உச்சகட்ட பாதுகாப்புடன் புல்லட் ப்ரூஃப் கார்ல வந்தது அவரா! சினிமா மாரி செக்யூரிட்டிக்கு பின்னால ஏகப்பட்ட வண்டி!

உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani). இதன் காரணமாக முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன. எனவே முகேஷ் அம்பானி குடும்பத்தினர் எங்கு பயணம் செய்தாலும், உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது. முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரே நேரத்தில் ஒரே இடத்திற்கு சென்றாலும் கூட, சில சமயங்களில் தனித்தனி கார்களில்தான் பயணம் செய்வார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. அத்துடன் அவர்கள் பயணம் செய்வது பெரும்பாலும் புல்லட் ப்ரூஃப் கார்களாகதான் (Bullet Proof Cars) இருக்கும்.

அத்துடன் அவர்கள் பயணம் செய்யும் கார்களை பின்தொடர்ந்து பாதுகாப்பிற்காக ஏராளமான கார்கள் வரும். உண்மையில் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் பயணம், சினிமா காட்சிகளை விஞ்சும் வகையில் பிரம்மாண்டமானதாக இருக்கும். கடந்த காலங்களில் இத்தகைய பிரம்மிப்பூட்டும் வீடியோக்கள் பலவற்றை நாம் பார்த்துள்ளோம்.

Akash Ambani Spotted In Bullet Proof Luxury Car

இந்த வரிசையில் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி (Akash Ambani), புல்லட் ப்ரூஃப் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Range Rover Autobiography) காரில் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், புல்லட் ப்ரூஃப் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரின் முன் இருக்கையில், ஆகாஷ் அம்பானி அமர்ந்திருப்பதை நம்மால் காண முடிகிறது. பின் இருக்கையில் ஆலியா பட் (Alia Bhatt) மற்றும் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) ஆகிய இருவரும் அமர்ந்துள்ளனர்.

Bullet Proof Range Rover

பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பட் - ரன்பீர் கபூர் கணவன், மனைவி ஆவர். அத்துடன் இவர்கள் இருவரும் ஆகாஷ் அம்பானியின் நெருங்கிய நண்பர்களாக அறியப்படுகின்றனர். எனவே இவர்கள் இருவரையும் அடிக்கடி ஆகாஷ் அம்பானியுடன் காண முடியும். நெருங்கிய நண்பர்களான இவர்கள் மூவரும் ஒரே காரில் பயணம் செய்தபோதுதான், தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைரல் வீடியோவில், புல்லட் ப்ரூஃப் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரை, லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் (Lexus LM 350h) மற்றும் வேறு சில பாதுகாப்பு வாகனங்கள் பின் தொடர்ந்து வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அத்துடன் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களையும் நாம் காணலாம்.

இந்த வைரல் வீடியோவில் நாம் காணும் புல்லட் ப்ரூஃப் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் புதியது கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இது கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் பழைய கார். அதாவது இது 2017ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட கார் ஆகும். இருப்பினும் அதிக பாதுகாப்பு வசதிகளை கொண்டது என்பதால், ஆகாஷ் அம்பானி பயன்படுத்தி வருகிறார்.

சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரில், 394 பிஹெச்பி பவர் மற்றும் 550 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் பழைய கார் என்றாலும் கூட, ஏராளமான சொகுசு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இதில், மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள், 3 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 19 ஸ்பீக்கர் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: முகேஷ் அம்பானி குடும்பத்தினர் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால், அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன. எனவே முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் உச்சகட்ட பாதுகாப்புடன், புல்லட் ப்ரூஃப் கார்களில் பயணம் செய்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றுதான் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Friday, March 28, 2025, 13:02 [IST]
English summary
Akash ambani ranbir kapoor alia bhatt spotted together in bullet proof luxury car viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+