முகேஷ் அம்பானியோட மானமே போச்சு.. சமூக வலைதளம்-செய்தினு எல்லாத்துலையும் ஆகாஷ் அம்பானிய வச்சு செய்றாங்க!

போக்குவரத்து விதிமீறல்களால் அரங்கேறும் வாகன விபத்துகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்தியாவிற்கு இது தற்போது மிகப் பெரிய தலைவலியாக மாறியிருக்கின்றது. விபத்தோடு முடிந்துவிட்டால் பரவாயில்லை, அதிக உயிர் பலிகளையும் வாகன விபத்துகள் வாங்கிக் கொண்டிருக்கின்றன. எனவேதான், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணிவது தொடங்கி காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது வரை என பல்வேறு விதிகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. மேலும், இந்த போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து போக்குவரத்து காவலர்கள் தீவிரக் கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளையில், இதுபோன்று இன்னும் பல்வேறு போக்குவரத்து விதிகள் கட்டாயமாக்கப்பட்டு, அவைகுறித்து தீவிர கண்கானிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இதனை பெரும்பாலான வாகன ஓட்டிகள் காதில் வாங்கிக் கொள்வதும் இல்லை, கடைப்பிடிப்பதும் இல்லை. இந்த மாதிரியான வாகன ஓட்டிகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Akash ambani spotted without seatbelt in ferrari

Source: modern._.carspotter அபராதம் போன்ற கடுமையான நடவடிக்கையையே காவல்துறை எடுத்து வருகின்றது. அதேவேளையில், போக்குவரத்து விதிமீறலின் தன்மையைப் பொருத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்தமாதிரியான சூழ்நிலையிலேயே முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர் சமீபத்தில் சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்துள்ளார். இதுகுறித்து வீடியோவே தற்போது வெளியாகி அவரை சர்ச்சையில் சிக்க வைத்திருக்கின்றது. முகேஷ் அம்பானி குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகப் பெரிய சொகுசு கார் விரும்பிகளாக உள்ளனர். இவர்களின் 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள அண்டிலிய ஆடம்பர இல்லத்தில் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் கார்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

அந்தவகையில், அவர்களிடத்தில் இருக்கும் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்றாக ஃபெர்ராரி புரோசாங் இருக்கின்றது. இந்த காரை மிக சமீபத்திலேயே அம்பானி குடும்பத்தினர் வாங்கினர் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், ஃபெர்ராரி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட முதல் எஸ்யூவி ரக கார் மாடலும் இதுவே ஆகும்.

இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டே ரூ. 10.5 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இத்தகைய அதிக விலைக் காரணத்தினால் மிக சொற்ப எண்ணிக்கையிலேயே இந்த கார் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய அரிய வகை காரிலேயே ஆகாஷ் அம்பானி சீட் பெல்ட் அணியாமல் பயணித்திருக்கின்றார்.

இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் பெரும் பணக்காரரின் மகன் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு சிக்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆகாஷ் அம்பானியின் இந்த விதிமீறல் காரணமாக அவர் மீது நடவடிக்கை பாயுமா என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விரைவில் இதற்கான நடவடிக்கை அவர் மீது பாயும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணிப்பதற்கு ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான அபராத நடவடிக்கையே இப்போதைக்கு ஆகாஷ் அம்பானி மீது பாயும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃபெராரி புரோசாங் எஸ்யூவி காரில் 6.5 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சினே வழங்கப்பட்டு உள்ளது. இது அதிகபட்சமாக 725 பிஎஸ் மற்றும் 716 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்டது. நான்கு கதவுகள், ஐந்து இருக்கைகளை இந்த கார் கொண்டிருக்கும். இதில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும். ஐந்து பேர் அமர்ந்தாலும் போதுமான இட வசதி இருக்கும் என கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: போலீஸார் இதுமாதிரியான சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு பலருக்கு அபராதத்தை வழங்கி இருக்கின்றனர். அந்தவகையில் பெரும் தலைவர்களுக்கே அபராத செல்லாணை போலீஸார் அனுப்பி வைத்திருக்கின்றனர். எனவே விரைவில் ஆகாஷ் அம்பானிக்கு அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 20, 2024, 5:00 [IST]
English summary
Akash ambani spotted in rare ferrari suv without seatbelt
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+