1 கோடி ரூபா ஆடம்பர காரை வாங்கிய விஷால் பட நடிகை! கார் வாங்க வந்தாங்களா இல்ல விளம்பரம் தேடிக்க வந்தாங்களா!

'கார் வாங்க வந்தாங்களா இல்ல விளம்பரம் தேடிக்க வந்தாங்களா' என கேட்கும் அளவிற்கு ஓர் நடிகை, கார் ஷோரூமிற்கே வந்து ஆடம்பர காரை டெலிவரி பெற்றுச் சென்று உள்ளார். பாலிவுட் திரை உலகைச் சேர்ந்தவர் ஆகன்ஷா புரி. இவர் முன்னணி மாடலாகவும் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இவருக்கே விளம்பர வீடியோவிற்கு இணையாக ஆடம்பர காரை டெலிவரி வழங்கி இருக்கின்றது 'கார் ஹோல்-சேல் பஸார்' எனும் ஷோரூம் நிர்வாகம். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

ஒட்டுமொத்த ஷோரூமையும் திருவிழா கோலமாக்கும் வகையில் கார் டெலிவரி சம்பவம் நிகழ்த்தப்பட்டு இருக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் பட்டாசுகளின் தீப் பொறி பறக்க, பல அடுக்குகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கேக்கை வெட்டி அவருக்கு அந்த காரை டெலிவரி செய்திருக்கின்றனர்.

Akanksha puri purchases new land rover defender

குறிப்பாக, நடிகை அணிந்திருந்த உடை ஷோரூம் ஸ்டாஃப் மற்றும் பலரை மனம் மயக்கும் வகையில் இருந்தது. நடிகை ஆகன்ஷா புரி வாங்கி இருப்பது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) கார் மாடல் ஆகும். இது ஓர் ஆடம்பர அம்சங்களை அதிகம் தாங்கிய எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலையே சமீபத்தில் 'கப்பல்' பட நாயகி சோனம் பஜ்வா சமீபத்தில் வாங்கினார்.

இந்த நிகழ்வின் அதிர்வலைகள் ஓய்வதற்குள்ளாகவே தற்போது மற்றுமொரு நடிகையாக ஆகன்ஷா புரி லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் மாடலை வாங்கி உள்ளார். இவர்கள் மட்டுமல்ல இன்னும் பல திரையுலக நட்சத்திரங்கள் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், நம் மாநில முதலமைச்சர் முக ஸ்டாலின்கூட இந்த ஆடம்பர காரையே பயன்படுத்தி வருகின்றார்.

பள்ளம், மேடுகள் தெரியாமல், குறிப்பாக அதிர்வுகள் இல்லா பயணத்தை மேற்கொள்ள இந்த கார் உகந்த ஒன்றாக உள்ளது. இதனால்தான் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் தேர்வாக இந்த கார் மாடல் உள்ளது. இந்த நிலையிலேயே டிஃபெண்டர் காரை பயன்படுத்தி வரும் பணக்காரர்களின் வரிசையில் தானும் ஒருவராக ஆகன்ஷா புரி இணைந்திருக்கின்றார்.

இவர் வாங்கி இருப்பது சேடின் சில்வர் நிறம் கொண்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டர் ஆகும். இந்த காருடன் அவர் ஃபோட்டோ ஷூட்டே எடுக்கத் தொடங்கிவிட்டார் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த படங்களும் இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் நான்கு விதமான மாடல்களாக விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Akanksha puri with land rover defender

டிஃபெண்டர் 90 (Defender 90), டிஃபெண்டர் 110 (Defender 110), டிஃபெண்டர் 130 (Defender 130) மற்றும் டிஃபெண்டர் ஆக்டா (Defender OCTA) ஆகியவையே அவை ஆகும். இதில் டிஃபெண்டர் ஆக்டா என்பது சமீபத்திய அறிமுகமாக உள்ளது. இதன் விலைகள்கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதில் ஆகன்ஷா வாங்கி இருப்பது டிஃபெண்டர் 110 மாடல் என தெரிகின்றது. இதன் ஆரம்ப விலையே ரூ. 1.03 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. இவ்வளவு அதிக விலைக் கொண்ட காரையே நடிகை தற்போது வாங்கி இருக்கின்றார்.

Akanksha puri poses with newly purchased land rover defender

இவர் முதன் முதலில் தமிழ் படத்தின் வாயிலாகவே இந்திய திரையுலகிற்கே அறிமுகமானார் என்பது கவனிக்கத்தகுந்தது. நடிகர்கள் கார்த்தி மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியாகிய 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் ஒரு குட்டி ரோலில் இவர் நடித்திருப்பார். இதுவே அவரின் முதல் படம் ஆகும். இதேபோல், நடிகர் விஷாலின் 'ஆக்சன்' படத்திலும் இவர் 'கைரா' எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். மேலும், இந்தி பிக்பாஸ் சீசன் 2-லும் இவர் பங்குப்பெற்றிருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பணக்காரர்கள் மற்றும் திரை நட்சத்திரங்களின் பிரியமான கார் மாடலாக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் அறியப்படுகின்றது. இதையே ஆகன்ஷா-வும் இந்த காரை வாங்கி உறுதிப்படுத்தி இருக்கின்றார். இந்த கார் அவருக்கு சமீபத்தில் கூடுதலாக அந்தஸ்த்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 3, 2025, 14:37 [IST]
English summary
Akanksha puri expands her luxury car collection with new land rover defender
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X