டிவில-தான் முதல்ல வந்தாங்க இப்ப ஆளே மாறிட்டாங்க... அவங்க வாங்கியிருக்க காரே சாட்சி! இவ்ளோ காஸ்ட்லியான காரா!!
பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த பெரும்பாலானோர் மிகப் பெரிய கார் காதலர்களாக உள்ளனர். இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் சம்பவமே தற்போது அரங்கேறி இருக்கின்றது. நடிகை ஆகன்ஷா ரஞ்ஜன் கபூர், இந்தியாவின் மிக மிக விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல்களில் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கியா இவி6 (Kia EV6) இந்த காரையே அவர் வாங்கி இருக்கின்றார். இது ஓர் கிராஸோவர் (Crossover) ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.
இந்த கார் மாடலின் ஒற்றை யூனிட் மட்டுமே 60.96 லட்ச ரூபாக்கு இந்தியாவில் விற்கப்படுகின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலின் உயர்நிலை தேர்வு ரூ. 65.96 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இத்தகைய காஸ்ட்லியான காரையே ஆகன்ஷா ரஞ்ஜன் கபூர் தற்போது வாங்கி இருக்கின்றார். சின்ன திரையில் தோன்றி தற்போது வெள்ளி திரையில் கால் தடம் பதித்திருக்கக் கூடிய ஓர் நடிகைதான் ஆகன்ஷா ரஞ்ஜன் கபூர். இவர் இதுவரை மூன்று படங்களில் மட்டுமே நடித்திருக்கின்றார். இரண்டு இந்தி படங்களிலும், ஒற்றை தெலுங்கு திரைப்படத்திலும் அவர் நடித்திருக்கின்றார்.
மாயா ஒன் எனும் இன்னும் திரைக்கு வராத படத்திலேயே அவர் நடித்திருக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவுற்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. விரைவிலேயே அது திரையிடப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே அவர் விலை உயர்ந்த கியா இவி6 எலெக்ட்ரிக் காரை வாங்கி ஒட்டுமொத்த திரை உலகையும் அவர் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றார்.
வெள்ளை நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட இவி6-யையே அவர் வாங்கி இருக்கின்றார். மிகவும் கவர்ச்சியான மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலே கியா இவி6 ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் இரண்டு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஜிடி லைன் மற்றும் ஜிடி லைன் ஏடபிள்யூ ஆகியைவே அவை ஆகும்.
மேலும், இந்த காரில் ஓர் முழு சார்ஜில் 708 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த அதிகபட்ச ரேஞ்ஜ் திறனுக்காக 77.4 kWh பேட்டரி பேக்கே கியா இவி6 மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதன் வாயிலாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் வெறும் 18 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை இதில் ஏற்றிக் கொள்ள முடியும். மேலும், இந்த காரில் அதிக திறனை வெளியேற்றக் கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரே கியா இவி6 பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
வெறும் 5.2 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்ட மோட்டாரே இதில் வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்திலும் இந்த கார் நம்மை மிரள செய்யும் வகையிலேயே உள்ளது.
அந்தவகையில், 31.24அங்குல வளைவான டிரைவர் திரை, 31.24அங்குல தொடுதிரை நேவிகேஷன் சிஸ்டம், அடாஸ் (ADAS), 8ஏர்பேக்குகள், ஹெட்-அப் திரை, 14ஸ்பீக்கர்கள் கொண்ட மெரிடியன் பிரீமியம் சவுண்டு சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய அதிக வசதிகளைத் தாங்கிய சூப்பரான எலெக்ட்ரிக் காரையே நடிகை தற்போது வாங்கி இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமான முயற்சிகள் மிக பலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதால் பல்வேறு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய பங்களிப்பை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வழங்கும் விதமாக நடிகை ஆகன்ஷா கியா இவி6 காரை வாங்கி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








