துபாய் வெற்றியை தொடர்ந்து அடுத்த ரேஸ்க்கு ரெடியான அஜித்குமார்! இந்த முறை எந்த நாடு தெரியுமா?

துபாயில் சமீபத்தில் நடந்த 24 ஹெச் சீரீஸ் கார் பந்தய போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்று அவர் பங்கேற்ற பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அஜித் ரசிகர்கள் அவரை கொண்டாடி வரும் நிலையில், தற்போது அவர் அடுத்த பந்தயத்திற்காக தயாராகி வரும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த பந்தயம் குறித்த விபரங்களை நாம் இங்கே விரிவாக காணலாம் பாருங்கள்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் பைக் ரேஸ் பந்தயங்களில் ஆரம்ப காலம் முதல் தீவிரமாக ஆர்வம் காட்டி வந்தார். இதற்கு முன்னர் பல கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்ட இவர் இடைக்காலமாக சில காலம் கார் ரேஸ் பந்தயங்களில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.

Ajithkumar Car Race

இந்நிலையில் சமீபத்தில் இவர் தனக்கென புதிதாக அஜித்குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியை உருவாக்கினார். அந்த அணியை உருவாக்கி சர்வதேச அளவில் நடக்கும் கார் பந்தய போட்டிகளில் பங்கேற்பது என முடிவு செய்தார். அதன்படி முதல் போட்டியாக துபாயில் நடந்த 24 எச் சிரீஸ் கார் பந்தயப் போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் இவரது அணி பங்கேற்ற பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்து மிகப்பெரிய சாதனை படைத்தது.

இந்த போட்டி நடக்கும் போது இடையே பத்திரிக்கையாளர் ஒருவர் நடிகர் அஜித்குமாரை பேட்டி எடுத்தார். பேட்டி எடுக்கும்போது அவர் கார் பந்தய போட்டி குறித்த சில முக்கியமான முடிவுகளை எடுத்து இருப்பதாகவும், இனி தொடர்ந்து கார் ரேஸ் பந்தயங்களில் அதிகம் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறியிருந்தால் அது மட்டுமல்லாமல் தற்போது துபாயில் நடந்த கார் ரேஸ் தொடர்ந்து அடுத்ததாக அவர் பங்கு பெற திட்டமிட்டு வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள போட்டி குறித்த விபரங்களையும் வெளியிட்டுள்ளார்.

Ajithkumar Car Race

அதன்படி வரும் மார்ச் மாதம் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை இத்தாலியில் உள்ள முகேலோ என்ற கார் பந்தய டிராக்கில் நடக்கவுள்ள கார் ரேஸ் போட்டியில் இவர் பங்கு பெற திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை எல்லாம் அஜித் குமார் ரேஸிங் அணி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கார் பந்தய போட்டிக்காக அந்த அணியினர் தற்போது தயாராகி வருகிறார்கள்.

இத்தாலி நாட்டில் உள்ள முகேலோ என்ற ரேஸ் டிராக்கில் மிக்சிலின் முகேலோ என்ற கார் பந்தத்தை போட்டி நடக்கிறது. இது ஒரு 12 ஹெச் சீரீஸ் புதிய போட்டியாக இருக்கிறது. தற்போது துபாயில் நடந்தது 24 ஹெச் சீரீஸ் போட்டியாக நடந்தது. துபாய் நடந்த போட்டிகளில் 24 மணி நேரமும் கார் பந்தயம் நடந்து கொண்டிருக்கும். அதில் தொடர்ந்து அதில் பங்கேற்கும் அணிகள் கார் ஓட்ட வேண்டும்.

Ajithkumar Car Race

ஆனால் இத்தாலியில் நடக்க உள்ளது 12 ஹெச் சிரீஸ்க்கு 12 மணி நேரம் மட்டுமே கார் பந்தயம் நடக்கும். இந்த போட்டிக்கு தகுந்தார் போல் யுக்திகள் எல்லாம் மாற்றப்படும். இந்த போட்டி ஜிடி மற்றும் டூர் கார்களுக்கான என்டியூரன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியாக நடக்க உள்ளது. இந்த போட்டியில் அஜித்குமார் கலந்து கொள்ளப் போகிறாரா இல்லையா என்ற தகவல் பின்னர் தான் வெளியிடப்படும். தற்போது கலந்து கொள்வதற்கான முயற்சிகள் மட்டுமே நடந்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா முழுவதும் நடிகர் அஜித்குமார் கார் பந்தயம் போட்டியில் வெற்றி பெற்ற சம்பவம் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இவர் அடுத்த போட்டிக்கு தயாராகி வருவதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது பலரை மகிழ்ச்சிக்கு உள்ளாகியது. தொடர்ந்து இவ்வாறு இது போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என இவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, January 13, 2025, 19:20 [IST]
English summary
Ajithkumar car race michelin 12h mugello italy start date details
மேலும்... #car race
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X