ரூ1.5 கோடி விலையுள்ள காரில் 250 கிமீ வேகத்தில் பயணித்த அஜித்! வைரலாகும் வீடியோ!
நடிகர் அஜித் கார், பைக்குகளை அதிகம் விரும்பும் நபர் என்று நமக்கு தெரியும். இவர் பல்வேறு கார்பந்தயப் போட்டிகளில் கூட பங்கேற்றுள்ளார். சமீபத்தில் இவர் துபாய் சென்று அங்கு ரேஸ் டிராக்கில் பிஎம்டபிள்யூ எம் 4 காம்படிஷன் என்ற காரை ஓட்டி சோதனை செய்துள்ளார். அப்பொழுது அதிகபட்ச வேகத்தில் இவர் வாகனத்தை ஓட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பலர் பகிர்ந்து வருகிறார்கள். இவர் ஒட்டிய காரில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கிறது? இதன் விலை என்ன? என்ற அனைத்து விரிவான விபரங்களையும் காணலாம் வாருங்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் கார், பைக் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார். இவர் மெக்கானிக்காக தனது வாழ்க்கையை துவங்கி, பின்னர் நடிகராகி இன்று உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இருந்தாலும் இவர் தொடர்ந்து கார்,பைக் மீது ஆர்வம் கொண்டு அவ்வப்போது பவர்ஃபுல்லான வாகனங்களை ஓட்டி தனது ஆசையை நிறைவேற்றி வருகிறார்.

சமீபத்தில் துபாய் சென்ற நடிகர் அஜித் அங்கு ரேஸ் டிராக்கில் பிஎம்டபிள்யூ எம் 4 காம்படிஷன் என்ற காரை ஓட்டிப் பார்த்தார். முன்னதாக இவர் அங்குள்ள ரேஸ் கார்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஷோரூமிற்கு சென்று அங்கு ரேஸ் கார்களை பார்த்து அது குறித்து தகவல்களை கேட்டிருந்தார். மேலும் அவர் ரேஸ் காரில் அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்து பார்த்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் 4 காம்படிஷன் என்ற காரை இவர் ரேஸ் டிராக்கில் ஓட்டி பார்த்துள்ளார். இந்த காரின் இன்ஜினை பொறுத்தவரை 2993 சிசி இன்ஜின் கொண்டதாக இருக்கிறது. இது 503 பிஎச்பி பவரையும் 650 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.5 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது.

இந்த கார் அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்ட காராகவும், அதே நேரம் ஹேண்டில் செய்வதற்கு சிறப்பான காராகவும், சிறப்பான பவர் அவுட்புட் தரும் காராகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வடிவமைப்பை பொறுத்தவரை இது ஒரு கூபே ஸ்டைல் காராக இருக்கிறது.
இந்த கார் லிட்டருக்கு 9.7 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ரியல் வேல்டில் 8 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலையை பொறுத்த வரை ரூபாய் 1.53 கோடி என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. குறிப்பிட்ட இந்த வீடியோவில் நடிகர் அஜித் ஓட்டியது துபாயில் விற்பனையாகி வரும் எம் 4 காம்படிஷன் காராகும்.
அதனால் இந்த கார் இடது பக்க டிரைவ் கொண்ட காராக இருக்கிறது. இந்த காரில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த காரில் உள்ளே இருக்கும் பெரிய ஸ்கிரீன் தான். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கும் ஒரே ஸ்கிரீனாக வழங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு விதமான தகவல்களை நம்மால் பார்க்க முடியும்.
இந்த காரை நடிகர் அஜித் துபாயில் உள்ள ரேஸ் டிராக்கில் ஒட்டி சென்றார். அப்பொழுது அவர் பாதுகாப்பிற்காக கார்க்குள் ஹெல்மெட் அணிந்து மிக வேகமாக காரை ஓட்டினார். இந்த வீடியோவில் பதிவான காட்சிகளின் படி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் கார் 146 மைல் வேகத்தில் பயணிப்பதாக காட்டுகிறது. துபாயில் உள்ள கார்கள் பெரும்பாலும் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு மைல் என்ற கணக்கை தான் காட்டும்.
இவர் 146 மைல் வேகத்தில் பயணம் செய்தது கிட்டத்தட்ட 234 கிமீ வேகத்தில் பயணம் செய்ததற்கு சமமாக இருக்கிறது. இந்த காரின் அதிகபட்ச வேகமே 250 கிலோ மீட்டர் வேகம்தான் கிட்டத்தட்ட உச்சபட்ச வேகத்தில் நடிகர் அஜித்குமார் இந்த காரில் பயணம் செய்துள்ளது நமக்கு தெரிகிறது. இந்த வேகத்தில் சாலையில் பயணிக்க தடை இருக்கிறது இருந்தாலும் ரேஸ் டிராக்கில் இந்த தடை இல்லாததால் இந்த பயணத்தை அவர் பாதுகாப்புடன் செய்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித் போன்ற அதிக ரசிகர்களைக் கொண்ட பிரபலங்கள் இது போன்ற கார், பைக் ரேஸ்களில் ஈடுபட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள். இவரை பின்பற்றிய பலர் கார் பைக் மீது ஆர்வம் கொண்டு முறையான ரேஸ்களில் பயிற்சி பெற ஆர்வப்படுவார்கள். ஆனால் அஜித் ரசிகர்கள் இது இது போன்ற முயற்சிகளை பொதுசாலையில் செய்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்


Click it and Unblock the Notifications








