அப்பாவுக்கு தப்பாம பொறந்திருக்காரு.. அடுத்தவங்களுக்கு பயந்தே இந்த காரை வாங்கிட்டாரு.. சுட்ருவாங்களோன்ற பயம்!
அப்பாவுக்கு தப்பாம பிறந்திருக்காரு ஆகாஷ் அம்பானி. இந்தியாவின் பெரும் செல்வந்தரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி. இந்த குடும்பத்தினரிடத்தில் இல்லாத கார்களே இருக்க முடியாது. அனைத்துமே விலை உயர்ந்த ஆடம்பர கார் மாடல்கள் ஆகும். மேலும், விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கே அதிக எண்ணிக்கையில் இவர்கள் கார்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆடம்பர கார்கள் மட்டுமல்ல அதீத பாதுகாப்பை வழங்கக் கூடிய கார் மாடல்களும் இந்த குடும்பத்தினரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன. அந்தவகையில், துப்பாக்கி, வெடிகுண்டு போன்ற மிகவும் பயங்கரமான ஆயுதங்களின் தாக்குதலைத் தாங்கக் கூடிய கார்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.
இந்த கார்களிலேயே முகேஷ் அம்பானி தன்னுடைய பயணங்களை மேற்கொண்டு வருகின்றார். இந்த மாதிரியான சூழலிலேயே அப்பாவை போலவே ஆகாஷ் அம்பானியும் தற்போது மிக அதீத பாதுகாப்பை வழங்கும் கார் ஒன்றின் பயன்பாட்டிற்கு மாறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரும்பு கவசத்தைப் போல பாதுகாப்பு தரக் கூடிய கார் ஒன்றையே அவர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்680 குவார்ட் (Mercedes Bnez S680 Guard) கார் மாடலையே ஆகாஷ் அம்பானி வாங்கி இருக்கின்றார். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 15 கோடி ஆகும். துப்பாக்கிச் சூடு, வெடி குண்டு தாக்குதல் என அனைத்தையும் தாங்கும் திறன் கொண்ட கார் மாடலே இதுவாகும்.
இந்த காரை அவருடைய அப்பாவும் பயன்படுத்தி வருகின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே தன்னுடைய பயன்பாட்டிற்கும் ஆகாஷ் அம்பானி அதீத பாதுகாப்பை வழங்கும் காரை அவர் வாங்கியிருக்கின்றார். எதிரிகளுக்கு பயந்தே இந்த காரை அவர் வாங்கி இருக்கின்றார். தொழில் ரீதியான போட்டி காரணமாக இந்த குடும்பத்தினருக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் நிலவி வருகின்றது.
இந்த காரணங்களினாலேயே இந்த குடும்பம் வெளியில் செல்லும்போதெல்லாம் பாதுகாப்பு படைசூழ வெளியே தலைகாட்டுகின்றனர். இசட் பிளஸ் பாதுகாப்பு இந்த குடும்பத்துக்கு வழங்கப்படுகின்றது. இதுபோதாது என்றே அம்பானி குடும்பத்தினர் வெளியே செல்லும் போதெல்லாம் மெர்சிடிஸ் பென்ஸ எஸ்680 குவார்டு போன்ற உயர் ரக பாதுகாப்பை வழங்கக் கூடிய காரை பயன்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் மும்பையில் இருந்து பெங்களூருவிற்கு புடவை எடுக்க வந்த முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானிகூடி இந்த காரையே பயன்படுத்தினார் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே ஆகாஷ் அம்பானியும் இந்த கார் மாடலின் புத்தம் புதிய யூனிட்டைப் பயன்படுத்தி வருவது தெரிய வந்திருக்கின்றது.
சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அவர் கலந்துக் கொண்ட போதே இந்த காரில் அவர் காட்சி தந்திருக்கின்றார். இந்த நிகழ்ச்சியில் முன்னணி திரை நட்சத்திரங்கள் பலர் கலந்துக் கொண்டனர் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரின் கண்ணாடி, பாடி பேனல் என எதையும் குண்டுகளால் மற்றும் தோட்டாக்களால் எதுவும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.
3.5 அல்லது 4 அங்குல புல்லட்டாக இருந்தாலும் காரை அதனால் துளைக்க முடியாது. இதேபோல், மிகப் பெரிய வெடிகுண்டு விபத்து நிகழ்ந்தாலும் காருக்கு எதுவும் ஆகாது. இதேபோல், விஷ வாயு தாக்குதல் மற்றும் தீ விபத்து போன்றவற்றில் இருந்து இது பயணிகளைப் பாதுகாக்கும். மேலும், பஞ்சரே ஆனாலும், பல கிமீட்டருக்கு மணிக்கு 80 கிமீ வேகத்தில் இயங்கும். இதுமாதிரியான பல்வேறு பாதுகாப்பு வசதிகளைத் தாங்கிய காரிலேயே அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி வலம் வந்திருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கின்ற காரணத்தினாலேயே முகேஷ் அம்பானி குடும்பத்தினர் அதிக பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய கார்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாதிரியான கார் அவர்களிடத்தில் ஏதோ ஒன்று இரண்டு அல்ல ஐந்திற்கும் அதிகமாக அவரிடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








