நடிகர் அஜித் குமார் வெளிட்ட முக்கியமான அப்டேட்! விடா முயற்சியால் புதிய பரிணாமத்தை எடுக்கப்போறகிறார்!

நடிகர் அஜித்குமார் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் என்ற பைக் டூரிங் கம்பெனியை துவங்கியுள்ளார். இதன் மூலம் அவர் இந்தியா, யூஏஇ, ஓமன் தாய்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பைக் டூரிங் சேவையை வழங்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை விரிவாக காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் கார் பைக் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் தனது இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸ்களில் சர்வதேச அளவில் கலந்து கொண்டுள்ளார். அதே நேரம் இவருக்கு ஏரோநாடிக்ஸ் மீதும் அதிக ஆர்வம் இருக்கிறது.

ajith venus motorcycle tours

தனது நடிப்பு பணியை ஒரு பக்கம் செய்து வந்தாலும், தனது அதீத விருப்பமான கார் மற்றும் பைக் ரெய்டுகள் மற்றும் ஏரோனாட்டிக்ஸ் குறித்த பல்வேறு பணிகளை இதுவரை செய்து வந்துள்ளார். இவர் செய்த பல பணிகள் பேசப்படும் அளவிற்கு மிக முக்கியமான வெற்றிகளை எல்லாம் பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் பைக் டூரிங் கம்பெனி ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி தற்போது இவரது மேனேஜர் நடிகர் அஜித்குமார் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் என்ற பெயரில் பைக் டூரிங் கம்பெனியை துவங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தளத்தில் இவர் வெளியிட்ட அறிக்கையில் பல முக்கியமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

ajith venus motorcycle tours

இதில் கூறியுள்ளதாவது: " நடிகர் அஜித்குமார் இத்தனை ஆண்டு கால தனது ரைடிங் அனுபவத்தை தனது பேஷனை ஒரு தொழில் முனைவாக மாற்ற முடிவு செய்துள்ளார். அதன்படி இந்நிறுவனம் பைக் ரைடருக்கு உலகம் முழுவதும் சுற்றுலா செல்ல பல்வேறு சேவைகளை வழங்க உள்ளது. இந்த சேவைகளின் மூலம் பைக் விரும்பிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா செல்ல முடியும்.

இந்நிறுவனம் பைக் சுற்றுலா செல்ல விரும்பும் நபர்களுக்கு அவர்களது பைக் ரைடிங் திட்டத்தை முழுமையாக செய்ய அதற்குரிய நபர்களை வைத்து ஏற்பாடு செய்து தருகிறது . தற்போது ராஜஸ்தான், யுஏஇ, ஓமன், தாய்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய பகுதிகளில் பைக் ரைடர்கள் பைக் ரைடிங் அனுபவத்தை பெற ஏற்பாடுகளை செய்து வர திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் ஏற்பாடு செய்யும் பைக் டூரிங்கின் போது பைக் ரைடர்களுக்கு துணையாக இந்நிறுவனத்தின் ஊழியர்கள் செல்வார்கள்.

ajith venus motorcycle tours

பைக் டூரிங் செல்லும் நபர்களுக்கு உலகின் மிக அழகான இடங்களை காட்டவும் , அழகான ரைடிங் பெறுவதை உறுதி செய்யவும் அவர்களுக்கான பயிற்சியை வழங்குவதும் உடன் பயணிப்பவர்களுக்கு முதல் நோக்கம். இதற்காக சில ரூட்டுகளை தேர்வு செய்து அங்கு பல்வேறு ஆய்வுகளை செய்து அங்கு ரைடர்கள் பயணிக்கும் போது அவர்களுக்கு எல்லா உதவியும் கிடைக்கும் வகையில் திட்டமிட்டு அவர்களுக்கு ஒரு தனித்துவமான ரைடிங் அனுபவத்தை பெற இந்நிறுவனம் உதவி செய்கிறது.

மேலும் பைக் ரைடர்களுக்கு பைக்குகளை வாடகைக்கு விடுவதும் டூர்களை திட்டமிடுவதும் சர்வதேச அளவிலான அனுமதிகளை பெறுவதும், மேலும் இதற்கு தேவையான அனைத்து ஆவணங்களை பெற்று தருவதும், அவர்களுக்கு தேவையான கியர்கள் என அனைத்து பணிகளையும் இந்நிறுவனம் அக்டோபர் மாதம் 23ஆம் தேதி துவங்குகிறது.

இந்நிறுவனம் தனது முதல் டூரிங் சேவையாக யுஏஇ மற்றும் ஓமன் ஆகியவற்றை இணைக்கும் வகையில் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இந்த பைக் பயணத்தில் பல மலைகள் கடற்கரைகள் பல நகரங்கள் மற்றும் அட்வெஞ்ச்சரான ரைடுகளை பைக் ரைடர்கள் கடந்து செல்லும்படி இது திட்டமிட்டுள்ளது. இந்த ரைடிங்கின் போது பைக் ரைடர்கள் இயற்கையின் அற்புதங்களை எல்லாம் காண முடியும். இந்த டிரிப்பில் அழகான சாலைகள், புத்துணர்வாக்கும் நில அமைப்புகள் இருக்கும்.

இந்த பைக் ரைடில் அனுபவம் உள்ள மற்றும் அனுபவம் இல்லாத யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அதற்கான சேவை கட்டணத்தை செலுத்தினால் இந்த பைக் டுரிங்கை இந்நிறுவனம் ஏற்பாடு செய்து தரும்" என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் வெப்சைட் மற்றும் தொடர்பு கொள்வதற்கான போன் மற்றும் ஈமெயில் ஐடி இந்நிறுவனத்தை குறித்த தகவல்களைப் பெற சமூக வலைதள பக்கங்கள் ஆகியவற்றையும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டுமல்லாமல் பைக் மற்றும் கார் ரைட்டிங்கில் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பதால் இப்படியான நிறுவனத்தை உருவாக்கி இன்றைய இளைஞர்களை போதை உள்ளிட்ட கெட்ட பழக்கத்திற்கு உள்ளாகாமல் அவர்களது சக்தியை இப்படியாக எக்ஸ்ப்ளோர் செய்யும் அனுபவத்தை பெற எடுத்துள்ள இந்த முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

More from DriveSpark

Article Published On: Friday, October 6, 2023, 15:55 [IST]
English summary
Ajith started venus motorcycle tours company know their first journey details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X