அம்பானி குடும்பத்தில் புதிய வாரிசு!! வீட்டிற்கு வருவதே செம்ம காஸ்ட்லீயான மெர்சிடிஸ் காரில்தான்... வீடியோ வைரல்
பெரும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, பிறந்து சில நாட்களே ஆன தனது பெண் குழந்தையை மெர்சிடிஸ் மேபக் எஸ்580 (Mercedes Maybach S580) என்ற விலையுயர்ந்த லக்சரி காரில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அம்பானி குடும்பத்தின் இந்த புதிய வாரிசை பற்றியும், இந்த லக்சரி மேபக் காரை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
கடந்த 2023 ஜனவரியில் நடைபெற்ற முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சந்த் திருமணத்தால் மொத்த மும்பையும் சில வாரங்களுக்கு அதிர்ந்து போனது. செல்வங்கள் மிகுந்த அம்பானியின் குடும்பத்தில் நடைபெறவுள்ள இந்த திருமணத்தை பற்றி நீங்கள் கூட கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் நாம் இந்த செய்தியில் பார்க்க போவது, முகேஷ் அம்பானியின் மூத்த மகனின் வீட்டில் நடந்துள்ள சந்தோஷமான விஷயத்தை பற்றி.

அம்பானி குடும்பத்தின் மூத்த இளவரசரான ஆகாஷ் அம்பானி - ஷ்லோகா மெஹ்தா தம்பதியினருக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், ஆகாஷ் அம்பானி தனது குடும்பத்தின் புதிய வரவை மருத்துவமனையில் இருந்து மெர்சிடிஸ் பிராண்டின் புத்தம் புதிய மேபக் எஸ்580 லக்சரி காரில் வீட்டிற்கு அழைத்துவரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்திய சந்தையில் சமீபத்தில்தான் அறிமுகமான புதிய மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 காரில் ஆகாஷ் அம்பானி காட்சி தருவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. ஆகையால் அம்பானி குடும்பத்தின் கேரேஜில் இணைந்துள்ள மற்றுமொரு மேபக் காராக இது பார்க்கப்படுகிறது. ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனம் தனது கார்களை 3 விதமான பிரிவுகளில் விற்பனை செய்கிறது. பென்ஸ், ஏஎம்ஜி மற்றும் மேபக் என்பவை அவை ஆகும்.

பென்ஸ் பிரிவு மெர்சிடிஸ் கார்களை பரவலாக எல்லாரும் பார்த்திருப்பீர்கள். அதாவது நீங்கள் வழக்கமாக சாலையில் பார்ப்பவைகளில் பெரும்பாலானவை பென்ஸ் பிரிவை சேர்ந்தவையே. ஏஎம்ஜி பிரிவு கார்கள் ஆற்றல்மிக்க என்ஜின் & சஸ்பென்ஷன் செட்-அப் உடன் செயல்படுதிறன் மிக்கவைகளாக இருக்கும். அதுவே மேபக் கார்கள் உயர் தரத்தில் லக்சரியான கேபின் போன்றவற்றை கொண்டவை. மேபக் கார்களிலும் ஏஎம்ஜி வெர்சன்கள் உள்ளன.
ஆகாஷ் அம்பானியின், ஏறக்குறைய ரூ.3 கோடி மதிப்பிலான இந்த மேபக் கார் மும்பையில் உள்ள அவரது வீட்டின் அருகே அடையாள காணப்பட்டுள்ளது. அம்பானி குடும்பத்தின் இந்த புதிய மஹாலட்சுமியை படம் பிடிப்பதற்காகவே ஆகாஷ் அம்பானியின் வீட்டிற்கு முன்பாக பலர் கேமிராக்களையும், தங்களது மொபைல் போனையும் பிடித்தவாறு இருப்பதை கீழே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

ஆகாஷ் அம்பானியின் புதிய மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 காருக்கு பாதுகாப்பாக முன்னாலும், பின்னாலும் பாதுகாப்பு வாகனங்கள் செல்கின்றன. அந்த பாதுகாப்பு வாகனங்களுள் லம்போர்கினி உருஸ் காரும் ஒன்று. ஆகாஷ் அம்பானியின் இந்த மேபக் கார் நாடிக் நீலம் மற்றும் ஹை டெக் சில்வர் என டபுள் நிறங்களில் காட்சியளிக்கிறது. அம்பானி குடும்பத்தில் 2வது மேபக் காராக மெர்சிடிஸ்-மேபக் எஸ்560 கார் கடந்த 2021ஆம் ஆண்டில்தான் டெலிவிரி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பென்ஸ் கார்களே பொதுவாக லக்சரி தரத்திலானவை எனும்போது, மேபக் கார்கள் அவற்றை விடவும் விலைமிக்கவை. இத்தகைய கார்களை அம்பானி குடும்பம் போன்ற செல்வம் செழிப்பான குடும்பத்தினரால் மட்டுமே வாங்க முடியும். மேபக் காரை சாலையில் காண்பதே அரிது, அதிலிலும் இவ்வாறான இரட்டை-டோனில் பெயிண்ட் செய்யப்பட்ட மேபக் காரை பார்ப்பது அரிதினும் அரிது.


Click it and Unblock the Notifications









