அடுத்த ஜென்மத்தில் ஆவது அம்பானி குடும்பத்தில் பிறக்கனும்! விருந்தாளியை அழைத்துவர கூட ரோல்ஸ்-ராய்ஸ் கார்!!
ஆகாஷ் அம்பானி (Akash Ambani), பிரபல இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன். சமீபத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கலந்துக் கொண்டதை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த நிலையில், ஆகாஷ் அம்பானியின் புதிய விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார் ஒன்று மும்பை சாலைகளில் காட்சி தந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
இந்தியாவின் பெரும் பணக்கார குடும்பமான முகேஷ் அம்பானியின் குடும்பத்தில் உள்ள விலையுயர்ந்த கார்களை பற்றி நான் கூற வேண்டியதில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு பல்வேறு பிராண்ட்களில் சொகுசு கார்கள் அவர்களிடத்தில் உள்ளது. குறிப்பாக, ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் மட்டும் 20 உள்ளன. அவற்றை நிறுத்தி வைப்பதற்காகவே மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் வீட்டில் தனியாக ஒரு தளம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்த 20 ரோல்ஸ்-ராய்ஸ் கார்களில் பாண்டோம், கல்லீனன் மற்றும் கோஸ்ட் கார்கள் அடங்குகின்றன. குறிப்பாக, ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் எஸ்யூவி கார்கள் மட்டும் 10க்கும் மேற்பட்டவை முகேஷ் அம்பானியின் குடும்பத்தில் உள்ளன. சமீபத்தில் கூட கல்லீனன் பிளாக் பேட்ஜ் எடிசன் கார் ஒன்றை இந்த குடும்பத்தினர் வாங்கி இருந்தனர்.
ஆனால், தற்போது ஆகாஷ் அம்பானி பயணம் செய்திருப்பது ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் (Ghost) காரில் ஆகும். இது, கோஸ்ட் காரின் நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் வேரியண்ட் ஆகும். இதன் விலை ரூ.12 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இந்த குறிப்பிட்ட கருப்பு நிற ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் காரை அம்பானி குடும்பத்தில் இதற்குமுன் பார்த்ததில்லை. ஆகையால், இதனை இவர்கள் சமீபத்தில்தான் வாங்கியிருக்க வேண்டும்.

இது ஆகாஷ் அம்பானியின் ரோல்ஸ்-ராய்ஸ் காராக இருப்பினும், இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், காரினுள் அவர் இல்லை. ஒரு பிரபல அமெரிக்க மனிதரை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வருவதற்காக இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் கார் ஓர் லக்சரியான டாக்ஸி போன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த அமெரிக்க பிரபலம் வேறு யாருமில்லை... பிரபல யூடியூப்பர் லோகன் பால் (Logan Paul) ஆவார்.
யூடியூப்பில் சுமார் 2.3 கோடிக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை வைத்திருக்கும் லோகன் பால், பிரைம் ஹைட்ரேஷன் என்கிற நிறுவனத்தையும் கவனித்து வருகிறார். தற்போது இந்தியா வந்துள்ள இவர் மும்பையில் வசிக்கும் ஆகாஷ் அம்பானியை சந்தித்துள்ளார். இதற்காக மும்பை சர்வதேச விமான நிலையத்திறகு வந்த லோகன் பாலை அங்கிருந்து சாண்டாக்ரூஸ் பகுதியில் உள்ள 81 க்றிஸ்ட் என்கிற அலுவலக கட்டிட பகுதிக்கு அழைத்து செல்லவே இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
லோகன் பாலுடன் அவரது பாதுகாவலர்களும் அமெரிக்காவில் இருந்து உடன் வந்திருப்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது. ஏற்கனவே கூறியதுபோல், ஆகாஷ் அம்பானியிடம் உள்ள இது ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் காரின் எக்ஸ்டெண்டட் வீல்பேஸ் வேரியண்ட் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை என்னமோ ரூ.7.95 கோடி தான். ஆனால், ஆன்-ரோடு விலை இன்னும் சில கோடிகள் அதிகமாக வந்துவிடும்.
அதுமட்டுமின்றி, பொதுவாகவே ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வாங்குபவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப காரை கஸ்டமைஸ் செய்த பின்னரே வாங்குகின்றனர். மேலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரூ.7.95 விலை ஆனது கோஸ்ட் காரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டின் விலை ஆகும். ஆகாஷ் அம்பானியிடம் இந்த கோஸ்ட் எக்ஸ்டென்டட் வீல்பேஸ் கார் மட்டுமின்றி, வெள்ளை நிறத்திலான கோஸ்ட் காரும் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆகாஷ் அம்பானி காரினுள் இல்லாத பின்பும் இது முகேஷ் அம்பானி குடும்பத்தை சேர்ந்த கார் என்பதை காரின் '9999' நம்பர் பிளேட்டை பார்த்தாலே எளிதாக கண்டுப்பிடித்துவிட முடிகிறது. வீட்டிற்கு வரும் விருந்தாளியை அழைத்து வருவதற்கு கூட ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் காரா? என நெட்டிசன்கள் அனைவரும் ஆச்சிரியத்தில் திகைத்து நிற்கின்றனர்.


Click it and Unblock the Notifications








