முன்னாலும் பின்னாலும் பயங்கர பாதுகாப்பு! ஃபெராரி காரில் சாலையை கிழித்துக் கொண்டு சென்ற தொழிலதிபர் மகன்!

ஆகாஷ் அம்பானி (Akash Ambani), இந்தியாவை சேர்ந்த உலகின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) மூத்த மகன். தந்தையின் பல நிறுவனங்களை நடத்திவரும் ஆகாஷ் அம்பானி, ஒரு ஆட்டோமொபைல் (Automobile) பிரியர் ஆவார். குறிப்பாக, விலையுயர்ந்த கார்களை ஓட்டி பார்ப்பதில் ஆர்வமிக்கவராக உள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு கூட, மும்பையில் நிகழ்ச்சி ஒன்றை முடித்துக் கொண்ட பிறகு வெள்ளை நிறத்திலான மிகவும் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார் ஒன்றை மனைவி மற்றும் சகோதரியை அமர வைத்து தொழிலதிபர் ஆகாஷ் அம்பானி ஓட்டியது கவனத்தை ஈர்த்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது.

akash ambani s ferrari purosangue

அதனை தொடர்ந்து தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில், முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி தனது விலையுயர்ந்த போர்ஷே புரோசாங்குவே (Porsche Purosangue) காரில் கெத்தாக முன் இருக்கையில் அமர்ந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆகாஷ் அம்பானியிடம் சிவப்பு நிறத்திலான போர்ஷே புரோசாங்குவே கார் இருப்பதை ஏற்கனவே சிலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம்.

அந்த போர்ஷே காரின் மதிப்பு ஏறக்குறைய ரூ.10.5 கோடி என கூறப்படுகிறது. அந்த சிவப்பு நிறத்திலான போர்ஷே புரோசாங்குவே காரில் தான் தற்போது ஆகாஷ் அம்பானி காட்சி தந்துள்ளார். இதுதொடர்பான வீடியோவில், ஆகாஷ் அம்பானியின் போர்ஷே காருக்கு இரு புறங்களிலும் பாதுகாப்புக்காக கருப்பு நிறத்திலான இரு டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார்கள் செல்வதை காணலாம்.

akash ambani s ferrari purosangue

போர்ஷே புரோசாங்குவே காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், நம் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள ஃபெராரி கார்களின் எண்ணிக்கையே முதலில் சற்று குறைவாகும். ஏனெனில், அந்த அளவிற்கு பல கோடி ரூபாய்கள் விலை கொண்டவை ஆக ஃபெராரி கார்கள் விளங்குகின்றன. இதனாலேயே, ஃபெராரி கார்களை சாலையில் காண்பது அரிதாக உள்ளது.

ஃபெராரி காரை நீங்கள் சாலையில் கண்டாலும், அது ஃபெராரி புரோசாங்குவே காராக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவாகும். ஏனெனில், ஃபெராரி கார்களிலேயே விலைமிக்கதாக புரோசாங்குவே விளங்குகிறது. பணம் அதிகம் வைத்திருந்தாலும், புரோசாங்குவே காரை ஆர்டர் கொடுத்து அதனை டெலிவிரி (Delivery) எடுப்பதற்குள் பல மாதங்களாகி விடும். இப்படிப்பட்ட அரிதான காரை தான் தொழிலதிபர் ஆகாஷ் அம்பானி வைத்துள்ளார்.

இத்தாலிய கார் நிறுவனமாக ஃபெராரி உருவாக்கிய முதல் எஸ்யூவி (SUV) ரக கார், புரோசாங்குவே ஆகும். லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்தின் முதல் எஸ்யூவி காரான உருஸ் (Urus)க்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால், அந்த அளவிற்கு புரோசாங்குவே காரை இந்திய மக்கள் கண்டுக்கொள்வது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த ஃபெராரி ஸ்போர்ட்ஸ் காரில் 6.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி12 என்ஜின் பொருத்தப்படுகிறது. 8-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படும் இந்த ஆற்றல்மிக்க வி12 என்ஜின் ஆனது சுமார் 715எச்பி மற்றும் 716என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 2033 கிலோ எடை மட்டுமே கொண்ட புரோசாங்குவேயில் பூஜ்ஜியத்தில் இருந்து 100km/h வேகத்தை வெறும் 3.3 வினாடிகளில் எட்டிவிடலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.10 கோடி என்பது கூட இந்த ஃபெராரி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஆன்-ரோடு விலை இன்னும் சில கோடி ரூபாய்கள் அதிகமாக போகும். ஆனால், 10 ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வைத்திருக்கும் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு இவ்வளவு கொண்ட ஃபெராரி புரோசாங்குவே காரை வாங்குவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. புரோசாங்குவே உள்பட இந்தியாவில் ஆறு விதமான ஃபெராரி கார்கள் தற்சமயம் விற்பனையில் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 16, 2025, 15:55 [IST]
English summary
Akash ambani rides in ferrari purosangue car with security of fortuner cars
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+