அந்த நடிகர் வீட்டுக்கு திடீர்னு வந்த அம்பானியின் மகன்.. அவரு ஓட்டி வந்த காருதான் இங்க ஹைலைட்டே!

முன்னணி நடிகரை சந்திக்க உலகின் மிக மிக உயரிய விலைக் கொண்ட காரில் கெத்தாக வந்த அம்பானி வீட்டைச் சேர்ந்த முக்கி நபரின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. கூடுதல் விபரங்களைக் காணலாம், வாங்க.

இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி இருக்கின்றார். இவர் மிகப் பெரிய வாகன பிரியர் ஆவார். இவர் மட்டுமில்லைங்க அம்பானி குடும்பத்தினர் பலர் வாகன வெறியர் (காதலர்)-களாக இருக்கின்றனர். இந்த குடும்பத்தினரிடத்தில் இல்லாத காரே இல்லை என கூறும் அளவிற்கு மிகப் பெரிய மற்றும் தீவிர வாகன காதலர்களாக அம்பானி குடும்பத்தினர் ஒவ்வொருவரும் உள்ளனர்.

Akash ambani took lamborghini urus car

அதேபோல், அவர்களிடத்தில் இருக்கும் ஒவ்வொரு கார்களும் பல கோடி ரூபாய் விலையைக் கொண்டவையாக இருக்கின்றன. செல்லப் போனால் அவருடைய கான்வாயில் பயன்படுத்தப்படும் கார்களே பல லட்ச ரூபாய் விலைக் கொண்டவையாக இருக்கின்றன. மேலும், பலரின் கற்பனைக்கு எட்டாத விலைக் கொண்ட கார்களும் அம்பானி குடும்பத்தினரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன.

அந்த மாதிரியான மிக மிக உயரிய விலைக் கொண்ட காரிலேயே அம்பானியின் குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர், பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த ஓர் முன்னணி நட்சத்திரத்தின் வீட்டிற்கு வந்துச் சென்றிருக்கின்றார். ஆகாஷ் அம்பானியே அவர் ஆவார். இவர் ரன்பீர் கபூரையே சமீபத்தில் அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துவிட்டு திரும்பி இருக்கின்றார்.

Akash ambani took lamborghini urus car

இவரைச் சந்திக்க அவர் லம்போர்கினி உருஸ் சூப்பர் எஸ்யூவி ரக காரையே பயன்படுத்தி இருக்கின்றார். இந்த ஒற்றை காரின் மதிப்பு மட்டுமே ரூ. 4.18 கோடி ஆகும். இதன் டாப் தேர்வு ரூ. 4.22 கோடி வரை விற்கப்படுகின்றது. அனைத்து எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

இத்தகைய பிரமாண்ட விலைக் கொண்ட காரிலேயே வந்து பாலிவுட் திரை உலகின் முன்னணி நட்சத்திரத்தை ஆகாஷ் அம்பானி சந்தித்து இருக்கின்றார். இந்த காரின் விலை மட்டும் இல்லைங்க, அதன் எஞ்ஜின் திறனும் உங்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்யும். இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

Akash ambani took lamborghini urus car

இது 650 பிஎச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. அதுமட்டுமில்லைங்க, இதனால் வெறும் 3.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத் திறனை எட்ட முடியுமாம். அதேவேளையில், இதனால் உச்சபட்சமாக மணிக்கு 305 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும்.

இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் இந்த கார் செல்லும் என்பதனாலேயே உலகின் மிக சிறந்த மற்றும் அதிக வேகத்தில் பயணிக்கும் எஸ்யூவி ரக காராக லம்போர்கினி உருஸ் இருக்கின்றது. இந்த காருக்கு இந்தியாவில் ஃபேன் பட்டாளம் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. கோலிவுட் திரை உலகைச் சேர்ந்த சிலர்கூட இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர்.

Akash ambani took lamborghini urus car

ரஜினியின் மகள், ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டோர் இந்த காரை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களைப் போலவே இன்னும் பல செல்வந்தர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் இந்த காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய காரே அம்பானி குடும்பத்தினரிடத்திலும் பயன்பாட்டில் இருக்கின்றது.

அதேவேளையில் இந்த காரில் ஆகாஷ் அம்பானி காட்சியளிப்பது இதுவே முதல் முறையாகும். இவர்களிடத்தில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கல்லினன், கோஸ்ட், பென்ட்லீ கான்டினென்டல், பென்டேகா, கடிலாக் எஸ்கலேட் என ஏகப்பட்ட பிராண்டுகளின் கார்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர, ஃபெர்ராரி, லேண்ட் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, டெஸ்லா மற்றும் அஸ்டன் மார்ட்டின் போன்ற பிராண்டுகளின் கார்களும் பயன்பாட்டில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆகாஷ் அம்பானி, நடிகர் ரன்பீர் கபூரை ஏன் சந்தித்தார் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. இருவரும் நட்பு ரீதியாக சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் இருவரின் சந்திப்பைக் காட்டிலும், சந்திப்பின்போது ஆகாஷ் அம்பானி பயன்படுத்திய காரே தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது.

Article Published On: Tuesday, October 17, 2023, 19:04 [IST]
English summary
Akash ambani took lamborghini urus car to visit actor ranbir kapoor
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+