கொஞ்சம் அழுத்துனா எதிர்ல போறவன் எல்லாம் காலி! அம்பானி மகன் ஓட்டி வந்த கார் இவ்வளவு காஸ்ட்லியா?
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி சமீபத்தில் ரூ10.5 கோடி மதிப்பிலான ஒரு எஸ்யூவி காரில் பயணம் செய்து வந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த காரை சாலையில் காண்பதே அரிதான விஷயமாக இருக்கிறது. இந்த கார் பலரது கனவு காராக இருக்கிறது. அவ்வளவு காஸ்ட்லியான கார் என்றால் அதில் என்னலாம் இருக்கும்? இந்த காரை தயாரிக்கும் நிறுவனம் எது? விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
சொகுசு கார்கள், சூப்பர் கார்கள் என்று வந்துவிட்டால் இந்தியாவில் அம்பானி குடும்பத்தை விலக்கி வைக்க முடியாது என சொல்லலாம். அந்த அளவிற்கு அனைத்து காஸ்ட்லியான கார் பிராண்டின் கார்களையும் இந்த குடும்பத்தினர் பயன்படுத்தி வருகிறார்கள். பல தருணங்களில் இவர்கள் பயணம் செய்து வரும் காரோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வரும். அப்படியாக தான் தற்போது அம்பானி மகன் பயணம் செய்து வந்த கார் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அகாஷ் அம்பானி சமீபத்தில் தனது ஃபெராரி புரோசாங்யூ என்ற காரில் வலம் வந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. வெகு சிலரிடம் மட்டுமே இந்த கார் இருக்கிறது. அதில் அம்பானி குடும்பமும் ஒன்று. இந்த காரில் அவர் வலம் வருவதை பலர் வேடிக்கை பார்த்தனர். இந்த கார் குறித்து பலர் ஆச்சரியமாக பேசி வருகின்றனர். இந்த கார் குறித்த விபரங்களை காணலாம்.
இந்த வீடியோவில் ஆகாஷ் அம்பானியே இந்த காரை ஓட்டி வருகிறார். அவரது பாதுகாப்பிற்காக எம்ஜி குளோஸ்ட் மறுஅறம் ரேஞ்ச் ரோவர் ஆகிய எஸ்யூவி கார்களில் பாதுகாவலர்கள் உடன் வருகிறார். இவர் தனது ஃபெராரி காரில் வரும் போது முன்பக்க ஹெட்லைட்டை ஆன் செய்தபடி வலம் வந்தார். இந்த கார் உலகில் சிறப்பான ஃபெர்பார்மென்ஸை வழங்கும் கார்களில் ஒன்றாக இருக்கிறது.

ஆகாஷ் அம்பானி ஓட்டி வந்த ஃபெராரி புரோசாங்யூ காரில் வி12 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சிறப்பான பெர்ஃபார்மென்ஸை வழங்கும் என்றாலும் இவர் இந்த காரை மெதுவாக தான் ஓட்டி சென்றார். இந்த கார் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் விற்பனைக்கு வந்தது. இந்தியாவில் இந்த கார் ரூ10.5 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்த காரின் வடிவமைப்பை பொருத்தவரை
ஃபொராரி நிறுவனத்தின் சிக்னேச்சர் ஸ்டைல் அப்படியே இருகு்கிறது. பெரிய பானட் வழங்கப்பட்டுள்ளது. இது போ ஸ்லோப்பிங் ரூஃப் ரெயில்கள், ஏரோ டைனமிக் பாடி, ஏரோ ஃபிரிட்ஜ் வடிவமைப்பு என ஃபெராரி எஃப்12 பெர்லினிட்டா காரின் வடிவமைப்பை போல தான் இந்த காரும் இருக்கிறது. இந்த காரின் பின்புறம் எலெக்ட்ரிக் ஹிங்குடு டோர் இருக்கிறது. இது தான் இந்த காரின் ஹைலைட்.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 6.5 லிட்டர் வி12 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 725 எச்பி பவரையும் 716 என்எம் டார்க் திறனையுள் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதனால் இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.3 நொடியில் பிக்கப் செய்யும் தறின் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் அதிகபட்சமாக 310 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.
இந்த இன்ஜினின் 80 சதவீதமான டார்க் 2100 ஆர்பிஎம்மில் இன்ஜின் இயங்கும்போதே கிடைத்துவிடும். உச்சபட்ச டார்க் 8250 ஆர்பிஎம்மில் இயங்கும் போது கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஆல்வீல்டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் கிரிப் மற்றும் ஃபெர்பார்மென்ஸ் சிறப்பாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அம்பானிகுடும்பத்திடம் இதே மாடலில் மொத்தம் 2 கார்கள் உள்ளன. இது ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வில் காணப்பட்டது. ஃபெராரி புரோசாங்யூ காரை பொருத்தவரை மார்கெட்டில் லாம்போர்கினி உரூஸ் காருக்கு நேரடி போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்த கார் குறித்த உங்கள் விபரங்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









