இவ்வளவு பெரிய ரயில் விபத்தில் ஒரு சின்ன கீரல் கூட இல்லாமல் பயணிகள் உயிர் தப்பியது எப்படி? இது தான் நடந்தது!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் நள்ளிரவு ஒரு மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்திற்கு உள்ளானது. இதில் இன்ஜின் உட்பட நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகளோ, படுகாயங்களோ எதுவும் இல்லை. இந்த விபத்து எப்படி நடந்தது? விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படாமல் பயணிகள் தப்பியது எப்படி? உள்ளிட்ட விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

குஜராத் மாநிலம் சபர்மதி முதல் டெல்லி ஆக்ரா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று கிளம்பியது. இந்த ரயில் நள்ளிரவு ஒரு மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள அஜ்மீர் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி மாதர் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. ரயில் மாதர் ரயில் நிலையம் அருகே செல்லும்போது எதிர்பாராத விதமாக ரயிலின் இன்ஜின் உட்பட முன் பகுதியில் உள்ள நான்கு பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.

ajmer train accident

இது மிகப்பெரிய ரயில் விபத்தாக மாறியது. அதிர்ஷ்டவசமாக ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்ததால் ரயில் தடம் புரண்ட காரணத்தால் ரயிலில் உள்ளே இருந்த பயணிகளுக்கு எந்த விதமான பெரிய அளவிலான பாதிப்புகளும் ஏற்படவில்லை. இதுவரை எந்தவிதமான உயிரிழப்புகளோ, படுகாயங்களோ இல்லாமல் பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.

தற்போது விபத்தில் சிக்கிய ரயிலை மீட்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மேலும் சம்பவம் நடந்தவுடன் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சிறு சிறு காயம் அடைந்த பயணிகளுக்கு உடனடியாக முதலுதவிகள் எல்லாம் அளிக்கப்பட்டது.

ajmer train accident

இந்த ரயில் விபத்து காரணமாக அந்த பகுதி வழியாக அடுத்தடுத்து பயணிக்க வேண்டிய 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது வடமேற்கு ரயில்வே நிர்வாகம் இந்த ரயில் விபத்து எப்படி நடந்தது என விசாரணை நடத்தி வருகிறது. நள்ளிரவு ஒரு மணிக்கு இந்த விபத்து நடந்ததால் இதுவரை என்ன காரணத்தினால் இந்த ரயில் தடம் புரண்டது என்ற உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் ரயில் விபத்து நடந்த சம்பவத்தை வைத்து பார்க்கும் போது ரயில் இன்ஜின் முதல் அடுத்து உள்ள நான்கு பெட்டிகள் விபத்தில் சிக்கி உள்ளதால், ரயில் பயணித்த தண்டவாளத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயிலின் தண்டவாளத்தின் குறுக்கே பெரிய கல் அல்லது தடுப்பு ஏதாவது வைத்து இருந்தால், இப்படியாக ரயில் தடம் புரள வாய்ப்புள்ளது.

ரயில் தண்டவாளத்தில் ஏதாவது சேதம் ஏற்பட்டிருந்தாலும், இப்படியாக ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்க வாய்ப்புகள் உள்ளன. எது சரியான காரணம் என்று தெரியவில்லை. நிச்சயம் ரயில் முன்னே ஏதாவது கற்கள் அல்லது கனமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தால் அது சதி வேலையாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. ரயில் தண்டவாளம் பிரச்சனை இருந்தால் அதில் சதிவேலை நடந்திருக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. முறையான பராமரிப்பு இல்லாததன் காரணமாகவும் இந்த விபத்து நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ரயில் மாதர் ரயில் நிலையம் அருகே வரும்போது மிக மெதுவாக வந்ததால் இந்த விபத்து ஏற்படும் போது அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்பது குறைவாக இருக்கிறது. ரயில் வேகமாக பயணித்து இருந்தால் ஒட்டுமொத்த ரயிலும் தடம் புரண்டு இருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ரயில் மெதுவாக வந்ததால் தடம் புரண்டதால் ஏற்பட்ட பாதிப்பு பெரிய அளவில் உள்ளே இருந்த பயணிகளுக்கு கடத்தப்படவில்லை.

இந்த ரயிலில் உள்ள ரயில் பெட்டிகள் எல்லாம் குறைந்த எடை கொண்ட எல்எச்பி ரக ரயில் பெட்டிகள் என்பதால் பாதிப்பு அதிகம் இருந்தது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தற்போது ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் இதற்கான சரியான காரணத்தை கண்டுபிடித்து, இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில் சேவை என்பது மிக முக்கியமான சேவையாக பார்க்கப்படுகிறது. ரயில் பயணம் என்பது மிக பாதுகாப்பான பயணமாக இருக்க வேண்டும் ரயில் பயணங்களில் விபத்துக்கள் ஏற்பட்டால் பல நூறு உயிர்கள் வழியாக வாய்ப்புகள் உள்ளன. இதனால் ரயில்வே நிர்வாகம் இது போன்ற பிழைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த உயிரிழப்புகளும் இதுவரை இல்லை.

More from DriveSpark

Article Published On: Monday, March 18, 2024, 13:20 [IST]
English summary
Ajmer train accident four coaches derail reason details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+