விவேகம் படத்தில் நடிகர் அஜித் பயன்படுத்தும் வாகனங்கள்: சிறப்புத் தகவல்கள்

Written By:

தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பில் உள்ள படம் விவேகம். அஜித் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் எதிர்பாராத ஒரு நேரத்தில் இணையதளங்களில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இந்த படத்தின் பிரம்மாண்டத்தை அதன் டீசரே உணர்த்தும் வகையில் இருந்தது. டீசரில் கூர்ந்து பார்த்தபோது, நம் கண்களுக்கு கிடைத்த விஷயம் அஜித் பயன்படுத்தும் வாகனங்கள்.

விவேகம் படத்தில் அஜித்தின்’சூப்பர்’ வாகனங்கள்

மாஸான ஒரு நடிகர் என்பதை விட வாகனங்கள் மீது இருக்கும் ஆர்வத்தால், சினிமா ரசிகர்களையும் தாண்டி பல தரப்பு மக்களை சென்றடைந்தவர் அஜித்.

சினிமா நடிகர்களில் தனித்துவமான அடையாளத்தை பெற்றிருக்கும் அஜித், 'ஆசை' படம் தொடங்கி தற்போது வெளியான வேதாளம் வரை, அனைத்து படங்களிலும் முடிந்தவரையில் குறிப்பிடும்படியான வாகனங்களை பயன்படுத்துவது போன்ற காட்சிகளில் நடித்துவிடுவார்.

விவேகம் படத்தில் அஜித்தின்’சூப்பர்’ வாகனங்கள்

அஜித்தின் எவர்கிரீன் படமான 'மங்காத்தா'வில் இடம்பெற்றிருந்த விறுவிறுப்பான ஒரு சேஸிங் காட்சி மூலம், பைக் ஸ்டண்டுகளில் அவருக்கு இருந்த ஆர்வத்தை தமிழகமே தெரிந்துகொண்டது.

மங்கத்தாவிற்கு பிறகு வாகனங்கள் மீதுள்ள அஜித்தின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் படமாக தற்போது 'விவேகம்' தயாராகியுள்ளது. அதை சமீபத்தில் வெளியான டீசர் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது.

அதிரடி, சேஸிங், சண்டை என முற்றிலும் கமர்ஷியல் சார்ந்த படமாக தயாராகியுள்ள விவேகம் படத்தில் அஜித் பயன்படுத்தும் வாகனங்கள், ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

 ஆர்.சி. ஹெலிகாப்டர்கள்

ஆர்.சி. ஹெலிகாப்டர்கள்

மங்கத்தா படத்தில் அஜித் பைக் ஸ்டண்ட்

செய்து காண்பித்தது போல, விவேகம் படத்தில் ஆர்.சி. ஹெலிகாப்டர்களை விட சில வித்தைகளை செய்து காட்டவுள்ளார்.

விவேகம் படத்தின் வில்லன் விவேக் ஓபராயின் நகர்வுகளை தெரிந்துக்கொள்ள ஹீரோ அஜித் ஆர்.சி. ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆர்.சி ஹெலிகாப்டரை நுணுக்கமாக இந்த காட்சியில் தானே பயன்படுத்தி, அட்டகாசமாக நடித்துள்ளராம் அஜித். சில இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தெரிய வரும் செய்திகளுக்கு அபார ரியாக்‌ஷன் அளித்துள்ளாராம் ’தல’ அஜித்.

விவேகம் படத்தில் அஜித்தின்’சூப்பர்’ வாகனங்கள்

ஆர்.சி ஹெலிகாப்டர்களுக்கான காட்சிகள் படமாக்கப்பட்ட போது, அதன் தொழில்நுட்பங்களை கற்றவர்கள் உடன் இருந்தும் கூட, தானே திட்டமிட்டு காட்சிகளில் அதிக ஈடுபாடு காண்பித்து நடித்தாராம் அஜித்.

தமிழகத்தில் தற்போது ஆர்.சி ஹெலிகாப்டர்கள் டிரெண்டிங்காக இருப்பதற்கு முக்கிய காரணம் அஜித் தான். குடும்பத்தினருடன் ஒரு முறை ஆர்.சி ஹெலிகாப்டர்களை அஜித் இயக்குவது போன்று வெளியான புகைப்படங்களால் பலரும் இன்று ஆர்.சி ஹெலிகாப்டர்களின் ரசிகர்களாகி உள்ளனர்.

ஹெலிகாப்டர்கள்

ஹெலிகாப்டர்கள்

பல்கேரியா நாட்டின் ஹெலிகாப்டர்களை தான் அஜித் விவேகம் படத்தில் பெரும்பாலும்ப யன்படுத்தியுள்ளார். ஹெலிகாப்டரில் வைத்து அஜித் செய்யும் சேஸிங் காட்சிகள் படத்தில் மிரட்டலாக இருக்குமாம்.

ஹெலிகாப்டர்களை இயக்குபவர்களுக்கு தான் அதை செயலழிக்க செய்யும் வித்தையும் தெரியும். இந்த லாஜிக்கை பின்பற்றியே அஜித் வான் ஊர்திகளை இயக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

விவேகம் படத்தில் அஜித்தின்’சூப்பர்’ வாகனங்கள்

விவேகம் படத்தின் பெரும்பாலான காட்சிகள், பல்கேரியாவில் படமாக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த நாட்டுடைய வாகனங்கள் படத்தில் அதிக காட்சிகளில் இடம்பெற்றுள்ளன.

புது நாடு, புதிய ஊர் என்று சில தயக்கம் கூட இல்லாமல், கதைக்கு ஏற்றவாறு எடுக்கப்பட்ட காட்சிகளில் மிகவும் சாதுர்யமாக வண்டிகளை ஓட்டினராம் அஜித்.

விவேகம் படத்தின் வில்லனான விவேக் ஓபராய்க்கு அஜித்திற்கு இணையான காட்சிகள் உள்ளன. பல்கேரியாவின் இராணுவ தளத்தில் விவேக் ஓபராய் ஆந்நாட்டின் இராணுவ டாங்கை இயக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

சுசுகி ஜி.எஸ்.எக்ஸ் ஆர் 1000

சுசுகி ஜி.எஸ்.எக்ஸ் ஆர் 1000

டீசரின் இறுதியில் அஜித் ஒரு கோல்டன் கலரில் இருக்கக்கூடிய பைக்கை விறுவிறுவென ஓட்டி யாரையோ சுடுவார். அந்த காட்சியில் அஜித் பயன்படுத்தும் மாடல் சுசுகி ஜி.எஸ்.எக்ஸ் ஆர் 1000 மோட்டார் சைக்கிளாகும்.

காட்சிக்கு ஏற்றவாறு பைக்கும் அதிகளவிலான செயல்திறனுடன் இயக்கப்பட்டுள்ளது. சுசுகி ஜி.எஸ்.எக்ஸ் ஆர் 1000 பைக்கின் எஞ்சின் 999.8 சிசி திறன் கொண்டது. இதை ஒருவர் பயன்படுத்த அதிக கட்டுபாட்டு திறன் அவருக்குள் இருக்கவேண்டும்.

சுசுகி ஜி.எஸ். எக்ஸ் ஆர் 1000 பைக்கை வைத்து அஜித் நடித்த காட்சிகள் பலமுறை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஷாட்டிற்கும் அஜித் பைக்கை ஓட்டி நடித்தபோது, உயர் ரக மற்றும் அதிக திறன் கொண்ட பைக்குகளை இயக்குவதில் அவருக்கு உள்ள நுணுக்கமான ஆற்றலை பலரும் வியந்து பாராட்டியுள்ளனர்.

விவேகம் படத்தில் அஜித்தின்’சூப்பர்’ வாகனங்கள்

999.8 சிசி திறன் கொண்ட இந்த பைக், 202 பி.எச்.பி பவர் மற்றும் 117.6 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதில் 6 கியர்களை வேகத்திற்கு ஏற்றவாறு மாற்ற முடியும்.

பார்க்க ’ஹையபூஸா பைக்குள்’ போன்ற தோற்றம் கொடுத்தாலும், இந்த சுசுகி ஜி.எஸ்.எக்ஸ் ஆர் 1000 மோட்டார் சைக்கிளுக்கான காட்சிகள் அட்டகாசமாக எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.

விவேகம் படத்தில் அஜித்தின்’சூப்பர்’ வாகனங்கள்

மேலும், அதிக திறனுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஒரு பைக்கையும் அஜித் படத்தில் பயன்படுத்தியுள்ளார். இதுபோக ஆஃப் ரோடு பைக்கை வைத்து அஜித் செய்யும் சேஸிங் காட்சிகளும் படத்தில் உள்ளன.

சுசுகி நிறுவனத்தின் தயாரிப்பான ஆஃப் ரோடு டிராக்குகளுக்கான பைக்கை அஜித் அசாதரணமாக ஓட்டினராம். இந்த காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெறும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

விவேகம் படத்தில் அஜித்தின்’சூப்பர்’ வாகனங்கள்

பைக்குகள் மட்டுமில்லாமல், படத்தில் அஜித் பயன்படுத்தும் காரும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக உள்ளது. அது போர்சே மாடல் காராக இருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பைக்குகள் மற்றும் ஹெலிகாப்டர்களில் மட்டுமின்றி விவேகம் படத்தில் அஜித்தின் இந்த பிரத்யேக காருக்காகவும் சில சேஸிங் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன

அட்டகாசமான கதைக்களத்துடன், பிரமிக்க வைக்கும் வெளிநாட்டு லொக்‌ஷென்களில் உருவாக்கப்பட்டுள்ள விவேகம் திரைப்படம் அஜித்திற்கு ஆட்டோமொபைல் துறையில் இருக்கும் ஆர்வத்திற்கு செம தீனி போடும் வகையில் தயாராகியுள்ளது.

தமிழக ரசிகர்களை தாண்டி பல தரப்பு மக்களிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ’விவேகம்’ படம், வரும் ஆகஸ்டு மாதம் உலகளவில் வெளிவருகிறது.

மேலும்... #off beat #ஆஃப் பீட்
English summary
Ajith starter Vivegam makes a high expectation among Tamil Audiences. Here are the bikes and cars which used by Ajith in Vivegam...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark