.

06. பனிகேல் அறிமுகம்

06. பனிகேல் அறிமுகம்

கடந்த 2011ம் ஆண்டு இத்தாலியிலுள்ள மிலன் நகரில் நடந்த மோட்டார்சைக்கிள் கண்காட்சியில்தான் இந்த டுகாட்டி பனிகேல் 1199 பைக் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் உலகின் மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களை இந்த பைக் திரும்பி பார்க்க வைத்தது. அதற்கான காரணம் என்ன என்பதை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

07. பெருமை...

07. பெருமை...

அறிமுகம் செய்யப்பட்ட தருணத்தில், இரட்டை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்களில் உலகின் அதிக சக்திவாய்ந்த பைக் மாடல் என்று பனிகேல் 1199 பைக்கை டுகாட்டி அறிவித்தது. இந்த பைக்கில் 1198சிசி லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்ட சூப்பர் க்வாட்ரோ எஞ்சின் அதிகபட்சமாக 195 பிஎச்பி பவரையும், 133 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. அதுமட்டுமில்லை, மற்றொரு பெருமையும் இந்த பைக் பெற்றது. அது என்ன? அடுத்த ஸ்லைடில் காணலாம்.

08. மற்றொரு பெருமை

08. மற்றொரு பெருமை

வண்டியின் எடைக்கும், அதன் எஞ்சினின் பவரை வெளிப்படுத்தும் திறனுக்குமான விகிதாச்சாரத்தில் உலகின் முதன்மையான பைக் மாடல் என்ற பெருமையை இந்த பைக் பெற்றது. 164 கிலோ எடை கொண்ட டுகாட்டி பனிகேல் 1199 பைக் ஒரு கிலோவிற்கு 1.19 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. உலகின் தயாரிப்பு நிலை மாடல்களில் அதிகபட்ச திறனை வெளிப்படுத்தும் பைக்காக தெரிவிக்கப்பட்டது.

09. ஒப்பீடுக்காக...

09. ஒப்பீடுக்காக...

உதாரணமாக, 640 கிலோ எடை கொண்ட ஃபார்முலா- 1 கார்களின் எஞ்சின் அதிகபட்சமாக 800 எச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. எடைக்கும், பவரை வெளிப்படுத்துவதற்குமான விகிதாச்சாரத்தில், ஒரு கிலோவுக்கு 1.25 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளன.

10. செயல்திறன்

10. செயல்திறன்

டுகாட்டி பனிகேல் 1199 பைக் சோதனைகளின்போது, 0 - 97 கிமீ வேகம் அதாவது, ஆரம்ப நிலையிலிருந்து 97 கிமீ வேகததை வெறும் 2.98 வினாடிகளில் எட்டிப்பிடித்தது. அதேபோன்று, மணிக்கு 285.8 கிமீ வேகத்தை தொட்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 325 கிமீ வேகம் என்று தெரிவிக்கப்பட்டது.

11. மைலேஜ்

11. மைலேஜ்

இந்த பைக் சராசரி மைலேஜ் அளவாக 100 கிலோமீட்டர் தூரம் பயணிப்பதற்கு 6.9 லிட்டர் பெட்ரோல் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

12. பிரேக் சிஸ்டம்

12. பிரேக் சிஸ்டம்

இந்த பைக்கில் முன்புறத்தில் பிரெம்போ மோனோபிளாக் காலிபர்கள் கொண்ட 330மிமீ விட்டம் கொண்ட இரண்டு டிஸ்க்குகள் கொண்டதாகவும், பின்புறத்தில் 245மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொண்டது. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. இந்த பைக்கை 97 கிமீ வேகத்திலிருக்கும் பிரேக் போட்டு கட்டுப்படுத்தினால், 119.1 அடி தூரத்தில் பைக் நிறுத்தப்பட்டு விடும். அந்த அளவு சிறப்பான பிரேக் சிஸ்டம் உள்ளது.

13. எலக்ட்ரானிக் சஸ்பென்ஷன்

13. எலக்ட்ரானிக் சஸ்பென்ஷன்

உலகிலேயே முதல்முறையாக எலக்ட்ரானிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய சஸ்பென்ஷன் சிஸ்டத்துடன் வந்த பைக்கும் டுகாட்டி பனிகேல் 1199 மாடல் என்பதும் இதன் தனித்துவத்தை பரைசாற்றும் விஷயம்.

14. மோனோகாக் ஃப்ரேம்

14. மோனோகாக் ஃப்ரேம்

அலுமினியம் மோனோகாக் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டிருப்பதால், மிகச்சிறப்பான கையாளுமையை வழங்கும். பெல்ட் டிரைவ் சிஸ்டம் கொண்ட டுகாட்டிகளுக்கு மத்தியில் செயின் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வந்த மாடல். மேலும், பிற டுகாட்டிகளை போல அல்லாமல், இதன் சைலென்சர் எஞ்சினுக்கு கீழே கொடுக்கப்பட்டிருந்தது.

15. மாற்று மாடல்

15. மாற்று மாடல்

2011 முதல் 2014 வரை டுகாட்டி பனிகேல் 1199 உற்பத்தியில் இருந்தது. கடந்த ஆண்டு இத்தாலியின் மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இதற்கு மாற்றாக டுகாட்டி பனிகேல் 1299 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரூ.33.24 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மாடல் விற்பனை செய்யப்படுகிறது. டுகாட்டி பனிகேல் 1199 மாடலைவிட அதிசக்திவாய்ந்ததாகவும், கூடுதல் வசதிகள், தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த பைக் வந்திருக்கிறது. நடிகர் அஜீத் போன்ற மோட்டார் பந்தய வீரர்களையும் கட்டி போட்டிருக்கும் டுகாட்டி நிறுவனத்தின் மறுபக்கத்தை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

16. இத்தாலியின் பெருமை...

16. இத்தாலியின் பெருமை...

வாகன உலகில் இத்தாலிக்கு தனி இடம் உண்டு. உலகின் முன்னணி வாகன பிராண்டுகளின் பிறப்பிடமாக இத்தாலி இருக்கிறது. அதில், டுகாட்டியின் தாயகமும் இத்தாலிதான். போலோக்னா என்ற இடத்தை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

17. ஸ்தாபிதம்...

17. ஸ்தாபிதம்...

1926ம் ஆண்டு அன்டோனியா கவலிரியும், அவரது மூன்று மகன்களான அட்ரியானோ, மார்செல்லோ மற்றும் புருனோ கவலிரி டுகாட்டி ஆகியோர் உருவாக்கிய நிறுவனம்தான் டுகாட்டி. இந்த நிறுவனம் முதலில் வானொலி பெட்டிக்கான வாக்கம் ட்யூப்கள் மற்றும் கன்டன்சர் தயாரிப்பில் ஈடுபட்டது. 1935ம் ஆண்டில் அவர்கள் முதல் ஆலையை போலோக்னா நகரின் பனிகேல் என்ற இடத்தில் நிறுவினர். இரண்டாம் உலகப்போரின்போது, டுகாட்டி ஆலையும் முக்கிய தாக்குதல் இலக்காக இருந்தது. ஆனாலும், உற்பத்தியை தொடர்ந்தனர்.

18. பைக் தயாரிப்பு

18. பைக் தயாரிப்பு

1944ம் ஆண்டில் இத்தாலியின் டூரின் நகரை சேர்ந்த அல்டோ ஃபரினெல்லி என்பவரின் நிறுவனம் சைக்கிள்களில் பொருத்துவதற்கான சிறிய எஞ்சின் ஒன்றை தயாரித்து விற்பனை துவங்கியது. கக்சியோலஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்ட அந்த எஞ்சினுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், அந்த சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த நிலையில், வானொலிப் பெட்டிக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பில் நல்ல முன்னேற்றம் கண்ட டுகாட்டி நிறுவனத்தின் ஸ்தாபகருக்கு அந்த சைக்கிள் எஞ்சின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. உடனடியாக, அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பைக் தயாரிப்பில் இறங்கினார்

19. முதல் பைக்

19. முதல் பைக்

1950ல் டுகாட்டி நிறுவனம் தனது முதல் பைக் மாடலை அறிமுகம் செய்தது. 44 கிலோ எடை கொண்ட இந்த மோட்டார்சைக்கிளில் 48சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. மணிக்கு 64 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருந்தது. கக்சிலோ என்ற பெயரில் அறிமுகமான அந்த மோட்டார்சைக்கிளின் பெயரை விரைவாகவே டுகாட்டி மாற்றி, 55 எம் மற்றும் 65டிஎல் என்ற பெயர்களில் அறிமுகம் செய்தது.

20. ஸ்கூட்டர்

20. ஸ்கூட்டர்

1952ல் மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், 65டிஎல் என்ற ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், இரண்டு ஆண்டுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

21. தனி நிறுவனம்

21. தனி நிறுவனம்

1953ல் டுகாட்டி நிறுவனத்தின் எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் தயாரிப்பு பிரிவும் டுகாட்டி எலக்ட்ரானிக்கா என்றும், மோட்டார்சைக்கிள் தயாரிப்பு பிரிவு டுகாட்டி மெக்கானிக்கா என்றும் தனித்தனி நிறுவனங்களாக மாற்றப்பட்டன. டுகாட்டி மெக்கானிக்கா நிறுவனத்தின் பொறுபபுகளை டாக்டர் கிஸ்பி மான்டோனா ஏற்றுக் கொண்டார். அதன் பின் அந்நாட்டு அரசின் உதவியுடன், பைக் தயாரிப்பு ஆலையை நவீனப்படுத்திய டுகாட்டி, நாள் ஒன்றுக்கு 120 பைக்குகளை தயாரிக்கும் நிறுவனமாக உயர்ந்தது.

22. பிரபலம்

22. பிரபலம்

1960ல் டுகாட்டி வெளியிட்ட மாக்- 1 என்ற 250 மோட்டார்சைக்கிள், அந்த நிறுவனத்திற்கு பெரும் புகழையும், பிரபலத்தையும் தேடித் தந்தது. அப்போது, உலகின் அதிவேக மோட்டார்சைக்கிள் மாடலாக தெரிவிக்கப்பட்டது. 1970களிலிருந்து வி- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது.

மோட்டார் ஸ்போர்ட்ஸ்...

மோட்டார் ஸ்போர்ட்ஸ்...

மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையிலும் டுகாட்டி நீண்ட பாரம்பரியம் கொண்டது. 1951ல் கக்சியோலோ மோட்டார் பொருத்தப்பட்ட மிதிவண்டியில் முதல் அதிவேக சாதனையை படைத்து மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் தன்னை அடையாளப்படுத்தியது. 1954ல் 100 கிரான் ஸ்போர்ட் என்ற சாதாரண சாலைகளில் நடைபெறும் மோட்டார்சைக்கில் பந்தயத்தை அறிமுகப்படுத்தியது. மேலும், மோட்டோஜீபி பந்தயங்களில் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2003ம் ஆண்டிலிருந்து மீண்டும் பங்கேற்று வருகிறது. 2007ம் ஆண்டு டுகாட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது. கேஸி ஸ்டோனர் டுகாட்டி அணிக்காக பங்கேற்றார். மேலும், புதிய மோட்டோஜீபி பந்தயங்களுக்கு தகுந்தவாறு தனது பைக் மாடல்களில் மாறுதல்களை செய்து வருவதுடன், மோட்டோஜீபி.,யில் பங்கேற்கும் பைக்குகலில் டுகாட்டி பைக் மாடல்கள்தான் அதிவேகமானது என்ற பெருமையை பெற்று வருகின்றன. 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் 9 முறை உலக சாம்பியன் பெற்ற வாலண்டினோ ராஸி டுகாட்டி கார்ஸ் அணி சார்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் வருவாயில் 10 சதவீதம் மோட்டார் ஸ்போர்ட்ஸுக்காக செலவிடப்படுகிறது. இந்த பாரம்பரிம்தான் மோட்டார் பந்தய வீரரான அஜீத்தையும் கவர்ந்திருக்கலாம்.

23. டுகாட்டிய யாரு வச்சுருக்கா.

23. டுகாட்டிய யாரு வச்சுருக்கா.

1926லிருந்து இதுவரை பல உரிமையாளர்களின் கையில் டுகாட்டி இருந்துள்ளது. இந்தநிலையில், கடந்த 2012ம் ஆண்டு முதல் ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆனால், இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி கார் தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக டுகாட்டியை ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் ஆடி கட்டுப்படுத்தி வருகிறது.

அஜீத்துக்கு விருப்பமான பிராண்டு...

அஜீத்துக்கு விருப்பமான பிராண்டு...

டுகாட்டியின் அருமை பெருமைகளை தெரிந்து கொண்டுதான், தல அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை தொடர்ந்து தனது திரைப்படங்களில் பயன்படுத்தி வருகிறார். சமீபத்தில் இந்தியாவில் மீண்டும் களமிறங்கியிருக்கும் டுகாட்டி நிறுவனம் பல்வேறு மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது. தென் இந்தியாவை பொறுத்தவரையில் பெங்களூரில் புதிய ஷோரூமை நேற்று திறந்திருக்கிறது. எனவே, பெங்களூர் ஷோரூமுக்கு தல அஜீத் விரைவில் விசிட் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

25. இதர தொடர்புடைய செய்திகள்

01. அஜீத் கைகளுக்கு சவால் விட்ட டுகாட்டி டயாவெல்

02. புனே- டூ சென்னை... நடிகர் அஜீத் குமாரின் பைக் பயணம்

03. பிஎம்டபிள்யூ பைக் வாங்கிய நடிகர் அஜீத் குமார்

தொடர்பில் இருங்கள்

ஆட்டோமொபைல் நிகழ்வுகளுக்கும், சுவாரஸ்யங்களுக்கும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் சமூக வலைதள பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

ஃபேஸ்புக் பக்கம்

டுவிட்டர் பக்கம்

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Actor Ajith rides Ducati 1199 Panigale Sport Bike In Vedalam cinema.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark